வீலிங் செய்து வீடியோ வெளியிட்ட இளைஞர்களுக்கு சிறை – லைக்குக்காக லைப்-ஐ தொலைச்சிட்டாங்க

இருசக்கர வாகனத்தின் முன் பகுதியில் பட்டாசை கட்டி,தெற்கு திசையில் இவனைப் பற்றி கேளு தூளு  கிளப்புறவன் தூத்துக்குடி ஆளு என தல அஜித் பாட்டுபோட்டு இணையத்தில் ரீல்ஸ் பதிவிட்ட திசையன்விளை இளைஞர்கள் இருவரை பொறி வைத்து காவல்துறை கைது செய்துள்ளது.   

முகாம்கள் முதல் அவசரகால மையங்கள் வரை – தமிழக அரசின் ‘மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை’ நடவடிக்கைகள்

சென்னை: மழை பாதிப்புக்குள்ளாகும் மக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும், நிவாரண முகாம்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், மருத்துவ வசதி, மின்சாரம் மற்றும் இதர அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், மனித உயிரிழப்பு, கால்நடை இறப்பு மற்றும் சேதமடைந்த குடிசை, வீடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை, முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண … Read more

கூலித் தொழிலாளி சரமாரியாக வெட்டிக் கொலை – ஸ்ரீவைகுண்டத்தில் பதற்றம்..!

ஸ்ரீவைகுண்டம் அருகே கூலித்தொழிலாளிகொலை சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது.    

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கன, மிக கனமழை வாய்ப்பு

சென்னை: “அடுத்த 24 மணி நேரத்துக்கு நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்” என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “தென்கிழக்கு வங்கக் கடலில், இன்று (நவ.14) காலை காற்றழுத்த … Read more

குழந்தைகள் தினம் | முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

சென்னை: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின்: “இந்திய நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான குழந்தைகள் தினத்தையொட்டி, நேரு அவர்களின் பொன்மொழியை குறிப்பிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி. இன்றைய குழந்தைகள் தான் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள். நாம் … Read more

சென்னை: 3 கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்

சென்னை ஆதம்பாக்கத்தில் கல்லூரி மாணவர்களை தாக்கி விட்டு  விலை உயர்ந்த கேடிஎம் பைக், கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் பர்ஸில் வைத்திருந்த பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  

சம்பா பயிர்கள் காப்பீட்டுகான காலக்கெடுவை நவம்பர் இறுதிவரை நீட்டிக்க அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: “இதுவரை ஏறக்குறைய 70% உழவர்கள் மட்டுமே காப்பீடு செய்திருக்கும் நிலையில், அதற்கான காலக்கெடுவை நாளையுடன் முடித்துக் கொள்வது நியாயமாகாது. எனவே, கடந்த ஆண்டைப் போலவே, நடப்பாண்டிலும் சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் இறுதி வரை தமிழக அரசு நீட்டிக்க வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் நடவு இப்போது … Read more

தொடர் கனமழை எதிரொலி: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: தொடர் கனமழை எதிரொலியாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம், மயிலாடுறை, நாகை, அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஒருநாள் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை மற்றும் கறம்பக்குடி ஆகிய இரண்டு தாலுக்காக்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் … Read more

‘மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்’ – கடலூர், புதுச்சேரியில் கனமழை எச்சரிக்கை

கடலூர்: கடலூர் மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இன்று பள்ளி, கல்லூ ரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் முன்னறிவிப்பின்படி, டெல்டா மாவட்டமான கடலூர் மாவட்டத்துக்கு விடுக்கப்பட்ட கனமழை எச்சரிக்கை மற்றும் மோசமான வானிலை காரணமாக கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிமின்னலுடன் கனமழை பெய்து வரும்போது திறந்த வெளியில் … Read more

தமிழகத்தைச் சேர்ந்தவரை கேரள இளநிலை விஞ்ஞானியாக மார்க்சிஸ்ட் பிரமுகர் பரிந்துரைப்படி நியமித்தது சட்டவிரோதம்: கேரள உயர் நீதிமன்றம்

திருவனந்தபுரம்: தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு மார்க்சிஸ்ட் பிரமுகர் அளித்த பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் விதிமுறைகளுக்கு புறம்பாக கேரளாவில் வனவிலங்குகள் உயிரியியல் இளநிலை விஞ்ஞானியாக நியமனம் வழங்கியிருப்பது சட்டவிரோதமானது என கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரள வனவியல் ஆராய்ச்சி மையத்தில் இளநிலை விஞ்ஞானி பணியிடத்துக்கு விண்ணப்பித்த பி.ராஜன் என்பவர், கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘நான் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவன். விலங்கியலில் முனைவர் பட்டமும், வனவிலங்குகள் உயிரியியல் பாடத்தில் சிறப்பு பட்டமும் பெற்றுள்ளேன். கேரள மாநில அறிவியல் … Read more