போக்குவரத்து கழகம், மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நஷ்டத்தில் இயங்கும்பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு10 சதவீத போனஸ் வழங்கப்படும். இதன்மூலம் மொத்தம் 2.84 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.403 கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் … Read more

‘நீட் ரத்து கோரி பள்ளி மாணவர்களிடம் கட்டாய கையெழுத்து’ – அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக சார்பில் நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்தில் பள்ளி மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை தாமாக முன்வந்து அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகள் பெற்று, அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் திட்டத்தை திமுக தொடங்கியுள்ளது. இதற்காக கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் கையெழுத்து பெறும் இந்த திட்டத்தை திமுக இளைஞரணி … Read more

மின்வாரிய கடிதத்தில் ‘ற’-க்கு பதில் ‘ர’: அலுவலக கடிதங்கள் பிழையின்றி இருக்க நீதிபதி அறிவுரை

மதுரை: அலுவலக கடிதங்கள் இலக்கண ரீதியாகவும், மொழி ரீதியாகவும் பிழைகள் இல்லாமல் இருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்தவர் அன்வர் அலி. இவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “என் மின் இணைப்புக்கான மின் மீட்டர் பழுதாக உள்ளது. இதனால் மின் கணக்கீட்டில் தவறு ஏற்படுகிறது. இதனால் பழுதான மின் மீட்டரை மாற்றவும், தவறான மின் கணக்கீட்டை சரி செய்ய மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று … Read more

பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கியதை ரத்து செய்ய முறையீடு – உயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

சென்னை: இந்தியத் தேர்தல் ஆணையம், பாரதிய ஜனதா கட்சிக்கு தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், இதனை வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவன தலைவருமான டி.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘தேசிய மலரான தாமரையை ஓர் அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி. அது நாட்டின் … Read more

“ஆளுநர் மாளிகை கூறுவது உண்மைக்கு புறம்பானவை” – தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

சென்னை: ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் நிரம்பிய பாட்டில்கள் வீசப்பட்ட சம்பவத்தில் ஆளுநர் மாளிகை தரப்பில் கூறப்படுபவை உண்மைக்கு புறம்பானவை” என்று தெரிவித்துள்ள தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், அச்சம்பவம் மற்றும் அதையொட்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சில விளக்கங்களையும் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “25.10.2023 அன்று மதியம்‌ 3 மணியளவில்‌, கருக்கா வினோத்‌ (42 வயது – E-3 தேனாம்பேட்டை காவல்‌ நிலையத்தின்‌ வழக்கமான குற்றவாளி) என்பவர்‌ சர்தார்‌ படேல்‌ சாலை வழியாக … Read more

கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது யார்? – பாஜக மீது குற்றம்சாட்டும் அமைச்சர் ரகுபதி

சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள கருக்கா வினோத்தை பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பிணையில் எடுத்துள்ளார் என்று அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறிப்பிடும்போது, “ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு எரிபொருள் நிரப்பிய பாட்டிலை வீசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள வினோத் என்ற கருக்கா வினோத் மீது ஏற்கெனவே பல வழக்குகள் இருக்கின்றன. இவரை சிறையில் இருந்து பிணையில் எடுத்த வழக்கறிஞர் பாஜகவில் இருப்பதாக ஒரு தகவல் … Read more

’பாஜகவின் சதி திட்டம்’ சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சூசகம்

ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் பாஜகவுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.   

தமிழக அரசின் அனைத்து பொதுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை போனஸ் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் அனைத்து பொதுத் துறை ஊழியர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “அனைத்து அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும். இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரமிக்க மாநிலமாக தமிழ்நாட்டை நிலை நிறுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்களின் உழைப்பால்தான் நாடே … Read more

ஆளுநர் மாளிகை சம்பவம் | கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு: எஃப்ஐஆர் விவரம்

சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செயய்ப்பட்டுள்ள கருக்கா வினோத் மீது அரசு அலுவலகம் மீது குண்டு வீசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல் துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கியத் தகவல்கள்: அக்.25-ம் தேதி, மதியம் 2.40 மணியளவில் ஆளுநர் மாளிகையில் உள்ள பிரதான நுழைவு வாயில் எண்.1-க்கு நேர் … Read more

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அக்.31-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 31-ம் தேதி மாலை 6.30 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக அரசு கொள்கை முடிவு எடுக்கும்போது அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும். அந்தவகையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், வரும் 31-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தின் விவாதப் பொருள்கள் குறித்து … Read more