திருச்செந்தூர் கோயிலில் கட்டண உயர்வு இல்லை: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

சென்னை: திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால், சிறப்பு தரிசன கட்டணம் மட்டுமே ரூ.800-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மற்றபடி வேறு எந்த கட்டணமும் உயர்த்தப்படவில்லை என்று அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். திருச்செந்தூர் முருகன் கோயிலில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு தரிசன கட்டணம் பல மடங்கு உயர்ந்திருப்பதாகவும், சிறப்பு தரிசன கட்டணம் என பொதுமக்களிடம் ஆயிரம் ரூபாய் வசூலித்து, தரிசன சீட்டு கொடுக்காமல் சுவாமி தரிசனத்துக்கு … Read more

ODI WC Final | உலகக் கோப்பை இறுதிப்போட்டியைக் காண சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு

சென்னை: சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை மிகப்பெரிய எல்இடி திரையின் மூலம் ஒளிபரப்ப தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு அகமதாப்பாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ரோஹித் சர்மா தலைமையிலான … Read more

சமவெளிப் பகுதிகளை காட்டிலும் நீலகிரியில் பால் உள்ளிட்ட ஆவின் பொருட்களுக்கு கூடுதல் விலை!

உதகை: சமவெளிப் பகுதிகளை காட்டிலும் நீலகிரி மாவட்டத்தில் பால் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவது குறித்து அமைச்சரிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்காததால் பொதுமக்கள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டத்துக்கு அரிசி முதல் காய்கறி வரை, சிமென்ட் முதல் செங்கல் வரை அனைத்து பொருட்களும் சமவெளிப் பகுதிகளிலிருந்து தான் கொண்டுவரப்படுகின்றன. இதனால், அப்பொருட்களின் விலை நீலகிரி மாவட்டத்தில் கூடுதலாகவே விற்பனை செய்யப் படுகின்றன. இந்நிலையில், இதில் அத்தியாவசிய பொருளான பாலும் இணைந்திருக்கிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள நீலகிரி … Read more

இளைஞர்களுக்கு உயர்கல்வி கிடைக்கச் செய்தவர் தியாகராசர் கல்லூரி நிறுவனர்: நிர்மலா சீதாராமன் @ மதுரை

மதுரை: தனக்கு கிடைக்காத போதிலும், இளைஞர்களுக்கு உயர்கல்வி கிடைக்கச் செய்தவர் தியாகராசர் கல்லூரியின் நிறுவனர் தியாகராசர் என இக்கல்லூரியின் பவளவிழா குறித்த நூல் வெளியீட்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மதுரை தியாகராசர் கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு (75-ஆண்டு) கல்வியின் திறந்த கதவுகள் (தி டோர்ஸ் டு எஜூகேஷன்) என்ற நூல் வெளியீட்டு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இக்கல்லூரியின் செயலர் க.ஹரி.தியாகராசன் வரவேற்று பேசினார். விழாவில் மத்திய நிதி … Read more

நெற்கதிரை சுமந்தபடி கும்மனூர் தென்பெண்ணை ஆற்று நீரை கடக்கும் தொழிலாளர்கள் – பாலம் கட்டப்படுமா?

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கும்மனூர் கிராமத்தில் அறுவடையான நெற்கதிரின் கட்டை தலையில் சுமந்தபடி தென்பெண்ணை ஆற்று நீரை விவசாயத் தொழிலாளர்கள் கடந்து செல்லும் நிலையுள்ளது. இச்சிரமத்தைப் போக்க ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி அருகே திப்பனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது கும்மனூர் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளின் விளைநிலங்கள் தென்பெண்ணை ஆற்றின் மறுகரையை யொட்டியுள்ளது. இங்கு சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் ஆண்டு தோறும் இரு போகம் நெல் சாகுபடியில் … Read more

சிவகாசி | வீடுகளுக்கு வெளியே உள்ள மீட்டர்கள் சேதம்; தாமிரபரணி கூட்டு குடிநீர் பாதிக்கப்படும் அபாயம்

சிவகாசி: சிவகாசி, ராஜபாளையத்தில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் வீடுகளுக்கு வெளியே பொருத்தப்பட்ட மீட்டர்கள் சேதமடைந்து உள்ளதால் சீரான குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது. சிவகாசி மாநகராட்சியில் மானூர் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 34 லட்சம் லிட்டரும், வெம்பக்கோட்டை அணை மூலம் 21 லட்சம் லிட்டரும், நகராட்சியில் உள்ள 38,670 குடிநீர் இணைப்புகளுக்கு ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 60 லிட்டர் வீதம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலம் 28 … Read more

“உதயநிதியை முதல்வராக்கும் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது” – தருமபுரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

தருமபுரி: உதயநிதியை தமிழக முதல்வராக்கும் திட்டம் ஒருபோதும் நடக்காது என தருமபுரியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார். தருமபுரி மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல் இல்லத் திருமணம் மற்றும் 100 இணையருக்கு இலவச திருமணம் இன்று (நவ.19) தருமபுரி அடுத்த குண்டலப்பட்டியில் ஸ்ரீரங்கநாதன் ரஞ்சிதம் திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்வில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி திருமணங்களை நடத்தி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்:”இன்று நடந்த மணவிழாவில் மணம் முடித்துக் … Read more

விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் வாபஸ் ஒரு தற்காலிக சமாதான நடவடிக்கை: தமிழ் மாநில காங்கிரஸ் சாடல்

சென்னை: “தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது ஒரு தற்காலிக சமாதான உடன்படிக்கைதான். இது விவசாயிகளையும் தமிழக மக்களையும் ஏமாற்றும் செயலாகும்” என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சித்த தமிழக அரசை எதிர்த்து, அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது … Read more

ப்ளூ காய்ச்சல் அதிகரிப்பு, அரசு மருத்துவனையில் படுக்கைகள் இல்லை – விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் மற்றும் விராலிமலை ஆகிய பகுதிகளில் உள்ள திமுகவைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணையும் விழா காலாடி பட்டியில் நடைபெற்றது. திமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த நிர்வாகிகளுக்கு விஜயபாஸ்கர் பொன்னாடை போர்த்தி வரவேற்று அவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், திமுக மீது மக்கள் மத்தியில் அவர்களுக்கு … Read more

தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்கள்தான் என்பதை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்: முத்தரசன்  

சென்னை: இலங்கை கைது செய்துள்ள தமிழக மீனவர்கள் இந்திய நாட்டின் குடிமக்கள் தான் என்பதை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த இரண்டு மீன்பிடி படகுகளில் நாகபட்டினம் கோடியக்கரை பகுதியில் இருந்து தங்கு கடல் மீன் பிடிப்புக்காக கடந்த 15.11.2023 ஆம் தேதி மீனவர்கள் கடலுக்குள் சென்றுள்ளனர். இதில் … Read more