தமிழக செய்திகள்
“தமிழக காங்கிரஸ் தலைவராக விருப்பம்” – கார்த்தி சிதம்பரம் எம்.பி
காரைக்குடி: தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக விருப்பப்படுகிறேன் என கார்த்திக் சிதம்பரம் எம்பி தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மானகிரி பண்ணை வீட்டில் சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் நேற்று தனது 53-வது பிறந்த நாளை கட்சித் தொண்டர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ‘இண்டியா’ கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் காங்கிரஸ், திமுக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். மகாராஷ்டிரா, பிஹாரில் … Read more
நோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ள பொது விநியோக குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்: சுகாதாரத் துறை
சென்னை: நோய் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ள பொது விநியோககுடிநீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், தமிழகம் முழுவதும் டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்னும் 2 மாதங்களுக்கு காய்ச்சல்களின் பாதிப்புஅதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஏடிஸ் கொசுக்களின்உற்பத்தி அதிகரித்துள்ளதால், டெங்கு பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், பொது விநியோக தண்ணீரை பொதுமக்கள் … Read more
மருத்துவ கல்லூரிகளில் ஆதாருடன் பயோமெட்ரிக் வருகைப்பதிவு
சென்னை: மருத்துவக் கல்லூரிகளில் ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் வருகைப்பதிவு, மருத்துவப் பதிவேடு மற்றும் சிசிடிவி கேமரா பொருத்தும் நடவடிக்கைகளில் சந்தேகங்கள், உதவிகளுக்கு இமெயில் முகவரிகளை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. மருத்துவர்கள், மருத்துவப் பேராசிரியர்களின் வருகையைப் பதிவு செய்ய ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் முறையைக் கடைபிடிக்க தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியது. நோயாளிகளின் விவரங்கள் அடங்கிய மருத்துவப் பதிவேட்டைப் பராமரிக்க வேண்டும். குறிப்பிட்ட இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டது. மேலும், … Read more
தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: வங்கக் கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்றும், தமிழகத்தில் சில மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, விசாகப்பட்டினத்திலிருந்து 390 கி.மீ. தொலைவிலும், ஒடிசா மாநிலம் பாரதீப்பிலிருந்து 320 கி.மீ. … Read more
மதுரை மாநகராட்சியில் தெருவெல்லாம் தேங்கும் குப்பை: காம்பக்டர் வாகனங்கள் பற்றாக்குறை காரணமா?
மதுரை: மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் அன்றாடம் சேகரிக்கும் குப்பைகளை உரக்கிடங்குக்கு எடுத்து செல்லும் டம்பர் பிளேசர் லாரிகள், காம்பாக்டர் வாகனங்களுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால், மாநகராட்சியில் திரும்பிய பக்கமெல்லாம் தெருக்கள், சாலைகளில் குப்பைகள் தேக்கமடைந்துள்ளன. மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 20 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஒரு நாளைக்கு 800 மெட்ரிக் டன் குப்பைகள் சேருகின்றன. அதிகாலை காலையில் 5.30 மணி முதல் தூய்மைப்பணியாளர்கள் நகரில் சேரும் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியை தொடங்குகிறார்கள். முதற்கட்டமாக … Read more
தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
சென்னை: தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பு: மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை இணை செயலாளராக ரத்னா நியமனம். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைமை நிர்வாக அதிகாரியாக காயத்ரி கிருஷ்ணன் நியமனம். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய … Read more
கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய பயிற்சி மருத்துவர்களுக்கு கோவிட் பணிச்சான்று: சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றியவர்களுக்கு, அரசு மருத்துவர்கள் தேர்வில் வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்களைப் பெற பயிற்சி மருத்துவர்களுக்கும் உரிமை உள்ளது என உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அவர்களுக்கு “கோவிட் பணி” சான்று வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 1,021 மருத்துவர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் 2022, அக்டோபர் 11-ல் அறிவிப்பாணை வெளியிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், அரசு … Read more