விருதுநகரில் தொடர் மழை: நிரம்பி வழியும் குல்லூர்சந்தை அணை – மூழ்கியது தரைப்பாலம்

விருதுநகர்: கடந்த ஒரு வாரமாக பரவலாக பெய்துவரும் மழையால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. குல்லூர்சந்தை அணை நிரம்பி வழிவதால் தரைப்பாலம் மூழ்கியது. சுட்டெறிக்கும் வெயிலுக்கு இடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலான மழை பெய்து வருகிறது. இதனால், வேளாண் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. தொடர் மழைப்பொழிவு காரணமாக வேளாண் பணிகளுக்கு போதிய அளவு குளங்களிலும் கண்மாய்களிலும் நீர் நிறைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேற்குத் … Read more

மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு தபால்காரர்கள் மூலம் வீடு தேடி வரும் டிஜிட்டல் வாழ்நாள் சான்று

சென்னை: மத்திய மற்றும் மாநில அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் வீட்டுக்கே சென்று இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி மூலமாக டிஜிட்டல் முறையில் வாழ்நாள் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் சேவையை இந்திய அஞ்சல் துறை தபால்காரர்கள் மூலம் வழங்கி வருகிறது. இது தொடர்பாக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு விவரம்: ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற தங்கள் வருடாந்திர வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்நிலையில், நேரில் சென்று வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் … Read more

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கு: திமுக எம்.பி. கவுதம சிகாமணி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006- 2011 திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக பதவி வகித்த, தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மகனும், தற்போதைய கள்ளக்குறிச்சி திமுக எம்.பி.,யுமான கவுதமசிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், கோபிநாத், கோதகுமார், சதானந்தன், லோகநாதன் உள்ளிட்டோர் … Read more

அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவதுமாக செயல்பட்டு வருகிறார்.இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்கில் பொது செயலாளர் … Read more

அதிமுக கட்சி பெயர், கொடியை பயன்படுத்த தடை – சென்னை உயர் நீதிமன்றம்!

அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

எழுப்பூர் மருத்துவமனைக்கு சென்னை ஐஐடியில் உருவான குடிநீர் கருவியைப் பரிசாக வழங்கிய கமல்ஹாசன்

சென்னை: மநீம தலைவர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளையொட்டி, எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு காற்றின் ஈரப்பதம் மூலம் சுத்தமான குடிநீர் இயந்திரத்தை வழங்கினார். இந்தக் கருவியை அரசுக்கு பரிந்துரைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது பிறந்தநாளையொட்டி, “வாயு ஜல்” என்ற குடிநீர் இயந்திரத்தை வழங்கினார். இது காற்றின் ஈரப்பதம் மூலம் சுத்தமான குடிநீர் தரும் RO இயந்திரம் … Read more

கமல்ஹாசன் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 69-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்குப் பல்வேறு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், இலக்கியவாதி, அரசியல்வாதி எனப் பன்முகத் திறமைகொண்டவர் கமல்ஹாசன். அவருக்கு பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல சாதனைகளை … Read more

தீபாவளிப் பண்டிகை | பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிக்க 19 அறிவுரைகளை வெளியிட்டது சென்னை காவல்துறை

சென்னை: தீபாவளிப் பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அறிவுரைகளை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி கனம் உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைகள் படியும், தமிழக அரசின் வழிகாட்டுதல் படியும் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பதற்கான கால அளவுகள், விதிமுறைகள் ஆகியவற்றை நிர்ணயித்துள்ளன. அதன்பேரில், வருகிற 12.11.2023 அன்று தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், பொதுமக்கள் பாதுகாப்பான … Read more

மனைவிகளை மாற்றி உல்லாசம்! ஈசிஆர் பண்ணை வீட்டில் இரவில் நடந்த கூத்து – பகீர் பின்னணி

Chennai Crime News: ஈ.சி.ஆர் பண்ணை வீட்டில் வார இறுதி நாட்களில் கணவன் மனைவியை மாற்றிக் கொள்ளும் விபரீதம், இளைஞர்களை பாலியல் வலையில் விழ வைக்கும் கும்பல் கூண்டோடு கைது செய்யப்பட்டனர்.

இரண்டு நாள் சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 லட்சம் பேர் மனு

சென்னை: தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற இரண்டு நாள் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்களில், பெயர் சேர்க்க 4 லட்சம் பேர் புதிதாக மனு அளித்துள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் கடந்த அக். 27-ம் தேதி தொடங்கியது. அன்றே வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதையடுத்து, அன்று முதல் வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்க, நீக்கம் … Read more