தமிழக செய்திகள்
ஆர்எஸ்எஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக உள்துறைச் செயலர், டிஜிபி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
சென்னை: அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்காத காவல் துறைக்கு எதிராக ஆர்எஸ்எஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறைச் செயலாளர், காவல் துறை டிஜிபி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜய தசமி மற்றும் முக்கியத் தலைவர்களின் பிறந்த தினம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை முன்னிட்டு அக்.22 மற்றும் அக்.29 ஆகிய 2 நாட்கள் தமிழகத்தில் வடமாவட்டங்களில் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்ததை எதிர்த்து … Read more
“மத்திய – மாநில அரசின் உறவுகளை ஆராய ஆணையம் அமைப்பீர்” – முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் யோசனை
சென்னை: “மத்திய – மாநில அரசின் உறவுகளை ஆய்வு செய்ய ஆணையம் அமைக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மாநில உரிமைகள் பெருமளவில் பறிக்கப்படும் இன்றைய சூழலில், மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவை ஆராய்ந்து பரிந்துரைகள் செய்வதற்கு ஆணையம் ஒன்றைத் தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாடு … Read more
தஞ்சாவூர் மாநகராட்சியில் கடைகளின் ஏலத்தில் முறைகேடு: தணிக்கை குழுவினர் ஆய்வு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியில் மார்க்கெட், வணிக வளாகங்களில் உள்ள கடைகளை வாடகைக்கு விடுவதற்கான ஏலம் நடத்தியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில், நகராட்சித் துறை நிர்வாக தணிக்கை குழுவினர் இன்று காலை முதல் மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாநகராட்சியில், பழைய பேருந்து நிலையம் மற்றும் திருவையாறு பேருந்து நிலைய வணிக வளாகத்தில் உள்ள 91 கடைகள், சரபோஜி மார்க்கெட்டில் 302 கடைகள், காமராஜ் மார்க்கெட்டில் 288 கடைகள், திருவள்ளூர் தியேட்டர் வணிக … Read more
சாதி, இனம், நிறம் அடிப்படையில் பாகுபாடு கூடாது: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை
மதுரை: ‘சாதி, இனம், நிறம், பிறப்பிடம், கலச்சார அடையாளம் அடிப்படையில் எந்தப் பாகுபாடும் காட்டக் கூடாது’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த காவலர் ஹாஜாஷெரீப், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “நான் தமிழகத்தில் கடந்த 2007-2008 ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் பணித் தேர்வில் வெற்றி பெற்றேன். என்னுடன் தேர்வானவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கிய நிலையில், நான் மனித நீதி பாசறை என்ற அமைப்பின் உறுப்பினராக இருப்பதால் எனக்கு … Read more
“மேட்டூர் நகராட்சித் தலைவருக்கு புதிதாக கார் வாங்கக் கூடாது” – கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதம்
மேட்டூர்: மேட்டூர் நகராட்சித் தலைவருக்கு புதிதாக கார் வாங்க, கூடாது என கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நகராட்சி அவசரக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேட்டூர் நகராட்சி அவசரக் கூட்டம் தலைவர் சந்திரா தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் காசி விஸ்வநாதன், நகராட்சி ஆணையர் நித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 17 தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டன. அப்போது, கவுன்சிலர்கள் பேசியது: “நகராட்சி ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள கடைகளை அகற்றாமல் வரி விதிக்க வேண்டும். இதன் மூலம் … Read more
கண்காணிப்பு கேமராக்களை அடிக்கடி கண்காணிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினால் மட்டும் போதாது, அவை முறையாக செயல்படுகிறதா என அடிக்கடி கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்தது. கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம், சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற மென்பொறியாளர் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தை அடுத்து, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக, சென்னை உயர் … Read more
போலி 'தமிழ் வழி கல்வி சான்றிதழ்' – பல்கலை.களில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுமதி
மதுரை: குரூப் 1 தேர்வில் போலி தமிழ் வழிக் கல்வி சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2019-ல் நடத்திய குரூப் 1 தேர்வில் தொலை நிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டு சலுகை வழங்கப்பட்டது. தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கான … Read more
“பிரச்சினை உள்ளவர்களை தாய்மடி போல புதுச்சேரி அரவணைக்கும்” – ஆளுநர் தமிழிசை
புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தமிழகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் உதய நாள் மற்றும் புதுச்சேரி விடுதலை நாள் விழா இன்று இரவு நடைபெற்றது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் ஆளுநர் தமிழிசை பேசியதாவது: புதுச்சேரி விடுதலை நாள் இன்று கொண்டாடப்படுகிறது. புதுச்சேரிக்கு என தனித்த சரித்திரம் உள்ளது. பொதுவாக மாநிலங்கள் போராட்டத்தில் உதயமாகின. ஆனால், புதுச்சேரி மட்டும் ஜனநாயக முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு … Read more