மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி கோயில் குடமுழுக்கு விழாவில் அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள் @ கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி: மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், கிருஷ்ணகிரி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள விநாயகர் கோயிலில் குடமுழுக்கு விழாவில் பக்தர்களுக்கு, இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்கினர். கிருஷ்ணகிரி – பெங்களூரு சாலையில் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் (டான்சி) பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா (குடமுழுக்கு) இன்று (8-ம் தேதி) தொடங்கியது. காலை 9.30 மணிக்கு சிறப்பு யாகங்கள், வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம், கும்பாலாரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. நாளை (9-ம் தேதி) … Read more