நீலகிரி மாவட்டம் முழுவதும் இஎஸ்ஐ திட்டம் அமல்: மண்டல துணை இயக்குநர் தகவல்

கோவை: நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று (நவ.1) முதல் இஎஸ்ஐ திட்டம் அமலாவதாக கோவை இஎஸ்ஐசி சார் மண்டல அலுவலகத்தின் துணை இயக்குநர் (பொறுப்பு) கே.ஆர்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: காப்பீடு செய்யப்பட்ட நபர்கள், அவர்களைச் சார்ந்தோருக்கு மருத்துவப் பயன்கள் மற்றும் நோய் கால பயன், பேறுகால உதவி, தற்காலிக அல்லது நிரந்தர ஊன பயன், சார்ந்தோர் உதவி பயன்கள் வழங்குவதே இஎஸ்ஐ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பத்து அல்லது அதற்கும் … Read more

தேனி | மணல் மேவிய தடுப்பணைகளால் நீர் சேகரிப்பில் பின்னடைவு

தேனி: நீர்வளத்துறை சார்பில் கட்டப்பட்ட பல தடுப்பணைகளில் மணல் மேவி விட்டதால் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் நீரை ஆங்காங்கே நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த பயன்படுத்துவதற்காக தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. மலையடிவாரம், ஓடை, வாய்க்கால், ஆறுகள் என்று நீரோடும் இடங்களில் இதற்கான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், பல தடுப்பணைகள் முறையாக பராமரிக்கப்படாததால் நீரில் அடித்து வரப்படும் மணல்கள், குப்பைகள் தடுப்பணையை மேவி விடுகிறது. குறிப்பாக தேனி வீரப்ப அய்யனார் கோயில் மற்றும் … Read more

பசும்பொன்னில் இபிஎஸ்ஸுக்கு எதிர்ப்பு | “வெறுப்பு இருந்தால் வேறு இடத்தில் காட்டியிருக்கலாம்” – சீமான்

மதுரை: பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷம் எழுந்தது அருவருக்கத்தக்க அநாகரிக செயல் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு மீண்டும் சென்னை செல்ல நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “சாதிய எண்ணம் கொண்டவர் அரசியலுக்கு வந்தால் நாடு நாசமாகிவிடும். பதவி ஆசை அற்ற ஒரு சித்தர் எனக் … Read more

பழநி வின்ச் ரயில் கட்டணம் ரூ.60 ஆக உயர்வு: கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு அழைப்பு

பழநி: பழநி மலைக்கோயிலுக்கு செல்லும் 3-வது வின்ச் ரயில் கட்டணத்தை ரூ.60 ஆக உயர்த்துவது தொடர்பாக நவம்பர் 25-க்குள் பக்தர்கள், பொதுமக்கள் தங்கள் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் செல்லும் வகையில் 3 மின் இழுவை ரயில்கள் (வின்ச்) இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு செல்ல ரூ.10 மற்றும் ரூ.50-ம், மலைக்கோயிலில் இருந்து அடிவாரத்துக்கும் ரூ.10 மற்றும் ரூ.25 கட்டணம் … Read more

தமிழகம் முழுவதும் மாஞ்சா நூல் தயாரிப்பு, விற்பனைக்கு தடை விதித்து அரசாணை வெளியீடு

சென்னை: நைலான், பிளாஸ்டிக் அல்லது செயற்கை பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூல் என பிரபலமாக அறியப்படும் மக்கும் தன்மையற்ற காற்றாடி நூலை தயாரித்தல் விற்பனை செய்தல், சேமித்தல், கொள்முதல் செய்தல், இறக்குமதி செய்தல், பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு முழுமையான தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நைலான், பிளாஸ்டிக் அல்லது செயற்கை பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூல் என … Read more

இனி சனிக்கிழமைகளில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: “மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று, இனிமேல் வருகின்ற வாரம் முதல் சனிக்கிழமைகளில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று தமிழக மருத்துவம் மற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில், சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும் கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனைக்கும் இடையே, பாத … Read more

ஆளுநர் விவகாரம் | “தமிழிசை யோசனையில் முடிவெடுக்க வேண்டியவர் முதல்வர் ஸ்டாலின்தான்” – ஜி.ராமகிருஷ்ணன்

புதுச்சேரி: “தமிழகத்தில் முதல்வர் மீதோ, அரசு மீதோ தவறில்லை. அதிகார வரம்பு மீறி செயல்படுவது ஆளுநர் ரவிதான். பேச்சுவார்த்தை நடத்தமாறு ஆளுநர் தமிழிசை யோசனை பற்றி முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார். புதுச்சேரியில் சிபிஎம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது: ”மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரம், அமைச்சர் நீக்கல் விவகாரம் ஆகியவற்றில் முதல்வர் ரங்கசாமி வாய் திறக்க மறுப்பது ஏன்? முதல்வருக்கு … Read more

Crime: அதிமுக நிர்வாகி கொலையில் திடீர் திருப்பம்! அதிர வைத்த வாக்குமூலம்!

Tamil Nadu Crime News: நெல்லை அருகே உள்ள கொங்கந்தான் பாறை பகுதியை சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகி ஜெயசிங் மரியராஜ் கொலை சம்பத்தில் உண்மை வெளிவந்தது. குற்றவாளி கைது. கொலை வழக்கில் போலீசார் மேற்கொண்ட விசாரணை என்ன? கொலையாளி சிக்கியது எப்படி?

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் இருந்த எந்த அரசும் இவ்வளவு முரண்டு பிடித்தது இல்லை: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: “தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் கொடுப்பதில், கர்நாடகாவில் இதுவரையில் இருந்த எந்த அரசும் இவ்வளவு முரண்டு பிடித்தது இல்லை. ஏதோ ஒரு எதிரி நாட்டுடன் மோதுவது போல நினைக்கின்றனர். அல்லது, தமிழகம் ஏதோ அவர்களிடம் சலுகை கேட்பது போல கருதுகின்றனர்” என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். சென்னையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “காவிரி நீர் விவகாரத்தில், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஒழுங்காக பணியாற்றவில்லை. காரணம் … Read more

No Sollu: பள்ளி மாணவர்களுக்கு சமூக நீதி: தமிழ்நாடு கல்வித்துறைக்கு குவியும் பாராட்டு

Say No To Casteism: சாதிக்கு எதிராக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் புத்தகத்தை வெளியிட்டுள்ள தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் சமூக நீதிக்கு குவியும் பாராட்டுகள்