விருதுநகர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: விருதுநகரில் சாலை விபத்தில் உயிரிழந்த 2 மாணவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.2 இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், வ.புதுப்பட்டி கிராமம் அருகில் இன்று (30-10-2023) மாலை வத்திராயிருப்பிலிருந்து வ.புதுப்பட்டி கிராமத்திற்கு அர்ச்சுனாபுரம் கிராமம் வழியாக மாதவாராயன்குளம் கண்மாய் அருகில் சென்று கொண்டிருந்த சிற்றுந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் … Read more

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழிற்சாலைகள் இயங்குகிறதா? – ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழிற்சாலைகள் இயங்குகிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன் அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாவட்ட வாரியாக நிலவும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பாக மண்டலஇணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர்கள் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,சுற்றுச்சூழல் துறை அமைச்சர்சிவ.வீ. மெய்யநாதன் தலைமையில், சுற்றுச்சூழல் துறை செயலர்சுப்ரியா சாஹூ முன்னிலையில்சென்னை கிண்டியில் உள்ள வாரியஅலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, … Read more

கழிவு நீரிலிருந்து மாசுக்களை அகற்றும் திடப்பொருள்: சென்னை ஐஐடி சாதனை

சென்னை: ஜவுளி உற்பத்தி துறைகள் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து, கழிவு நீர் மாசுக்கள் அதிகளவு வெளியேற்றப்பட்டு வருகின்றன. இந்த கழிவு நீரில் இருந்து மாசுக்களை அகற்றுவதற்கான அதிநவீன கருவிகளை கண்டறியும் முயற்சியில், சென்னைஐஐடி மற்றும் இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து செயல்பட்டு வந்தன. ஆராய்ச்சிக்கு சென்னை ஐஐடி பேராசிரியர் ரஜ்னிஷ் குமார் தலைமை வகித்தார். இக்குழுவில் சென்னை ஐஐடி வேதிப் பொறியியல் துறையை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் சுபாஷ்குமார் சர்மா, பி.ரஞ்சனி மற்றும் … Read more

பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திட்டம்? – எதிர்ப்பு தெரிவித்து நீதின்றத்தில் மனைவி மனு

சென்னை: பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸார் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு தடை விதிக்க கோரியும் அவரது மனைவி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இல்லத்தின் முன்பாக வைக்கப்பட்டிருந்த பாஜக கொடி கம்பத்தை போலீஸார் அகற்றினர். அப்போது போலீஸார் மீது தாக்குதல் நடத்தி, ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்ததாக பாஜக மாநில திறன் மேம்பாட்டு பிரிவின் மாநிலத் தலைவரான … Read more

ஆனைமலை அடுத்த அங்கலகுறிச்சியில் சேதமடைந்த தடுப்பணையை சொந்த செலவில் சீரமைத்த விவசாயிகள்

ஆனைமலை: ஆனைமலை அடுத்த அங்கல குறிச்சியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த சேதமடைந்த தடுப்பணையை விவசாயிகளே நிதி திரட்டி சீரமைத்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே அங்கலக் குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட நரி முடக்கு என்னும் மலையடி வார பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால் தடுப்பணை கட்டப்பட்டது. இதனால் பருவ மழை காலங்களில் தடுப்பணையில் தேங்கும் மழைநீரால், சுற்றியுள்ள விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்தது. பராமரிப்பு இல்லாததால் கடந்த … Read more

அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்வதை தடுக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனைவி மனு

சென்னை: தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்வதை தடுக்கக் கோரி, அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு கட்சியின் கொடிக் கம்பம் நிறுவப்பட்டது. அனுமதியின்றி கொடிக் கம்பம் வைக்கப்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு காவல் துறையினரும் மாநகராட்சி ஊழியர்களும் … Read more

புதுச்சேரி ஆளுநர் மாளிகை சாலையில் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த தடுப்புகள் திடீர் அகற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகை அமைந்துள்ள சாலையில் மக்கள் செல்வதற்கு தடையாக வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் இன்று திடீரென்று அகற்றப்பட்டன. இதை அறிந்த பலரும் பல ஆண்டுகளுக்கு பிறகு அச்சாலையில் பயணித்தனர். கடந்த காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசின்போது, பாஜகவினரை நியமன எம்எல்ஏக்களாக அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம் கடந்த 2017 ஜூலையில் நடந்தது. அப்போது காங்கிரஸார் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு அப்போதைய ஆளுநர் கிரண்பேடி உருவபொம்மை எரித்தனர். … Read more

கருக்கா வினோத்துக்கு 3 நாள் போலீஸ் காவல் – ‘ஆளுநரை மாத்தணும்’ என முழங்கியதால் பரபரப்பு

சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத்தை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதாக பிரபல ரவுடி கருக்கா வினோத் கடந்த 25-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வர முடியாதபடி, அவர் மீது 5 பிரிவுகளின்கீழ் கிண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட வினோத், நீதிமன்ற … Read more

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தை மதுரை மாநகராட்சி கைகழுவி விட்டதா? – கிடப்பில் திட்டங்கள்

மதுரை: மதுரை மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரியார் பஸ் நிலையம் வணிக வளாகம், மல்டிலெவல் பார்க்கிங், வைகை கரை சாலை போன்ற பல்வேறு திட்டங்கள் இன்னும் நடைமுறைக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மாநகராட்சி அதிகாரிகள் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம், புதிய சாலைகளை அமைப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதால் ‘ஸ்மார்ட் சிட்டி’ கைகழுவி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் ரூ.991 கோடியில் நிறைவேற்றப்பட்டன. பெரியார் பஸ் நிலையம் மற்றும் … Read more