தேர்தல் கூட்டணி குறித்த தேமுதிக நிலைப்பாடு ஜனவரியில் அறிவிக்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

கோவை: 2026 தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து தங்கள் கட்சி சார்பில் ஜனவரி மாதம் நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும் என, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கட்சி நிர்வாகிகளின் திருமண நிகழ்வு, ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை வந்தேன். இரவு கிருஷ்ணகிரி சென்று நாளை அங்கு மா விளைச்சலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறேன். அனைவரும் கல்வி … Read more

நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பது, தாய்ப்பாலுக்கு வரிவிதிப்பதற்கு ஒப்பானது! சீமான் காட்டம்

வேளாண்மைக்கு பயன்படும் நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பது, குழந்தை குடிக்கும் தாய்ப்பாலுக்கு வரிவிதிப்பதற்கு ஒப்பானது; இக்கொடுங்கோன்மை முடிவை பாஜக அரசு கைவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார். 

திருச்சியில் இருந்து கோவை வந்த மின்சார ஆம்னி பேருந்து தடுப்புச் சுவரில் மோதி தீக்கிரை

கோவை: திருச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த தனியார் மின்சார ஆம்னி பேருந்து, கருமத்தம்பட்டி அருகே தடுப்புச் சுவாில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் 17 பயணிகள் காயமடைந்தனர். திருச்சியில் இருந்து நேற்று (ஜூன் 28) இரவு 10.30 மணிக்கு மின்சார ஆம்னிப் பேருந்து கோவை நோக்கி புறப்பட்டது. பேருந்தை திருவண்ணாமலையைச் சேர்ந்த ஓட்டுநர் பசுபதி ஓட்டி வந்தார். பேருந்தில் 26 பயணிகள் இருந்தனர். இப்பேருந்து கருமத்தம்பட்டியைக் கடந்து, தனியார் உணவகம் அருகே இன்று (ஜூன் 29) … Read more

வரதட்சணை கொடுமை.. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு! திருப்பூரில் அதிர்ச்சி

திருப்பூரில் திருமணம் நடந்து 78 நாட்களே ஆன நிலையில், இளம் பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

திமுக ஆட்சி கால காவல்நிலைய மரணங்களுக்கு மட்டும் ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்? – தவெக

சென்னை: “எதிர்க்கட்சியாக இருந்தபோது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் வாய்கிழிய வீர வசனம் பேசிய முதல்வர், அவரது ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த காவல் நிலைய மரணங்களுக்கு இதுவரை வாய் திறக்கவில்லையே, ஏன்?.” என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த வெள்ளிக்கிழமை அன்று. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த … Read more

குப்பை தொட்டிக்கு பறந்த ஜெயலலிதா புகைப்படம்.. கொந்தளித்த அதிமுக!

திண்டுக்கல்லில் அமைச்சர் சக்கரபாணி கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புகைப்படத்தை அதிகாரிகள் குப்பை தொட்டியில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

‘தமிழகத்தில் 2026-ல் கூட்டணி ஆட்சிதான் அமையும்’ – விஜய பிரபாகரன் கணிப்பு

மதுரை: தமிழகத்தில் 2026-ல் கண்டிப்பாக கூட்டணி ஆட்சிதான் அமையும் என தேமுதிக இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் கூறியுள்ளார். மதுரை மாவட்டம் திருப்பாலையில் நடந்த தேமுதிக நிர்வாகி இல்ல விழாவில் அக்கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளர் விஜய பிரபாகரன் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 2026 நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஜனவரி.9-ல் தேமுதிக நிலைப்பாட்டை தெரிவிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெளிவாகப் பேசியுள்ளார். அப்போது கூட்டணி குறித்து அவர் தெரிவிப்பார். செயற்குழு, … Read more

அஜித்குமார் மரணம்! தவெக தலைவர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிக்கை!

காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம் அடைந்துள்ள நிலையில், தவறிழைத்த காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்துக்கு அதிகாலையில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

திருச்சி: திருச்சி விமான நிலையம் மற்றும் பல்வேறு விமான நிறுவனங்களுக்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி விமான நிலையத்திற்கு இன்று (29-ம் தேதி) அதிகாலை 1.28-மணிக்கு, திருச்சி விமான நிலைய இயக்குநர் மற்றும் திருச்சியில் உள்ள விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையம் சார்ந்தவர்களின் மின்னஞ்சல்களுக்கு, “வெடிபொருட்கள் உடனடியாக வெளியேறுங்கள். விமான நிலையம் மற்றும் விமானங்களைச் சுற்றி வைக்கப்பட்டுள்ளகுப்பைகளுக்குள் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. கட்டிடத்தை … Read more

குமரியில் அதிர்ச்சி.. மனைவியை கொன்று சடலத்துடன் தூங்கிய கணவன்!

கன்னியாகுமரியில் கணவர் மனைவியைக் கொன்றுவிட்டு, இறந்த பிறகு அவருடன் தூங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.