சங்கரய்யா மறைவு: மதுரை மவுன ஊர்வலத்தில் பல்வேறு கட்சியினர் பங்கேற்பு

மதுரை: மறைந்த சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யா மறைவையொட்டி, மதுரையில் இன்று மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடந்த மவுன அஞ்சலி ஊர்வலத்தில் அனைத்துக்கட்சியினரும் பங்கேற்றனர். சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவருமான என்.சங்கரய்யா இன்று தனது 102 ஆவது வயதில் சென்னையில் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மதுரை மாநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள கட்டபொம்மன் சிலையிலிருந்து … Read more

செந்தில் பாலாஜி ஸ்டான்லியில் இருந்து ஓமந்தூராருக்கு மாற்றம் – என்ன காரணம்?

Senthil Balaji Hospitalized: சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நலக் குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

8 ஆண்டு சிறை, 3 ஆண்டு தலைமறைவு, எண்ணற்ற போராட்டம்… – யார் இந்த சங்கரய்யா?

சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 102. தமிழகத்துக்கு ஆற்றிய தொண்டினைப் போற்றும் விதமாக அவருக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மறைந்த சங்கரய்யாவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர் இந்நிலையில், ‘இந்து தமிழ் திசை’யில் மூத்த பத்திரிகையாளர் இரா.ஜவஹர் எழுதிய கட்டுரை இங்கே மறுபகிர்வாக… நாட்டின் சுதந்திரத்துக்காகவும், உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நல பாதிப்பு: ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அவரது கைது சட்டப்படியானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை 5 நாட்கள் காவலில் எடுத்து … Read more

“என்ன அவசரம்?” – ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கை நாளை விசாரிக்கிறது ஐகோர்ட்

சென்னை: அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நாளை (வியாழக்கிழமை) முதல் வழக்காக விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவதுமாக செயல்பட்டு … Read more

பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் ஜாமீன் கேட்டு மனு தாக்கல்.!

கொலை வழக்கில் ஜெயிலில் இருக்கும் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.  

வானிலை முன்னறிவிப்பு | தமிழக டெல்டா, கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்க வாய்ப்பு

சென்னை: “அடுத்த 24 மணி நேரத்துக்கு, டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்” என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு … Read more

புகழஞ்சலி – சங்கரய்யா | “தொழிலாளர்களின் உற்ற தோழனாக விளங்கியவர்”- இபிஎஸ்

சென்னை: மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா, நீண்ட காலம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி, தொழிலாளர்களின் உற்ற தோழனாக விளங்கியவர், என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தியாகி என்.சங்கரய்யா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு … Read more

மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: விடுதலைப் போராட்ட வீரராக, சட்டமன்ற உறுப்பினராக, அரசியல் கட்சித் தலைவராக சங்கரய்யா தமிழகத்துக்கு ஆற்றிய தொண்டினைப் போற்றும் விதமாக அவருக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்,என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: தகைசால் தமிழர், முதுபெரும் பொதுவுடைமைப் போராளி, விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா மறைந்த செய்தியால் துடிதுடித்துப் போனேன். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் விரைந்து நலம் பெற்று விடுவார் என்றே நம்பியிருந்த … Read more