பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

சென்னை: பாஜக கொடிக் கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில், அக்கட்சி நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட நான்கு பேரையும் ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க ஆலந்தூர் மாஜிஸ்திரேட் சந்திரபிரபா உத்தரவிட்டார். இந்த வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோரை ஐந்து நாட்கள் விசாரிக்க அனுமதியளிக்க வேண்டும் என தமிழக காவல் துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக தரப்பு வழக்கறிஞர், அமர் பிரசாத் ரெட்டி … Read more

இலவச மின்சாரத்தை முறைகேடாக பெறுவதை தடுக்க நடவடிக்கை

சென்னை: இலவச மின்சாரத்தை முறைகேடாக பெறுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின் வாரியத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக துறை சார் உயரதிகாரிகள் கூறியதாவது: வருவாய் இழப்பைத் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான சில அறிவுறுத்தல்களை மின் வாரியத் தலைவர் வழங்கியுள்ளார். அதன்படி, அனைத்து குடிசை இணைப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும். குடிசைக்காக மின் இணைப்பு பெற்று வீடு கட்டப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட மின் நுகர்வோரை 1 ஏ விலைப் பட்டியின் கீழ் … Read more

தெற்கு ரயில்வேயில் ஓடும் வந்தே பாரத் ரயில்கள் 35 முதல் 49 வயதினர் அதிக அளவில் பயணம்

சென்னை: தெற்கு ரயில்வேயில் ஓடும் வந்தே பாரத் ரயில்களில் 35 வயது முதல் 49 வயதுக்குட்பட்ட பயணிகள் அதிக அளவில் பயணிப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. வந்தே பாரத் ரயில்களை வணிகம்,வேலைக்கு செல்பவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடும்பத்துடன் பயணம் செய்பவர்கள் அதிகம் விரும்புகின்றனர். நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு இடையே 34 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவற்றில், தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல் … Read more

”பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஆளுநர் மாளிகை திட்டமிட்டு பொய் பரப்புகிறது” – பசும்பொன்னில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி

பசும்பொன்: பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஆளுநர் மாளிகை திட்டமிட்டு பொய் பரப்புவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார், முத்துராமலிங்கத் தேவரின் 116-வது ஜெயந்தியை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு தேவர் நினைவிடத்தில் மலர் தூவி, மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன். தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் … Read more

தேவர் ஜெயந்தி: முதல்வர் ஸ்டாலின் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள சிலைக்கு மரியாதை

மதுரை: முத்துராமலிங்கத் தேவரின் 116-வது ஜெயந்தியை ஒட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கள்கிழமை) காலை 8 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து சிலைக்கு கிழே வைக்கப்பட்டு இருந்த முத்துராமலிங்க தேவரின் உருவ படத்துக்கும் முதல்வர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பிடிஆர் பழனிசாமி தியாகராஜன், கீதா ஜீவன், பி.மூர்த்தி, பெரியகருப்பன் உள்ளிட்டோர், திமுக நிர்வாகிகளும் தேவர் சிலைக்கு மரியாதை … Read more

ராமேசுவரம் – காசி ஆன்மிகப் பயணம்: 300 பேரை அழைத்துச் செல்ல அறநிலையத் துறை முடிவு

சென்னை: ராமேசுவரம் – காசி ஆன்மிகப் பயணத்தில் 300 பேரை அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது. ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்க நவ. 20-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2022-2023-ம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் இருந்து, காசி விஸ்வநாத சுவாமி கோயிலுக்கு 200 பேர் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் … Read more

மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இலங்கை மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (அக். 30) பெரும்பாலான இடங்களிலும், நாளை சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். … Read more

நவ.5-ல் திருவள்ளூரில் திமுக பாசறைக் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: சென்னை மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களின் 12 ஆயிரம் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்கும் “வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA2) பயிற்சி பாசறைக் கூட்டம்” வருகிற நவம்பர் 5 அன்று திருவள்ளூரில் தமிழக முதல்வரும், கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 22.03.2023 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் … Read more