செந்தில் பாலாஜிக்கு டிச.4 வரை நீதிமன்ற காவல்: 11-வது முறையாக நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 11-வது முறையாக டிச.4 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14-ல் கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் … Read more

நீரிழிவு நோயின் தலைமையிடமாக இந்தியா உருவாகும் ஆபத்து: எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை. துணைவேந்தர் எச்சரிக்கை

சென்னை: நீரிழிவு நோய் வேகமாக அதிகரித்து வருகிறது. சில ஆண்டுகளில் நோயின் தலைமையிடமாக இந்தியா விளங்கும் என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.நாராயணசாமி தெரிவித்தார். உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் “உலகளவில் மனித நலனைப் பேணுகின்ற வகையில், நீரிழிவு நோயை தடுப்பதற்கான பல்வேறு சிகிச்சை முறைகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மருத்துவர் கே.நாராயணசாமி தலைமையில் நடந்த … Read more

கனமழை | 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: கனமழை காரணமாக இன்று தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வரும் 26-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக … Read more

அந்தமானில் நவ.26-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்

சென்னை: அந்தமான் கடல் பகுதியில் வரும் 26-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, 27-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வரும் 26-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக … Read more

''தொல்லியலில் அதிக ஆர்வம் கொண்டவர் கருணாநிதி'' – அமைச்சர் தங்கம் தென்னரசு புகழாரம்

மதுரை: தமிழ் இலக்கியம் மட்டுமின்றி தொல்லியல் பரப்பிலும் அதிக ஆர்வம் கொண்டவர் கருணாநிதி என, காமராசர் பல்கலையில் நடந்த தொல்லியல் கருத்தரங்கு தொடக்க விழாவில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு புகழாரம் சூட்டியுள்ளார். கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, மதுரை காமராசர் பல்கலையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில், 2 நாள் தேசிய கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. இதில் ஆட்சியர் சங்கீதா தலைமை வகித்தார். மேலும், நிகழ்ச்சியில் துணை வேந்தர் ஜெ.குமார் வாழ்த்தி பேசினார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட … Read more

கடலில் விபத்தில் சிக்கும் மீனவர்களை மீட்க ஆம்புலன்ஸ் திட்டம் கொண்டு வரப்படுமா?

ராமேசுவரம்: கடலில் மீன்பிடி பணியின்போது ஏற்படும் விபத்துகளிலிருந்து மீனவர்களை காக்க, கடல் ஆம்புலன்ஸ் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மீனவர்களுக்கு கடலில் ஏற்படும் தொழில் சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, 40 நாட்டு மீனவப் பிரதிநிதிகள் 21.11.1997 டெல்லியில் கூடி விவாதித்தனர். அதில், உலக அளவில் இணைந்து, மீனவர் உரிமைக்கு குரல் கொடுத்துப் போராட, மீன்பிடித் தொழிலாளர்கள் பேரவை’ என்ற அமைப்பை உருவாக்கினர். இந்த மாநாட்டில், மீனவர்களுக்கு எதிராக அரசுகள் கொண்டு வரும் … Read more

சுபமுகூர்த்த தினம்: சார்பதிவாளர் அலுவலகங்களில்  நாளை பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு

சென்னை: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சுபமுகூர்த்த தினமான நாளை (நவ.23) பொதுமக்கள் பயன் பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் சுபமுகூர்த்த தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்வது வழக்கம். அந்த வகையில், சுபமுகூர்த்த தினமாக கருதப்படும் … Read more

மதுரையில் வைகை ஆறு ஸ்மார்ட் சிட்டி சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு – பாதியில் நிற்கும் நடவடிக்கை

மதுரை: வைகை ஆறு ஸ்மார்ட் சிட்டி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற மாநகராட்சி அதிகாரிகளை ஆக்கிரமிப்பாளர்கள் விரட்டியடித்ததால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனிடையே, அதிகாரிகளை விரட்டிய ஆக்கிரமிப்பாளர்கள் மீது போலீஸில் புகார் செய்ய மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வட மற்றும் தென்கரை மக்கள் தடையின்றி இரு நகரப் பகுதிகளுக்கும் வந்து செல்லும் வகையில் வைகை ஆற்றின் இரு கரைகளில் ‘ஸ்மார்ட் சிட்டி’ சாலை அமைக்கப்பட்டது. மாநகராட்சி … Read more