கணவரின் ரத்த உறவுகள் மீது மட்டுமே வரதட்சிணை வழக்கு பதிய முடியும்: உயர் நீதிமன்றம்

மதுரை: கணவரின் ரத்த உறவுகள் மீது மட்டுமே வரதட்சிணை வழக்கு பதிய முடியும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த அழகர்சாமி, கருப்பாயி என்ற பொன்னழகு, பாலகிருஷ்ணன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “எங்கள் ஊரைச் சேர்ந்த வனிதா என்பவர் 2020-ல் அவர் கணவர் மீது போலீஸில் வரதட்சிணை புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் எந்தத் தொடர்பும் இல்லாத எங்களையும் … Read more

அக்.30-க்கு முன்பு ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி கூடாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

மதுரை: மருது சகோதரர்கள் குருபூஜை, தேவர் குருபூஜை போன்ற நிகழ்வுகளால் அக்டோபர் 30-க்கு முன்பு ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி கொடுக்க வேண்டாம் என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 20 இடங்களில் விஜயதசமி நாளான அக்டோபர் 22-ல் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு … Read more

மதுரையில் 40 ஏக்கர் ரயில்வே நிலத்தை தனியாருக்கு விற்க முயற்சி: சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு

மதுரை: மதுரையில் ரூ.1,200 கோடி மதிப்பிலான 40.61 ஏக்கர் ரயில்வே நிலத்தை தனியாருக்கு விற்கும் முயற்சியை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “இந்தியாவின் முக்கியமான நகரங்களில் இருக்கும் ரயில்வே நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம். அதன்படி மதுரை அரசரடியிலுள்ள … Read more

Sivakasi Firecracker Accident: பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

Sivakasi Firecracker Explosion: சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு. 

70 ஆண்டுகள் பழமையான பீளமேடு ரயில் நிலையம் இடமாற்றம் செய்யப்படுமா?

கோவை: கோவை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பீளமேடு ரயில் நிலையம். இந்த ரயில் நிலையம் உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் ஆகும் நிலையில், 3 நடைமேடைகள், முன்பதிவு மையம் ஆகிய வசதிகளுடன் இயங்கி வருகிறது. கோவை ரயில் நிலையத்தில் இருந்து ஈரோடு, சேலம், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் பீளமேடு ரயில் நிலையத்தை கடந்து செல்கின்றன. சுமார் 90 ரயில்கள் நாள்தோறும் இந்த ரயில் நிலையத்தை கடந்து சென்றாலும், … Read more

தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் ஒரே ஒரு ஆய்வாளர் – தனியாக போக்குவரத்து காவல் நிலையம் அமைக்கப்படுமா?

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே ஒரு போக்குவரத்து காவல் ஆய்வாளர் மட்டுமே உள்ளார். இதனால் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து பிரச்சினைகளை சமாளிப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூரில் ஆய்வாளர்கள் தலைமையில் நிரந்தரமாக போக்குவரத்து காவல் நிலையங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி, ஆன்மீகம், சுற்றுலாவில் முக்கிய மாவட்டமாக தூத்துக்குடி விளங்குகிறது. இதனால் இம்மாவட்டத்தில் போக்குவரத்து பிரச்சினைகளும் அதிகம். ஆனால், தூத்துக்குடி … Read more

‘ஜெய் ஸ்ரீராம்’ வார்த்தையை மதம் சார்ந்ததாக அல்லாமல் வெற்றி உணர்வாகப் பார்க்கிறேன்: தமிழிசை

புதுச்சேரி: “ஜெய் ஸ்ரீராம் என்ற வார்த்தையை வெற்றி உணர்வாக பார்க்கிறேன். அதில், மதம் இருந்ததாக பார்க்கவில்லை” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார். புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் வீரரை நோக்கி எழுப்பபப்பட்ட ஜெய்ஸ்ரீராம் கோஷம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். அவர், “நம் நாட்டின் முயற்சியில் விண்கலம் மேலே எழும்போது ‘வந்தே மாதரம்’ என கோஷம் எழுப்பியதாக … Read more

இலங்கை கடற்படை கைது செய்த 27 மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 27 மீனவர்கள் மற்றும் அவர்கள் படகுகளை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில், இருவேறு சம்பவங்களில் 27 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களின் மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது கவலையளிக்கிறது. அக்.14-ம் தேதி 4 படகுகளில் ராமேசுவரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள், மற்றும் வேறுஒரு … Read more

நீதிமன்றம் உத்தரவிட்டால் 'லியோ' அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படும்: அமைச்சர் ரகுபதி

சென்னை: நீதிமன்றம் உத்தரவிட்டால் ‘லியோ’ அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். “நடிகர் விஜயைப் பார்த்து ஆளும் திமுக அரசு பயப்படுகின்றது. அதனாலேயே அவரது லியோ படத்துகு அதிகப்படியான கட்டுப்பாடுகளை திமுக அரசு விதித்துள்ளது” என முன்னாள் அமைச்சரும் அதிமுக முக்கியப் பிரமுகருமான கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார். திரைத்துறையை திமுக அரசு முடக்குவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த சட்ட அமைச்சர் ரகுபதி, “திரையுலகம் … Read more

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 5 ஆயிரம் புதிய பயனாளிகள் சேர்ப்பு

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் ரூ.1000 ஒரு நாள் முன்னதாகவே பயனாளிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், அக்டோபர் மாதத்தில் புதிதாக 5 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 27-ம்தேதி மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இத்திட்டத்தின்கீழ், 1.06 கோடி தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான உரிமைத் தொகையானது ஒவ்வொருவருக்கும் தலா … Read more