மதுரை: தேவர் தங்கக் கவசம்: மீண்டும் வங்கியிடம் ஒப்படைத்தார் திண்டுக்கல் சீனிவாசன்

மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குரு பூஜை நிறைவடைந்த நிலையில், தங்கக் கவசத்தை மீண்டும் வங்கியில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஒப்படைத்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டும், 61 வது குரு பூஜை முன்னிட்டும், கடந்த 25ம் தேதி தங்கக் கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை அண்ணா நகர் வங்கி லாக்கரில் இருந்து எடுத்து அதை, தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து … Read more

ஆளுநர் மீது சரமாரி தாக்கு: காமராசர் பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழகம் பரிந்துரைத்த பிறகும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காததைக் கண்டித்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நாளை (வியாழக்கிழமை) நடக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “சங்கரய்யாவைப் பற்றி ஆளுநருக்கு தெரியாவிட்டாலும் கேட்டிருக்க வேண்டும். … Read more

மதுரை ஆதீனத்துக்கு எதிராக நித்தியானந்தா திடீர் வழக்கு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை: மதுரை ஆதீனத்துக்கு எதிராக நித்தியானந்தா தாக்கல் செய்துள்ள மனுவுக்கு ஆதீனம் மற்றும் அறநிலையத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நித்தியானந்தா தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனு: மதுரை ஆதீன மடத்தில் இளைய ஆதீனமாக என்னை கடந்த 2012-ல் அப்போதைய ஆதீனம் அருணகிரிநாதர் நியமனம் செய்தார். எனது நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் எனது நியமன அறிவிப்பை 2019-ல் ஆதீனம் திரும்ப பெற்றார். இதற்கு எதிரான வழக்கு மதுரை மாவட்ட … Read more

முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான புகார்: லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக ஆட்சிக் காலத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்கள் கொள்முதல் செய்ததில் 350 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான புகாரின் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், ‘முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் காமராஜ். இவர் … Read more

எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: “திருத்தணியும் தென்குமரியும் இன்று தமிழ்நாட்டின் பகுதிகளாக இரு திசைகளில் திகழ்கிறதென்றால் அது எளிதில் நடந்துவிடவில்லை. எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற, தமிழ் நலம் மிக்க போராட்டத்தால்தான் நமக்குரிய பல பகுதிகளை மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நாம் பெறமுடிந்தது” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நவம்பர் 1: எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்! திருத்தணியும் தென்குமரியும் இன்று தமிழ்நாட்டின் பகுதிகளாக இரு திசைகளில் திகழ்கிறதென்றால் அது … Read more

இந்தியா எங்களுக்கும் கல்வி சேவை வழங்க வேண்டும்-வெளிநாட்டு பிரதமர் வேண்டுகோள்!

இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் பப்புவா நியூ கினியா நாட்டிற்கு வந்து கல்வி சேவை வழங்க வேண்டும் என அந்நாட்டின் ஆளுநர் சசீந்திரன் முத்துவேல் கோரிக்கை விடுத்துள்ளார். 

ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் மதுரை காமராசர் பல்கலை. பட்டமளிப்பு விழாவுக்கு பலத்த பாதுகாப்பு

மதுரை: சங்கரய்யாவுக்கான கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கான பரிந்துரையை நிராகரித்த தமிழக ஆளுநருக்கு எதிராக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அவர் காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். இதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 55-வது ஆண்டு பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை (நவ.2) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெ.குமார், பதிவாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இப்பட்டமளிப்பு விழாவில் சுதந்திரப் போராட்ட தியாகி … Read more

மகன் விபத்தில் சிக்கிய இடத்தில் மாந்திரீக பூஜை! ஒசூரில் விநோதம்

சாலை விபத்தில் உயிரிழந்த மகனின் ஆத்மா வீட்டுக்கு வரவேண்டி விபத்து நடந்த இடத்தில் குடும்பத்தினர் பூஜை செய்துள்ளனர். தந்தை மற்றும் குடும்பத்தினர்  

‘விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு’ – தமிழக அரசு சார்பில் சிறப்பு மலர் வெளியீடு

சென்னை: “விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு” தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ள சிறப்பு மலர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இந்தச் சிறப்பு மலர்களை மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பெற்றுக்கொண்டார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.1) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ‘தமிழரசு’ சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு” (தமிழ் நூல்) மற்றும் “Tamil Nadu’s … Read more

’தமிழ்நாட்டில் இந்தி ஆதிக்கம்’ வடக்கர்கள் வருகைக்கு எச்சரிக்கும் திருமா

வட இந்தியர்கள் தமிழ்நாட்டிற்கு வருவது வேலை வாய்ப்புக்காக என கருதக் கூடாது, அது இந்தி ஆதிக்கத்தை தக்க வைப்பதற்கான செயல் திட்டம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார்.