''தமிழக அரசியல் களத்தில் தேடும் நிலையில் அதிமுக உள்ளது'': பாஜக விமர்சனம்

சென்னை: தமிழக அரசியல் களத்தில் தேடும் நிலையில் அதிமுக இருப்பதாக பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் விமர்சித்துள்ளார். மதுரை மாநகர் மாவட்ட பாஜக சார்பில், பாஜக அலுவலகத்தில் சக்தி கேந்திரா, பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் மகா. சுசீந்திரன் தலைமை வகித்தார். இதில், மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் பங்கேற்று ஆலோசனை வழங்கி பேசியதாவது: ”தமிழ்நாட்டில் எதிர்கட்சிகள் மிரளும் வகையில் பாஜக அசுர வளர்ச்சியடைந்துள்ளது. திமுக … Read more

மதுரையில் தக்காளி விலை கிலோ ரூ.50-ஐ தொட்டது: தொடரும் மழையால் மீண்டும் விறுவிறு விலை உயர்வு

மதுரை: மதுரையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ ரூ.50ஐ தொட்டது. தக்காளி விலை கடந்த சில மாதங்களுக்கு முன் கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையானது. கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பயிரிட்ட தக்காளிகள் மழையால் அழிந்ததே இதற்கு காரணம் என சொல்லப்பட்டது. அதன்பிறகு வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவு தக்காளி கொண்டு வரப்பட்டும், உள்ளூர் தக்காளி விற்பனைக்கு வந்ததை அடுத்தும் விலை குறையத் தொடங்கியது. கடந்த ஒரு வாரத்திற்கு முன் அதிகப்பட்சம் … Read more

5 பேருக்கு மறுவாழ்வு அளித்த மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவர்

மதுரை: விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் மூலம் 5 பேர் மறுவாழ்வு அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் பரத்குமார் (19). வீரபாண்டி சவுராஷ்ரா கல்லூரியில் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர், உத்தமபாளையம் அனுமந்தம்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானார். இதில், தலையில் பலத்த காயம் அடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல் … Read more

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் திருக்கார்த்திகை தேரோட்டம்: வடம்பிடித்து இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று திருக்கார்த்திகையை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர். அதனைத்தொடர்ந்து இன்று மாலையில் மலைமேல் மகா தீபம் ஏற்றப்படுவதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றத்திற்கு வருகைதந்த வண்ணம் உள்ளனர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நவ.18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் … Read more

5 கால்களுடன் பிறந்த கன்றுக்குட்டி – கள்ளக்குறிச்சியில் அதிசயம்

கள்ளக்குறிச்சி அருகே 5 கால்களுடன் கன்றுக்குட்டி பிறந்துள்ளது. 5வது கால் முதுகில் இருக்கிறது.   

அரசமைப்புச் சட்ட நாளில் நமது அரசமைப்புச் சட்டத்தின் நிலைத்த மதிநுட்பத்தைப் போற்றுவோம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “அண்ணல் அம்பேத்கருக்குச் சிலை வடிவிலான புகழ்வணக்கம் என்பது வெறும் நினைவுகூர்தல் அல்ல, அது அவர் வகுத்தளித்த நீதி, சமத்துவம் மற்றும் மக்களாட்சி மாண்புகளின் மீது நாம் கொண்டுள்ள பற்றுறுதியின் அடையாளச்சின்னம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உச்சநீதிமன்ற வளாகத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சிலை திறக்கப்படும். இந்தச் சிறப்புமிகு அரசமைப்புச் சட்ட நாளில், நமது அரசமைப்புச் சட்டத்தின் நிலைத்த மதிநுட்பத்தைப் போற்றுவோம். … Read more

தேசிய கல்வி கொள்கையை திமுக அரசு எதிர்க்கவில்லை, கடிதத்தை காட்டவா – மத்திய இணை அமைச்சர்

தமிழ்நாடு அரசு தேசிய கல்வி கொள்கையை எதிர்க்கவில்லை, அதில் சில மாறுதல்களை தான் கேட்டுள்ளனர் என மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சார்கர் தெரிவித்துள்ளார்.   

''காவிரி நீர் இல்லாததால் நெல் கொள்முதல் 3 லட்சம் டன் குறைந்துள்ளது'': அண்ணாமலை குற்றச்சாட்டு

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் காவிரி நீர் வரத்து இல்லாததால், நெல் கொள்முதல் 3 லட்சம் டன் குறைந்துவிட்டது என பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தமிழகம் முழுவதும் “என் மண் என் மக்கள் நடைப்பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை தஞ்சாவூர் மாவட்டத்துக்கு இன்று (நவ.26) காலை வந்தார். திருவையாறு தொகுதிக்கு உட்பட்ட நடுக்காவிரியில் நடைப்பயணத்தை தொடங்கிய அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர், நவம்பர் 8-ம் தேதி வரை 8.25 … Read more

டெட்ரா பேக்கில் மது விற்றால் போராட்டம்: அன்புமணி, ஜி.கே.வாசன் எச்சரிக்கை

டெட்ரா பேக் மதுவை விற்பனைக்கு கொண்டு வந்தால் போராட்டம் நடத்தப்படும் என்றுபாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அன்புமணி: தமிழகத்தில் மதுவகைகளை கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்கப்படுவதற்கு மாற்றாக, காகிதக் குடுவைகளில் அடைத்து (டெட்ரா பேக்) விற்கப்பட உள்ளதாகவும், அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருக்கிறார். இது தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்படுவதை தாமதப்படுத்தும் நடவடிக்கையாகும். உடலுக்கு … Read more

சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் அதிகரிப்பு

சென்னை: பயணிகள் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவும் இரண்டு வழித்தடங்களிலும் நெரிசல் மிகு நேரங்கள் இல்லாது மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (நவ.27) முதல் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மெட்ரோ ரயில்களில் அலுவலக நேரம் அல்லாத மற்ற நேரங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக … Read more