டெண்டர் பிரச்சினையால் காலி கோணிப்பைகள் தேக்கம்: நியாயவிலைக் கடைகளில் இடப்பற்றாக்குறை

சென்னை: டெண்டர் பிரச்சினையால் நியாயவிலைக் கடைகளில் லட்சக்கணக்கில் காலி கோணிப்பைகள் தேங்கிஉள்ளன. கடைகளில் கோணிப்பைகள் இருப்பதால், அத்தியாவசியப் பொருட்களை இறக்க முடியாமல் விற்பனையாளர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் 2.24 கோடி குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள 39 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 34,793 நியாயவிலைக்கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. நியாயவிலைக்கடைகளை பொறுத்தவரை, பெரும்பாலும் அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் நியாயவிலைக்கடைகளில் … Read more

தஞ்சாவூர் மாநகராட்சியில் டெங்கு தடுப்பு பணி தீவிரம்: 300 வீடுகளுக்கு ஒரு களப் பணியாளர் குழு அமைப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியில் டெங்கு தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள களப் பணியாளர்கள், 300 வீடுகளுக்கு ஒரு குழு வீதம் பிரித்துக்கொண்டு செயல்படுகின்றனர். தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகளில் 54,234 வீடுகள் உள்ளன. தற்போது மழைக்காலமாக இருப் பதால் டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், தஞ்சாவூர் மாநகராட்சியில் கடந்த ஆண்டு தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட டெங்கு தடுப்பு களப் பணியாளர்களுக்கு தொடர்ந்து பணி வழங்கப்பட்டு, டெங்கு தடுப்புப் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தஞ்சாவூர் மாநகராட்சியின் … Read more

வைகை அணையிலிருந்து 10 நாட்களுக்கு பாசனத்துக்காக நீர் திறப்பு: தமிழக அரசு

சென்னை: நாளை (நவ.15) முதல் 10 நாட்களுக்கு வைகை அணையிலிருந்து பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான தமிழக அரசின் செய்தி குறிப்பு: பெரியாறு பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன பகுதிகளுக்கு 900 கன அடி வீதமும் மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன பகுதிகளுக்கு 230 கன அடி வீதம் தண்ணீரின் இருப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்தினைப் பொறுத்து குடிநீருக்காக வைகை … Read more

மழைக்கு உருக்குலைந்த மதுரை சாலைகள்: பள்ளங்களில் தெர்மாகோல், கம்புகளை வைத்து விசித்திர ஏற்பாடு

மதுரை: மதுரையில் மழைக்கு சாலைகள் உருக்குலைந்து மேடு, பள்ளங்களாகியுள்ளன. இதில் வாகன ஓட்டிகள், தடுமாறி சருக்கி விழுந்து கை, கால்களை முறித்து செல்லும் சம்பவங்களும் நடக்கின்றன. பள்ளங்களில் கம்புகளை நட்டும், தெர்மோகோல்களை போட்டும் விநோத முறையில் அடையாளப்படுத்தி வருகின்றனர். பாரம்பரிய கலாச்சாரங்கள் நிறைந்த ஆன்மிக சுற்றுலா நகரான மதுரையில் சாலைகள் பொதுவாகவே மோசமாகத் தான் உள்ளன. ஒரு நகரத்தின் சாலைகளே அதன் அடிப்படை வளர்ச்சிக்கு காரணமாக அமைகிறது. ஆனால், மதுரை நகர்பகுதி சாலைகள் குறுகலாகவும், பள்ளங்கள் நிறைந்தும் … Read more

கனமழை முன்னெச்சரிக்கை – சென்னையில் புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ.15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் ஏற்கெனவே புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நேற்று மாலை முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், … Read more

சாத்தூர் | அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் பெண் பயணி ஒருவர் உயிரிழப்பு: 10க்கும் மேற்பட்டோர் காயம்

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே சாலையோரத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் பெண் பயணி ஒருவர் உயிரிழந்தார். 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடபுரத்திலிருந்து சிவகாசி நோக்கி அரசுப் பேருந்து ஒன்று இன்று (நவம்பர் 14ம் தேதி) பிற்பகல் புறப்பட்டது. பேருந்தை, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பண்டிதநாதன்பட்டியைச் சேர்ந்த தங்கமணி என்பவர் ஓட்டிவந்தார். வெம்பக்கோட்டை அலமேலுமங்கைபுரம் அருகே வந்தபோது, மழையால் சாலையோரத்தில் சேறும் சகதியுமாக இருந்துள்ளது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த … Read more

கனமழை எச்சரிக்கை – கடலூர், மயிலாடுதுறை, நாகைக்கு அமைச்சர்களை அனுப்ப முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினார். அப்போது, கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்களை காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு கனமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான … Read more

தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?

TN Rain School Leave: தமிழகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.   

விடிய விடிய தொடர் மழை –  புதுவை, காரைக்காலில் புதன்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி: புதுச்சேரியில் விடிய, விடிய தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. தொடர் மழையால் குடியிருப்பு பகுதியில் தேங்கிய நீரை மோட்டார் மூலம் அகற்ற முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார். அதேபோல், தொடர் மழையால் புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் நேற்று இரவு முதல் பொழிய தொடங்கிய மழை விடிய விடிய தொடர்ந்து பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் வழக்கமாக பாதிக்கப்படும் ரெயின்போ … Read more

“கையிருப்பில் ரூ.240.99 கோடி மதிப்பிலான மருந்துகள்… வாருங்கள் ஆய்வு செய்வோம்” – இபிஎஸ்ஸுக்கு மா.சுப்பிரமணியன் பதிலடி

சென்னை: “தற்போது ரூ.240.99 கோடி மதிப்பிலான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. இதற்கு பிறகும் எடப்பாடி பழனிச்சாமிக்கு மருந்துகள் தட்டுப்பாடு இருக்கிறது என்ற சந்தேகம் இருக்குமேயானால் வாருங்கள், நானும் உடன் வருகிறேன், நேரடியாக சென்று ஆய்வு செய்வோம்” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் மருந்துகள் மற்றும் மருத்துவர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது என்கின்ற வகையில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு … Read more