தமிழகத்தில் ஒரே கட்டமாகவே தேர்தல்: தலைமை தேர்தல் அலுவலர் விளக்கம்

பெரம்பலூர்: தமிழகம் அமைதியான மாநிலம் என்பதால்தான், எப்போதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது என்று தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹு கூறினார். பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹு தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் அமைதியான மாநிலம். எனவேதான், எப்போதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஒரு வாக்காளரின் பெயர் 2 … Read more

தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தில் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதா மீண்டும் நிறைவேற்றம்

சென்னை: ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட, பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டங்கள் தொடர்பான 10 மசோதாக்களும் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டன. தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல், பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்டத்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. இந்த மசோதாக்கள் ஒப்புதல் அளிக்கப்படாமல் நிலுவையில் இருந்தன. எனவே, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலநிர்ணயம் செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு நாடியது. இதற்கிடையே, 10 மசோதாக்களை நிறுத்தி வைப்பதாகக் குறிப்பிட்டு, … Read more

விசைப் படகுகளுக்கு வழங்கப்படும் அதிவேக டீசல் எரிஎண்ணெய் அளவை உயர்த்தி வழங்க அரசாணை வெளியீடு

சென்னை: மீனவளத்துறை செயலர் வெளியிட்ட அறிக்கை. தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி விசைப் படகுகளுக்கு வழங்கப்படும் வரிவிலக்களிக்கப்பட்ட அதிவேக டீசல் எரிஎண்ணெய் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே டீசல் எரிஎண்ணெய் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் மீன்பிடி தொழில் லாபகரமானதாக இல்லை என்பதால், தற்போது வழங்கப்பட்டு வரும் மானிய டீசல் எரிஎண்ணெய் அளவை உயர்த்தி வழங்க தமிழக அரசுக்கு பல்வேறு மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. இதையொட்டி கடந்த ஆக.18-ல் … Read more

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த ‘மிதிலி’ புயல், வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து, 17-ம் தேதி மாலை வங்கதேச கடற்கரை அருகில் கேப்புபாராவில் கரையை கடந்தது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்காரைக்கால் பகுதிகளில் … Read more

சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்த முதியவரை தூளி கட்டி சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற அவலம் @ தருமபுரி

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் சாலை வசதி இல்லாத மலை கிராமத்தில், பாம்பு கடித்த முதியவரை தூளி கட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பென்னாகரம் வட்டம் வட்டுவன அள்ளி ஊராட்சியில் அலகட்டு, ஏரிமலை, கோட்டூர் மலை ஆகிய மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களுக்கு இதுவரை போதிய சாலை வசதி ஏற்படுத்தப்படவில்லை. தனித்தனி மலை முகடுகளில் உள்ள இந்த கிராமங்களில் தலா 100 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த மலை கிராமங்களில் தொடக்கப் பள்ளி, மின்சாரம் ஆகிய இரு … Read more

“ஆடை வடிவமைப்பாளர்களே கலாச்சாரத் தூதர்கள்” – ஆளுநர் இல.கணேசன் பேச்சு

சென்னை: ஆடை வடிவமைப்பாளர்கள் கலாச்சாரத் தூதர்களாகவும், புதுமைகளை உருவாக்குபவர்களாகவும் திகழ்கிறார்கள் என தேசிய ஆடை வடிவமைப்புத் தொழில்நுட்ப நிறுவன பட்டமளிப்பு விழாவில் நாகாலாந்து ஆளுநர் இல கணேசன் தெரிவித்தார். சென்னையில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்புத் தொழில்நுட்ப நிறுவனமான நிஃப்ட்-டின் (NIFT) பட்டமளிப்பு விழா இன்று (18-11-2023) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி இல. கணேசன் உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “தேசிய ஆடை வடிவமைப்புத் தொழில் நுட்ப நிறுவனம் 1986-ம் … Read more

மேட்டூர் அணையில் பச்சை நிறமாக மாறிய தண்ணீர்: துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி

மேட்டூர்: மேட்டூர் அணையில் தண்ணீர் பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேட்டூர் அணை நீர்தேக்கம் 60 சதுர மைல் பரப்பளவு கொண்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை, கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது. அதன்படி, அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருந்ததால், நடப்பாண்டு ஜூன் 12ம் தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர், அணையின் நீர்மட்டம் … Read more

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு 10 சக்கர லாரிகளில் கனிமம் கொண்டு செல்ல மீண்டும் ஐகோர்ட் தடை

மதுரை: தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு 10 சக்கர லாரிகளில் கனிமம் கொண்டு செல்ல அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற அமர்வு தடை விதித்துள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த பினோய், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடக்கும் அரசு மற்றும் தனியார் பணிகளுக்கு கிராவல், ஜல்லிகற்கள், எம்.சாண்ட், குவாரி தூசி மற்றும் மணல் சப்ளை செய்யும் ஒப்பந்தம் பெற்றுள்ளோம். நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்கு … Read more