புதுச்சேரி | என்ஐஏ அதிகாரிகளிடம் பிடிப்பட்டவர் அறையில் கஞ்சா: கொல்கத்தாவைச் சேர்ந்த இருவர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) நடத்திய சோதனையின்போது பிடிப்பட்டவர் அறையில் கஞ்சா பொட்டலங்களும் சிக்கியுள்ளதால் கொல்கத்தாவைச் சேர்ந்த இருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரி எல்லைப்பிள்ளைசாவடிப் பகுதியில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மேற்கு வங்க பணியாளர்கள் தங்கியிருந்த அறையில் நேற்று சோதனையிட்டனர். அப்போது கொல்கத்தாவைச் சேர்ந்த பாபுவை கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர். பாபு தங்கியிருந்த அறையில் சோதனையிட்டபோது புதுச்சேரி உருளையன் பேட்டை போலீஸாரும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்காக … Read more

மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட 14 வார்டுகளில் 78 புதிய சாலைகள் அமைக்க அரசு அனுமதி: அமைச்சர் பி.மூர்த்தி

மதுரை: “கிழக்கு தொகுதிக்குட்பட்ட 14 வார்டுகளில் 78 புதிய சாலைகள் அமைக்க அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். மதுரை மாவட்டம், சூர்யா நகர் பகுதியில் உள்ள தனியார் மகாலில் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 14 மாநகராட்சி வார்டுகளில் உள்ள குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கான குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில், ‘‘பொதுமக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளான குடிநீர் வசதி, … Read more

போனஸ் பேச்சு தோல்வி: தீபாவளி அன்று என்எல்சி முன்பு குடும்பத்துடன் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரி: போனஸ் தொடர்பான என்எல்சி முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் திட்டமிட்டப்படி தீபாவளியன்று என்எல்சி தலைமை அலுவலகம் முன்பு ஒப்பந்தத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளனர். என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் தரக்கோரி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கம் சார்பில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. அதுதொடர்பாக போராட்டங்கள், பேச்சுவார்த்தை நடந்தும் முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக அலுவலகத்தில் இன்று … Read more

முழு கொள்ளளவை நெருங்கிய வைகை அணை – வயல்களில் ஆற்று நீர் புகுந்ததால் பயிர்கள் சேதம்

ஆண்டிபட்டி: தொடர் மழையால் வைகை அணை முழுக்கொள்ளவை நெருங்கியுள்ளது. இதனால் தேனி அருகே குன்னூர் வரை கடல்போல் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. இந்நிலையில், பெருக்கெடுத்து வரும் ஆற்றுநீர் தொடர்ந்து அணைக்குள் செல்ல முடியாமல் பக்கவாட்டுப் பகுதிகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் ஏராளமான வயல்கள் நீரில் மூழ்கின. தேனி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததால் சில மாதங்களாக வைகை அணையின் நீர்மட்டம் போதிய அளவு உயரவில்லை. இதனால் முதல், இரண்டாம் போகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை நீடிக்க வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: நேற்று (நவ.08) மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (நவ.09) அதே பகுதியில் நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், … Read more

உயர் நீதிமன்றத் தீர்ப்பில் ‘ஆன்லைன் ரம்மிக்கு தடை பொருந்தாது’ அம்சம் ஏமாற்றம் அளிக்கிறது: அன்புமணி

சென்னை: “ஆன்லைன் சூதாட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். ஆன்லைன் ரம்மி திறமைக்கான விளையாட்டு அல்ல; அது அதிர்ஷ்டம் சார்ந்த சூதாட்டம் என்பதை உச்ச நீதிமன்றத்தில் நிரூபித்து, ஆன்லைன் ரம்மி தடையை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று எக்ஸ் தளத்தின் தனது பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், … Read more

“கடவுள் மறுப்பு வாசகங்களை மசூதி, தேவாலயம் வெளியே வைக்க ஒப்புக் கொள்வார்களா?” – அண்ணாமலை கேள்வி

சென்னை: “பாஜகவைப் பொறுத்தவரை இந்து, இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு சமமாக இருக்கும் கட்சி. பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்கள் அடங்கிய சிலையை, ஒரு மசூதி அல்லது தேவாலயத்துக்கு வெளியே வைக்க இந்த அரசியல் கட்சிகள் ஒப்புக்கொள்வார்களா?” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “பாஜக எங்கேயும் பெரியாரை அவமதிக்கவில்லை. பெரியார் எங்கு இருக்க … Read more

மீண்டும் வருகிறதா ஆன்லைன் ரம்மி… உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?

Online Rummy Case Issue: திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

“ரூ.3200, ரூ.3400, ரூ.3999… ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளையை அரசு தடுக்காதது ஏன்?” – அன்புமணி

சென்னை: “சட்டத்தை மீறும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, அளவுக்கு அதிகமாக கனிவு காட்டினால், அவற்றின் விதிமீறல்களை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்? ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு கண்டும், காணாமலும் இருப்பதற்கான காரணம் என்ன?” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீபஒளி திருநாளையொட்டி, லட்சக்கணக்கான மக்கள் இன்று முதல் சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்லத் தயாராக … Read more

மூத்த புகைப்படக் கலைஞர் குமரேசன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை: “மூத்த புகைப்படப் பத்திரிகையாளரும், விகடன் முன்னாள் தலைமைப் புகைப்படக் கலைஞருமான சு. குமரேசனின், திடீர் மறைவு புகைப்பட இதழியல் உலகுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மூத்த புகைப்படப் பத்திரிகையாளர், விகடன் முன்னாள் தலைமைப் புகைப்படக் கலைஞர் சு. குமரேசன் நேற்றிரவு மறைவெய்தினார் என்று அறிந்து வருந்துகிறேன். திராவிட இயக்க மேடைகளில் பகுத்தறிவு ஒளிவீசிய மகா மதுரகவி வீ.வே.முருகேச பாகவதரின் … Read more