முழு கொள்ளளவை நெருங்கிய வைகை அணையில் உபரி நீர் வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தேனி: வைகைஅணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளவை நெருங்கியுள்ளதால் அணைக்கு வரும் நீர் அனைத்தும் உபரியாக அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆகவே கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி நீர்பாசனத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். வடகிழக்கு பருவமழையினால் கடந்த சில வாரங்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மூல வைகை, முல்லைப் பெரியாறு, கொட்டக்குடி, வரட்டாறு, பாம்பனாறு உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் வைகைஅணையின் நீர்மட்டம் வெகுவாய் உயர்ந்து, கடந்த 8-ம் … Read more

“உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?!” – அமைச்சர் சிவசங்கரை மீம் போட்டு கலாய்த்த டிஆர்பி ராஜா

சென்னை: “உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா” என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரை மீம் போட்டு கலாய்த்துள்ளார் தொழில்துறை அமைச்சரான டிஆர்பி ராஜா. தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டிய நிலையில், தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஏராளமானோர் வெளியூர்களுக்கு பயணமாகியுள்ளனர். நேற்றைய நிலவரப்படி, சென்னையை பொறுத்தவரை வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 634 சிறப்பு பேருந்துகள் என நேற்று முன்தினம் மொத்தம் 2,734 பேருந்துகள் இயக்கப்பட்டு, சென்னையில் இருந்து … Read more

சென்னையில் ‘வழக்கமாக’ இருந்த ஆம்னி பேருந்து கட்டணம் – ஆனால், திங்கள்கிழமை ‘ரிட்டர்ன்’?

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி, பெரும்பாலானோர் வியாழன், வெள்ளிக்கிழமைகளிலேயே பயணம் மேற்கொண்டதால் இன்று (சனிக்கிழமை) சென்னையில் இருந்து வெளியூர் செல்ல தனியார் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு என்பது குறைவாகவே இருந்து. குறிப்பாக, ஆம்னி பேருந்துக் கட்டணம் வழக்கமானதாகவே இருந்தது. ஆனால், திங்கள்கிழமை வெளியூர்களில் இருந்து சென்னைக்குத் திரும்புவதற்கான ஆம்னி பேருந்து முன்பதிவுக் கட்டணங்கள் இரு மடங்குக்கு மேலாக இருப்பதையும் கவனிக்க முடிகிறது. பொதுவாகவே தீபாவளி உள்ளிட்ட பண்டிகை சமயங்களில் சென்னையில் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் என்பது … Read more

“சனாதன தத்துவ லட்சியங்களின் உண்மையான வெளிப்பாடு இது” – ஆளுநர் ரவி தீபாவளி வாழ்த்து

சென்னை: “ஒளியின் திருநாளான தீபாவளித் திருநாளில் தமிழக சகோதர, சகோதரிகளுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி விடுத்துள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில், “பாரதம் முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி விழா, அதர்மத்தின் மீது தர்மத்தின் வெற்றியையும், இருளின் மீது ஒளியின் வெற்றியையும் குறிக்கிறது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” அல்லது “வசுதெய்வ குடும்பகம்” என்ற நமது சனாதன தத்துவத்தின் லட்சியங்களின் உண்மையான வெளிப்பாடு இது. உலகெங்கிலும் … Read more

கலைஞர் மகளிர் உரிமை தோகை பெற மேலும் 7.35 லட்சம் பேர் தேர்வு? லேட்டஸ்ட் அப்டேட்

1000 Rupees For Women:  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பான முக்கிய அப்டேட்…  7.35 லட்சம் பயனாளிகள் இணைந்துள்ளதாக தகவல்…

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ‘கருக்கா’ வினோத் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி ‘கருக்கா’ வினோத் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன் கடந்த மாதம் 25-ம் தேதி மதியம் 3 மணியளவில் அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக பிரபல ரவுடியான சென்னை நந்தனத்தைச் சேர்ந்த கருக்கா வினோத் (42) கிண்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் நீதிமன்ற காவலில் … Read more

தீபாவளிக்கு ரெடியாகும் இட்லி – குடல்கறி, சுடச்சுட ஆட்டுக்கால் பாயா – தமிழ்நாட்டில் மட்டும் அசைவம் ஏன்?

தீபாவளி நாளில் தமிழ்நாட்டில் மட்டும் அதிகமாக அசைவ உணவு வீட்டில் இடம்பெறுவது ஏன்? என பலருக்கும் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. இதற்கு வரலாற்று தொடர்பு இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.  

சிங்கார சென்னை 2.0 திட்டம்: பேரு பெத்த பேரு… கழுவ நீலு லேது..!

சென்னை: சுற்றுலா மற்றும் மருத்துவ சேவைகளுக்காக உலக மக்களை ஈர்க்கும் மையமாக சென்னை விளங்குகிறது. சென்னை மாநகரில் நிலவும் சட்டம் – ஒழுங்கு, அடிப்படை வசதிகள், தூய்மை ஆகியவற்றை வைத்தே தமிழகம் எப்படி இருக்கும் என அவர்கள் முடிவு செய்கின்றனர். அந்த அளவுக்கு சென்னை மாநகரம், தமிழகத்தின் முகமாகவே வெளி மாநிலத்தவராலும், வெளிநாட்டவராலும் பார்க்கப்படுகிறது. சுமார் 80 லட்சம் மக்கள்தொகை கொண்ட மாநகரில் உள்ளூரை சேர்ந்தவர்கள் மற்றும் வெளியூர், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என தினமும் சுமார் 10 … Read more

பாரதிதாசன் பல்கலை., மாணவர்களுக்கு தற்காலிக பட்டச் சான்றிதழ் வழங்க உடனடி நடவடிக்கை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட 147 கல்லூரிகளில் படித்து 2022-23 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவ, மாணவியருக்கு 6 மாதங்களுக்கு மேலாகியும் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழும் , தற்காலிக பட்டச் சான்றிதழும் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், இந்தத் தாமதத்துக்கு காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருச்சி … Read more

”மீண்டும் வேட்டைக்கு தயாரான ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள்”: தமிழக அரசு மேல் முறையீடு செய்ய அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: ஆன்லைனில் ரம்மி ஆடினால், ஒரு கோடி ரூபாயுடன், ஒரு கிலோ தங்கமும் பரிசு என்று ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் வலைவிரித்திருக்கின்றன. ஆன்லைன் ரம்மி நிறுவனங்களின் வேட்டை வேகம் வெளிப்படையாகத் தெரியும் நிலையில், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டது செல்லாது என்று … Read more