பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ரூ.1.55 கோடியில் 2 மண்டபம் அமைக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்த ரூ.1.55 கோடியில் இரண்டு மண்டபங்கள் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வீர முழக்கம் இட்ட சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த ஜமீன் குடும்பத்தில், 1908-ம்ஆண்டு அக்டோபர் … Read more

கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்

சென்னை: முறையான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, சட்ட விதிகளை பின்பற்றியே கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் பட்டியலை முறையாக தயாரித்து, அதில் தகுந்த திருத்தம் செய்யும்வரை கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நடத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி, தாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி … Read more

“சமூக நீதியை பேசும் திமுக அரசு கட்டாயம் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” – அன்புமணி

ராணிப்பேட்டை: “சமூக நீதியை பேசும் திமுக அரசு தமிழகத்தில் கட்டாயம் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ராணிப்பேட்டை பாமக கிழக்கு மாவட்டம் சார்பில் சோளிங்கர், அரக்கோணம் ( தனி) ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி களப்பணியாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி சோளிங்கரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியது: “ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்தை … Read more

“திமுக கையெழுத்து இயக்கத்தால் நீட் ரத்தானால் அரசியலை விட்டு விலகத் தயார்” – திண்டுக்கல் சீனிவாசன் சவால்

திண்டுக்கல்: “திமுகவினர் கையெழுத்து இயக்கம் மூலம் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டால், நான் அரசியலை விட்டு விலகத் தயார்” என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எரியோட்டில் அதிமுக 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று (அக்.27) நடைபெற்றது. எரியோடு பேரூர் கழக செயலாளர் அறிவாளி தலைமை வகித்தார். மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி, தலைமை கழக பேச்சாளர் அம்புஜம் கலந்து … Read more

“வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் காப்பாற்றலாம்” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: “வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் காப்பாற்றலாம்” என முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். சென்னையில் நடைபெற்ற டிவிஎஸ் குழும விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், “வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் காப்பாற்றலாம். அதற்கு அடையாளமாக டி.வி.எஸ் நிறுவனம் உயர்ந்து நிற்கிறது. வாரிசு என்று சொல்வதால் ஏதோ அரசியல் பேசுவதாக யாரும் நினைக்கத் தேவையில்லை. வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் சிறப்பாக செய்து வெற்றிக்கொடி நாட்டலாம் என்றுதான் சொன்னேன். இங்கே ஒரு புத்தகம் டி.வி.எஸ் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கிறது. … Read more

“முதல்வர் ஸ்டாலினின் ஆரியம், திராவிடம் பேச்சுக்கு தேர்தல் லாபமே காரணம்” – அண்ணாமலை விமர்சனம்

நாமக்கல்: “தேர்தல் லாபத்துக்காக ஆரியம், திராவிடம் என முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். நாமக்கல்லில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது: “சாதரண மனிதர்கள் உயர் பதவிக்கு செல்வதுதான் ஜனநாயகத்துக்கு அழகு. ஸ்டாலின், கனிமொழி உயர் பதவிக்கு செல்வது அழகல்ல. சத்தியராயன் 3 ரோவர் சோதனை ஓட்டத்துக்கு நாமக்கல் மண் பயன்படுத்தப்பட்டது பெருமைப்பட வேண்டியது விஷயமாகும். சத்திராயன் … Read more

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவருக்கு ரூ.1.55 கோடியில் 2 மண்டபங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: “பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தின் முகப்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக அஞ்சலி செலுத்தும் வகையில் ரூ.1.43 கோடியில் ஒரு மண்டபமும், மிக முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ரூ.12.54 லட்சம் மதிப்பில் மற்றொரு மண்டபமும் கட்டப்படும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: “தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வீர முழக்கம் இட்ட சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் தேவர் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் … Read more

தமிழகத்தில் தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் முன்பதிவு எப்போது?

கடந்த தீபாவளியில் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் இயக்கியதை போல இந்த தீபாவளிக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் பேருந்துகளை இயக்குமாறு ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

தீபாவளி விடுமுறைக்கு 16,895 பேருந்துகள் இயக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக நவ.9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 16,895 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் 09/11/2023 முதல் 11/11/2023 வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,675 சிறப்புப் பேருந்துகள் என … Read more

“அமித் ஷாவின் புதிய அஸ்திர அறிவிப்பை தெலங்கானா மக்கள் புரிந்துகொள்வர்” – கீ.வீரமணி கருத்து

சென்னை: “தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘நாங்கள் வெற்றி பெற்றால், அடுத்து ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரை முதல்வராக்குவோம்’ என்று ஒரு புதிய அஸ்திர அறிவிப்புத் தூண்டிலைத் தூக்கி அரசியல் மீன் பிடிக்க திட்டமிட்டு அறிவித்துள்ளார். இதனைத் தெலங்கானா மக்கள் புரிந்து வைத்துள்ளனர்” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”நடக்கவிருக்கும் ஐந்து மாநிலத் தேர்தல்களில் பா.ஜ.க. மீண்டும் அந்த மாநிலங்களில் … Read more