ஆளுநர் மாளிகை சம்பவம் | தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கண்டனம்

சென்னை: சென்னை – கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த தாக்குதலுக்கு வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். இது தொடர்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவரும், எம்எல்ஏவுமான எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகளை முன்விடுதலை செய்ய பரிந்துரைத்து தமிழக அரசால் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி, ஆளுநருக்கு அந்த கோப்பு அனுப்பப்பட்டது. 2 மாதங்கள் கடந்துள்ள … Read more

மேல்முறையீடு நிலுவையில் இருந்தாலும் ஆயுள் கைதியின் பரோல் கோரிக்கையை பரிசீலிக்கலாம்: உயர் நீதிமன்றம்

மதுரை: ஆயுள் தண்டனையை எதிர்த்த மேல்முறையீடு மனு நிலுவையில் இருந்தாலும் ஆயுள் கைதியின் பரோல் கோரிக்கையை பரிசீலிக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த லதா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் திருப்பதிராஜன் குற்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ளார். அவருக்கு 40 நாள் பரோல் கேட்டு விண்ணப்பித்தோம். பரோல் விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்து உத்தரவிட்டனர். அந்த உத்தரவை ரத்து செய்து போலீஸ் பாதுகாப்பு … Read more

ஆளுநர்‌ மாளிகைக்கே பாதுகாப்பு இல்லாத அளவுக்கு சட்டம்‌ – ஒழுங்கு மோசம்: ஓபிஎஸ் விமர்சனம்

சென்னை: “ஆளுநர்‌ மாளிகைக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு சட்டம்‌ – ஒழுங்கு மோசமான நிலையில்‌ தமிழ்நாட்டில்‌ உள்ளது. இது கடும்‌ கண்டனத்துக்கு உரியது” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதா ஆட்சிக்‌ காலத்தில்‌ தமிழ்நாடு காவல்‌துறை இங்கிலாந்தில்‌ உள்ள ஸ்காட்லாண்டு யார்டுக்கு இணையாக பேசப்பட்டு, போற்றப்பட்டது. தமிழக காவல்‌ துறை பெருமைக்குரிய காவல்‌ துறையாக விளங்கியது. ஆனால்‌, இன்றைக்கு தமிழ்நாடு காவல்‌ துறை தனது பாரம்பரிய பெருமையை … Read more

ஆளுநர் மாளிகை சம்பவம் | “தமிழகத்தை இனி ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்” – அண்ணாமலை

ஈரோடு: “ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தைப் பார்க்கும்போது, தமிழகத்தை இனி ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் சிவகிரியில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியது: “ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தின் மூலம், தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு மிக மோசமாக உள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு … Read more

“ஆளுநர் மாளிகை முன்பு வீசப்பட்ட பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் இருந்து தீ வரவில்லை” – சென்னை காவல் துறை

சென்னை: “ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயில் முன்பு வீசப்பட்ட பெட்ரோல் நிரப்பிய பாட்டில் பேரிகார்டு அருகே விழுந்து உடைந்ததுவிட்டதால், அதிலிருந்து தீ வரவில்லை” என்று சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா விளக்கம் அளித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “இன்று நண்பகல் 3 மணிக்கு, சர்தார் படேல் சாலையில் … Read more

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீசிய ரவுடி கருக்கா வினோத் – அண்ணாமலை ரியாக்ஷன்

சென்னை ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடிய ரவுடி கருக்கா வினோத்தை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியல் களத்தில் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.   

‘பயோ மெட்ரிக் முறையில் வாக்களிக்கும் வசதி தேவை’ – அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கோரிக்கை

சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்த பணி வரும் 27-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பயோமெட்ரிக் முறையில் வாக்களிக்கும் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 27-ம் தேதி வெளியிடப்பட்டு, அன்றைய தினமே வாக்காளர் பட்டியல் … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: நேற்று (அக்.24) காலை, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர புயல் ஹாமூன் நேற்று மாலை 5.30 மணி அளவில் தீவிர புயலாக வலுவிழந்தது. இன்று (அக்.25) காலை 1.30-2.30 மணி அளவில் புயலாக வலுவிழந்து வங்கதேச கரையை … Read more

Thanjavur News: திருமணமான புதுப்பெண் மர்ம மரணம்! கணவன் அடித்து துன்புறுத்தினாரா?

Tamil Nadu Crime News: திருமணம் ஆன 65வது நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிர் இழந்ததை அடுத்து, பெண்ணின் உறவினர்கள் மாப்பிள்ளையை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம். என்ன நடந்தது தெரிந்துக்கொள்ளுங்கள்.

முத்துராமலிங்க தேவர் குரு பூஜை: பசும்பொன் நினைவிடம் நிர்வாகியிடம் அதிமுக சார்பில் தங்க கவசம் ஒப்படைப்பு

மதுரை: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது குரு பூஜையை முன்னிட்டு 30-ம் தேதி தேவர் நினைவிடத்தில் குருபூஜை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு மரியாதை செலுத்துகிறார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவாலயத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் தங்கக் கவசம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், குருபூஜையின்போது தேவர் சிலைக்கு இந்த தங்கக் கவசம் அணிவிக்கப்படும். மற்ற நாட்களில் இந்த தங்கக் கவசம், அதிமுக சார்பில் … Read more