சென்னையில் வாகனங்களுக்கான வேக வரம்பு நிர்ணயம் – நவ.4 முதல் அமல்

சென்னை: சென்னையில் வாகனங்களுக்கான வேக வரம்புகளை நிர்ணயித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இரவு 10 மணி முதல் காலை 7 மணிவரை ஆட்டோக்கள் 35 கி.மீ வேகத்திலும், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 25 கி.மீ வேகத்திலும் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: சென்னை பெருநகரத்தில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வாகன … Read more

திமுக பிரமுகர் கொலை வழக்கில் கடலூரில் சரண்டரான குற்றவாளிகள்..!

சென்னை திருவொற்றியூர் அருகே திமுக பிரமுகர் காமராஜை வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் 6 பேர் கடலூர் நீதிமன்றத்தில் சரண்டைந்துள்ளனர்.    

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை ஆணையம் செலவு ரூ.5.60 கோடி: பரிந்துரைகளை அரசு நிறைவேற்றுமா?

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை ஆணையத்துக்கு ரூ.5.60 கோடி செலவாகியுள்ள நிலையில், அந்த ஆணையம் அளித்த பரிந்துரைகளை தமிழக அரசு நிறைவேற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்துக்கு தமிழக அரசால் ரூ.5 கோடியே 60 லட்சம் செலவிடப்பட்ட நிலையில், அந்த ஆணையத்தின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. தேசிய அளவிலோ அல்லது மாநில அளவிலோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடந்தால், … Read more

திருநெல்வேலி: பட்டியலின மாணவர்கள் மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமிகள் கைது

திருநெல்வேலியில் குளிக்கச் சென்ற இரண்டு பட்டியலின இளைஞர்களை நிர்வாணப்படுத்தி கஞ்சா போதையில் சித்தரவதை செய்த 6 பேர் கொண்ட கும்பலை காவல்துறை கைது செய்துள்ளது.  

கொடகரை மலைக் கிராமத்தில் வலுவிழந்த தொகுப்பு வீடுகளில் அச்சத்துடன் வாழும் பழங்குடி மக்கள்

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே கொடகரை மலைக் கிராமத்தில் வலுவிழந்த தொகுப்பு வீடுகளை அகற்றி விட்டு, புதிய வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேன்கனிக்கோட்டை அருகே தொட்டமஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட மலைக் கிராமம் கொடகரை. அடந்த வனப்பகுதிக்கு நடுவில் உள்ள இக்கிராமத்தில் பழங்குடியின மக்கள் 150 பேர் வசித்து வருகின்றனர். பேருந்து வசதியில்லை: இவர்கள் வனத்தில் தேன் எடுத்தல், விறகுகளைச் சேகரித்தல், பழங்களைப் பறித்து விற்பனை செய்வது, கால்நடை வளர்ப்பு ஆகிய … Read more

ஆளுநரால் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கும் அமைச்சர் பொன்முடி – பின்னணி என்ன?

Minister Ponmudi: மதுரை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை துணைவேந்தர் என்ற முறையில்தான் புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளர். அதன் பின்னணியை இதில் காணலாம்.

அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கு இழுத்தடிப்பு: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் 5 ஆண்டுக்கு முன்பு நடைபெற்ற அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கில் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்க நியமிக்கப்பட்ட நீதிபதி பதவி விலகிய நிலையில், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த ரவிச்சந்திரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த அப்சல் (ஏபிஎஸ்ஏஎல்) நிதி நிறுவனத்தில் நான் உட்பட பலர் ரூ.18.17 லட்சம் முதலீடு செய்தோம். அந்த … Read more

இந்து தமிழ் திசை செய்தி எதிரொலி | சுதந்திரம் பெற்றதிலிருந்து முதல்முறையாக தார் சாலை: ஓசூர் கிராம மக்கள் மகிழ்ச்சி

ஓசூர்: ’இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியாக, சுதந்திரம் பெற்ற பிறகு முதல்முறையாக ஓசூர் நூரோந்து சாமி மலையில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த கோட்டையூர் ஊராட்சிக்குட்பட்ட நூரோந்து சாமி மலை கிராமம், மாவட்டத்தின் கடைகோடியில் உள்ளது. இந்த கிராமம், சுமார் 3,600 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனங்களுக்கு மத்தியில் உள்ளது. இந்த மலை கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மலை அடிவாரத்திலிருந்து … Read more

காவிரி பாசன மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதலை மீண்டும் தொடங்குக: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட நேரடி நெல் கொள்முதலை உடனடியாகத் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ”எக்ஸ்” பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “தஞ்சாவூர் மாவட்டம் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் குறுவைப் பருவ நெல் அறுவடை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காவிரிப் படுகையின் பெரும்பாலான பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் … Read more

எமிஸ் பதிவேற்ற பணியை இன்று முதல் மேற்கொள்வதில்லை: ஆசிரியர் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: எமிஸ் வலைதள பணிகளை இன்று (நவ.1) முதல் மேற்கொள்ள மாட்டோம் என்று டிட்டோ ஜாக் அறிவித்துள்ளது. எமிஸ் வலைதள பணிகளில் இருந்து விடுவித்தல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்,) கடந்த அக்.13-ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது. இதையடுத்து பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் 30-ல் … Read more