சுங்கத்துறை பணிக்கான போட்டித் தேர்வில் மோசடி செய்த வட இந்திய மாணவர்கள் கைது: விசாரணை கோரும் ராமதாஸ்

சென்னை: சுங்கத்துறை பணிக்கான போட்டித்தேர்வில் மோசடி செய்த வட இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து கடந்த காலத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததா, என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சுங்கத்துறையின் சென்னை அலுவலகத்தில் கடைநிலைப் பணிகளுக்கு 17 பேரை தேர்ந்தெடுப்பதற்காக நேற்று நடைபெற்ற போட்டித் தேர்வில், அதிநவீன தகவல் தொடர்புக் கருவிகளை பயன்படுத்தி வெளியிலிருந்து விடைகளை கேட்டு எழுதியதாக 29 பேரும், ஆள் … Read more

இஸ்ரேலில் இருந்து மதுரை வந்த ஆராய்ச்சி மாணவிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு 

மதுரை: போர் காரணமாக இஸ்ரேல் நாட்டில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்த பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிகளை அவரவர் சொந்த ஊர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பிவைத்தது. இஸ்ரேல் நாட்டில் நடக்கும் போர் காரணமாக ‘ஆப்ரேஷன் அஜய்’ மூலமாக இந்தியா திரும்பியவர்களில் 22 தமிழர்கள் டெல்லியில் இருந்து தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் பர்லான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் 8 பேர் தனி விமானம் மூலம் டெல்லி வந்தபிறகு மதுரை விமான நிலையம் … Read more

கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்கள் கைது: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

சென்னை: “ராமேஸ்வரம் பகுதியிலிருந்து வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 15 பேரை சிங்களக் கடற்படையினர் கச்சத்தீவு பகுதியில் கைது செய்திருக்கின்றனர். அவர்களின் இரு விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து சிங்களக் கடற்படையினர் நிகழ்த்தியுள்ள இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ராமேஸ்வரம் பகுதியிலிருந்து வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் … Read more

தி.மலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாலைவிபத்தில் உயிரிழந்த ஏழு பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பக்கிரிபாளையம் காந்தி நகர் பகுதி, திருவண்ணாமலை – பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் இன்று (அக்.15) காலை காரும், லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு … Read more

கரோனா ஊரடங்கில் கடைகள் மூடப்பட்டதால் வாடகை, குத்தகை பாக்கி ரூ.136 கோடி தள்ளுபடி: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: கரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்தது. இதன் காரணமாக கடந்த 2020 ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலும், 2021 மே, ஜூன் மாதங்களிலும் கடைகள் மூடப்பட்டன. இந்த காலகட்டங்களில் வணிகம் நடைபெறாத நிலையில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான கடைகளின் வாடகை, குத்தகை பாக்கியைத் தள்ளுபடி செய்யக் கோரி நாமக்கல்லில் நகராட்சிக்குச் சொந்தமான கடையை வாடகைக்கு எடுத்துள்ள பொன்னுசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் … Read more

“தமிழை போற்றிக்கொண்டே இருப்போம்” – இந்து தமிழ் திசை ஆசிரியர் கே.அசோகன் கருத்து

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் 2013 செப்.16-ல் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டு நிறைவின்போதும் வாசகர் திருவிழா நடத்தப்பட்டு வந்தது. தமிழ் ஆளுமைகளுக்கு மணிமகுடம் சூட்டி மகிழும் விதமாக 2017 முதல் 2019, 2022 ஆகிய ஆண்டுகளில் ‘தமிழ் திரு’ விருதுகள் வழங்கும் விழாக்களும் நடத்தப்பட்டு வருகிறது. 4-வது ஆண்டாக ராம்ராஜ் காட்டன் வழங்கும் ‘இந்து தமிழ் திசை – யாதும் தமிழே 2023’ விழா சென்னை காமராஜர் அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் … Read more

அண்ணா, கருணாநிதி ஆட்சியில் மகளிர் முன்னேற்றம்: திமுகவின் மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி புகழாரம்

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக மகளிர் உரிமை மாநாட்டில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, உண்மையாக உழைப்போம், வெற்றி நமதே என்று தெரிவித்தார். முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு திமுக சார்பில் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திமுக மகளிரணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நேற்று நடைபெற்றது. தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், … Read more

இஸ்ரேலில் இருந்து 2-வது நாளாக மேலும் 28 தமிழர்கள் வருகை

சென்னை: இஸ்ரேலில் இருந்து 2-வது நாளாக 28 தமிழர்கள் சென்னை, கோவைக்கு நேற்று வந்தனர். பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இதன் காரணமாக இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு ‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. கடந்த 13-ம் தேதி 21 தமிழர்கள் உட்பட 212 பேர் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். டெல்லியில் இருந்து 14 பேர் சென்னைக்கும், 7 … Read more