கண்டதேவி கோயிலில் ஜன.21-ல் புதிய தேர் வெள்ளோட்டம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் 

மதுரை: கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் ஜனவரி 21-ல் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெறும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் கண்டதேவியை சேர்ந்த மகா.சிதம்பரம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு: கண்டதேவியில் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் பழைய தேர் பழுதான நிலையில் புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. புதிய தேர் வெள்ளோட்டம் இன்னும் நடத்தப்படாமல் உள்ளது. தேர் வெள்ளோட்டம் நடத்தக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் 2019-ல் மனு தாக்கல் … Read more

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலவச வேட்டி, சேலை திருட்டு: நில அளவை கள உதவியாளர் முன்ஜாமீன் தள்ளுபடி

மதுரை: மதுரை ஆட்சியர் அலுவலக கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த இலவச வேட்டி, சேலைகள் திருடப்பட்ட வழக்கில் நில அளவை கள உதவியாளரின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலத்தில் தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் இலவச வேட்டி, சேலைகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த கருவூலத்தில் இருந்து நவ.7-ல் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 12500 வேட்டி சேலைகள் திருடப்பட்டன. இது தொடர்பாக தல்லாகுளம் போலீஸார் வழக்கு பதிவு … Read more

அரசு போக்குவரத்துக் கழக தற்காலிக ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: அரசு போக்குவரத்துக் கழக அனைத்து தற்காலிக ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் ஊதியம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை கோட்ட அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளர் ஏ.கனகசுந்தர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் 500 தற்காலிக ஓட்டுநர், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ஊதியத்தை விட … Read more

கோவையில் அலர்ட் | மாவோயிஸ்ட் ஊடுருவலை தடுக்க கேரள எல்லையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் கண்காணிப்பு

கோவை: மாவோயிஸ்ட் ஊடுருவலைத் தடுக்க தமிழக – கேரள எல்லையில் போலீஸார் தணிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். மாவோயிஸ்ட் நடமாட்டம் தடுப்பு தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். மாவோயிஸ்ட் நடமாட்டம்: கேரள மாநிலத்தில் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் அவ்வப்போது காணப்படுகிறது. அங்கு மாவோயிஸ்ட்களின் நடமாட்டத்தைத் தடுக்க, தண்டர்போல்டு எனப்படும் சிறப்புப்படை போலீஸார் வனப்பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தண்டர்போல்டு சிறப்புப் … Read more

செய்யாறு சிப்காட் விவகாரம்: 6 விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது தமிழக அரசு

சென்னை: செய்யாறு சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிரான போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 6 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டத்தில் முதற்கட்டமாக 645 ஹெக்டர் பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா துவங்கப்பட்டது. தற்போது, இதில் 13 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 27,432 நபர்கள் நேரடியாகவும், … Read more

முதலமைச்சர் தலையீடு… 6 விவசாயிகளின் குண்டாஸ் ரத்து – முழு விவரம்!

Farmers Goondas Removed: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அறிவுறுத்தலை அடுத்து திருவண்ணாமலையில் 6 விவசாயிகள் மீதான குண்டாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

செய்யாறு விவசாயிகள் மீதான நடவடிக்கையை நியாயப்படுத்துகிறாரா அமைச்சர் எ.வ.வேலு?

திருவண்ணாமலை: “தூண்டுதலின் பேரில் திட்டமிட்டு இந்த அரசு எந்தப் பணிகளையும் செய்துவிடக் கூடாது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வரக் கூடாது. பட்டதாரிகள் வேலைக்குச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக, விவசாய நிலங்களைப் பறிப்பதாக செய்யப்பட்டும் திட்டமிட்ட ஒரு பிரச்சாரம்தான் இந்தப் போராட்டங்கள். விவசாயிகளை வஞ்சிப்பதோ, விவசாய நிலங்களை அபகரிப்பதோ இந்த அரசாங்கத்தின் நோக்கம் அல்ல” என்று அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். திருவண்ணாமலையில் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: … Read more

“திமுக அரசுக்கு முருகர் பாடம் புகட்டுவார்” – திருச்செந்தூர் கட்டண உயர்வுக்கு இந்து முன்னணி எச்சரிக்கை

சென்னை: “மக்களின் கோரிக்கையை ஏற்று, திருச்செந்தூர் கோயிலில் கட்டண தரிசனத்தை ரத்து செய்யாமல் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது தமிழகத்தில் மக்கள் விரோத பாசிச ஆட்சி நடைபெற்று வருவதை தெளிவுபடுத்துகிறது. தமிழக அரசின் இந்த அடக்குமுறை ஆணவத்தை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது” என்று அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட ஆட்சியில் கோயிலை பொருட்காட்சி போல் ஆக்கி எங்கும் எதற்கும் கட்டணம் என பகல் கொள்ளையில் … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் மீதான நடவடிக்கை: அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில், அப்போதைய மாவட்ட ஆட்சியர், காவல் துறையை சேர்ந்த 17 பேர், வருவாய் துறையை சேர்ந்த 3 பேர் என 21 பேருக்கு எதிராக நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ல் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் … Read more

‘மதுரை வீரன் உண்மை வரலாறு’ புத்தக தடைக்கு எதிரான வழக்கில் மனுதாரர் விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ‘மதுரை வீரன் உண்மை வரலாறு’ என்ற புத்தகத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள ‘ரிட்’ வழக்கு விசாரணைக்கு உகந்ததா என விளக்கமளிக்க, புத்தகத்தின் ஆசிரியர் குழந்தை ராயப்பன் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘மதுரை வீரன் உண்மை வரலாறு’ என்ற புத்தகத்தை குழந்தை ராயப்பன் என்பவர் எழுதியிருக்கிறார். இந்த நூலை ஆதித் தமிழர் பேரவை என்ற அமைப்பு வெளியிட்டிருக்கிறது. ‘இந்தப் புத்தகத்தில் ஆட்சேபனைக்குரிய, திரித்து எழுதப்பட்ட தகவல்களைக் கொண்டதாக உள்ளது. பல சமூகத்தினரை விமர்சனம் … Read more