கீழடி, வெம்பக்கோட்டையில் விரைவில் அடுத்தகட்ட அகழாய்வுப் பணிகள்: தங்கம் தென்னரசு தகவல்
ராஜபாளையம்: கீழடி மற்றும் வெம்பக்கோட்டையில் அடுத்தகட்ட அகழாய்வுப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் தொல்லியல் துறை சார்பில் மாநில அளவிலான தொல்லியல் மற்றும் வரலாறு குறித்த இரு நாள் கருத்தரங்கம் இன்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன் வரவேற்றார். ‘வைப்பாற்றங்கரையின் வரலாற்றுத் தடம்’ என்ற தலைப்பில் வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க ஆபரணங்கள், சுடுமண் பொம்மைகள், செப்பு … Read more