சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தின விழா: ஆளுநர், காங்கிரஸ் கட்சியினர் மரியாதை

சென்னை: சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தின விழாவை முன்னிட்டு, அவரது உருவப் படத்துக்கு தமிழக ஆளுநர்,தமிழக காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 148-வது பிறந்த தினம்தேசிய ஒற்றுமை தினமாக நேற்றுநாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, கிண்டி ராஜ்பவன் பிரதான நுழைவு வாயில் அருகே உள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், தேசிய … Read more

தமிழக மின்வாரியத்தில் காலி பணியிடங்கள் அதிகரிப்பு

சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தில் மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 1.44 லட்சமாக உள்ளது. இதில் இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 55,295 ஆக உள்ளது. இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், மின்சாதன பழுதுகளை சரி செய்வது உள்ளிட்ட பணிகள் தாமதமாகின்றன. இதுகுறித்து, மின்வாரிய ஊழியர்கள் கூறியதாவது: மின்வாரியங்களில் ஓய்வுபெறும் ஊழியர்களின் பணியிடங்கள் மீண்டும் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், ஆண்டுதோறும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், இருக்கும் ஊழியர்களுக்கு … Read more

வேளச்சேரி – பரங்கிமலை ரயில் நிலையங்களை இணைக்க இரும்பு தூண்களை நிறுவும் பணி தொடக்கம்

சென்னை: பறக்கும் ரயில் வழித்தடத்தில் சென்னை வேளச்சேரி – பரங்கிமலை ரயில் நிலையங்களை இணைப்பதற்கான இரும்புத் தூண்களை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேளச்சேரி – பரங்கிமலை ரயில் நிலையங்களை இணைப்பதற்கான பணிகள் ரூ.734.01 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 5 கி.மீ. தூரம் கொண்ட இந்த வழித்தடத்தில் பணிகள் நிறைவடையும் தருவாயை எட்டியுள்ளன. 500 மீட்டர் தூரத்துக்கு மட்டுமே பணிகள் பாக்கி … Read more

போலி குறுஞ்செய்திகளை கண்டு நுகர்வோர் ஏமாற வேண்டாம்: மின் வாரியம் எச்சரிக்கை

சென்னை: மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் போலி குறுஞ்செய்திகளை நுகர்வோர் நம்பி ஏமாற வேண்டாம் என்று மின் வாரியம் எச்சரித்துள்ளது. மின் நுகர்வோரின் செல்போன் எண்களுக்கு மின் வாரியத்தில் இருந்து அனுப்புவது போன்று போலியான குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதைக் காணும் நுகர்வோர் அந்தக் குறுஞ்செய்தியில் உள்ள லிங்க்-ல் சென்று பார்க்கும்போது, அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை மர்ம நபர்கள் பறித்துக் கொள்கின்றனர். இது தொடர்பாக, மின் வாரியம் அறிவிப்பு … Read more

சென்னை | ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

சென்னை: இருசக்கர வாகனத்தை ஓட்டி வருபவர் மட்டுமின்றி, பின்னால் உட்கார்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிந்திருந்தால், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக போக்குவரத்து போலீஸார் லட்டு வழங்கினர். இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது. ஆனால், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் பெரும்பாலும் ஹெல்மெட் அணிவது இல்லை. இதனால், போக்குவரத்து போலீஸார் அபராத நடவடிக்கையை அவ்வப்போது தீவிரப்படுத்தி வருகின்றனர். தவிர, இருசக்கர வாகனங்களில் செல்லும் 2 பேரும் … Read more

மேட்டுப்பாளையம் நகர்மன்ற கூட்டத்தில் நாற்காலி வீசப்பட்டதால் சலசலப்பு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகர்மன்ற கூட்டத்தில், திமுக – அதிமுக கவுன்சிலர்கள் இடையே நேற்று வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதிமுக கவுன்சிலர்கள் மீது நாற்காலி வீசப்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினரும் போலீஸாரிடம் புகார் அளித்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியின் அவசரக் கூட்டம், அதன் தலைவர் மெஹரீபா பர்வீன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக பேசினர். அப்போது, மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதியில் கடந்த ஒரு மாத காலத்துக்கும் … Read more

காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து போராட்டம்: அண்ணாமலை தகவல்

கரூர்: காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டித்துப் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். கரூரில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பெரம்பலூரில் பாஜக நிர்வாகிகளை திமுகவினர் தாக்கியுள்ளனர். இதுபோன்ற வன்முறையைக் கண்காணிக்கத்தான், பாஜக தலைமையிடக் குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் மேலிடத்தில் இதுகுறித்த அறிக்கையை சமர்ப்பிப்பார்கள். காவிரிப் பிரச்சினையில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது. காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக … Read more

பாஜகவினர் மீது தாக்குதல்: இபிஎஸ், அண்ணாமலை கடும் கண்டனம்

சென்னை: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக அதிமுகபொதுச் செயலாளர் பழனிசாமி,பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போக்குவரத்து அமைச்சரின் உதவியாளர் மற்றும் திமுக எம்எல்ஏவின் உதவியாளர் உள்ளிட்ட 300 பேர் நுழைந்து, கல் குவாரி டெண்டரை தங்களுக்கே தர வேண்டும் என்றும், திமுகவினரைத் தவிர வேறு யாரிடமும் ஒப்பந்தப் புள்ளிபெறக்கூடாது என்றும் … Read more

சென்னை: ’இறந்த குழந்தைக்கு சிகிச்சை’ பிரபல தனியார் மருத்துவமனை மீது பகீர் குற்றச்சாட்டு

குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் ஏற்கனவே இறந்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி பத்து லட்சம் கட்டணம் வசூலிக்க முயன்றதாக குழந்தையின் தாய் மற்றும் உறவினர்கள் குற்றச்சாட்டியதுடன், மருத்துவமனையில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.   

திருப்பூர் காந்தி சிலை முன் ஆளுநருக்கு எதிராக வாசகம்: போலீஸார் தீவிர விசாரணை

திருப்பூர்: திருப்பூர் காந்தி சிலை முன் ஆளுநருக்கு எதிரான வாசகம் எழுதப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சி அருகே மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை உள்ளது. இந்த சிலையின் பீடத்தை ஒட்டிய சுவரில், `வெளியே போ கவர்னர் ரவி’ என கருப்பு எழுத்துகளால் எழுதப்பட்டிருந்தது. இதை அந்த வழியாக சென்ற பலரும் பார்த்தபடி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் தெற்கு போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநருக்கு … Read more