Dating App-ல் கால் கேர்ள்ஸ் தேடிய பேராசிரியர்! பல லட்சங்களை இழந்தது எப்படி?

லோகாண்டோ இணையதளத்தில் கால் பாய்ஸ் மற்றும் கேர்ள்ஸ் இருப்பதாக விளம்பரம் செய்து தனியார் கல்லூரி பேராசிரியரிடம் பண மோசடி செய்த 9 பேர் கொண்ட கும்பலை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை விரிவாக காணலாம்.   

சிதம்பரம் தீட்சிதர்கள் நடத்தும் குழந்தை திருமணங்களை தடுக்க நடவடிக்கை கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சிதம்பரம் – நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் குழுவினர் குழந்தைகள் திருமணங்கள் நடத்துவதைத் தடுக்க நிரந்தர கண்காணிப்பு குழு அமைக்க கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சரண்யா தாக்கல் செய்த மனுவில், “குழந்தை திருமணங்களை தடுக்க இந்திய அரசு பல்வேறு கொள்கைகளையும், சட்டங்களையும் வகுத்துள்ளது. 1929-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் 1978-ம் ஆண்டு திருத்தம் கொண்டு … Read more

வானிலை முன்னெச்சரிக்கை: வடதமிழகம், டெல்டா மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

சென்னை: “அடுத்து வரும் 4 தினங்களைப் பொறுத்தவரை, வடதமிழக மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும். இன்றும் நாளையும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 3-ம் தேதி திருவள்ளூர், சென்னை தொடங்கி கடலூர் வரையிலான வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்” என்று … Read more

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்படப்போகும் மாவட்டங்கள் இவை தான் – மக்களே உஷார்

தமிழ்நாட்டுக்கு மிக்ஜாம் புயல் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கும் நிலையில், அதனால் பாதிக்கப்பட போகும் மாவட்டங்கள் எவை என்பதை பார்க்கலாம்.   

“சாதி பேதமற்ற திராவிடர்களாக ஒன்றிணைய போராடியவர்” – அயோத்திதாச பண்டிதர் மணிமண்டபத்தை திறந்த முதல்வர் பேச்சு

சென்னை: ”தமிழன், திராவிடன் சொற்களை அடையாளச் சொல்லாக மாற்றியவர் அயோத்திதாசப் பண்டிதர். அவருடைய சிந்தனைகள், இரவு பகலற்ற ஒளியாக இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்குப் பயன்படவேண்டும்” என்று அயோத்திதாச பண்டிதரின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை திறந்து வைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். இது குறித்த செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.1) செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் ரூ.2.49 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள திராவிடப் … Read more

மிக்ஜாம் புயல்: 12 மாவட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு

மிக்ஜாம் புயல் தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்த இருக்கும் நிலையில், அதன் பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் 12 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முதலமைச்சர் முக ஸ்டாலின் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.   

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகள், அமைச்சர்கள் உடன் ஆலோசனை நடத்தினார். அந்தமான் அருகே உருவாகி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னையிலிருந்து 800 கிலோமீட்டர், புதுசேரியிலிருந்து 700 கி.மீ கிழக்கே மையம் கொண்டிருக்கிறது. இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசை நோக்கி … Read more

முறையான வடிகால் வசதி இல்லாததால் திண்டுக்கல்லில் சாலைகளில் தேங்கும் மழை நீர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் முறையான வடிகால் வசதி இல்லாததால், மழை நீர் சாலைகளில் தேங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக் குள்ளாகின்றனர். திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான வார்டுகள் பிரதான சாலைகளை ஒட்டி அமைந்துள்ளன. ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது முறையான வடிகால் வசதி இல்லாததால், நகரின் பல இடங்களில் சாலைகளில் ஆறு போல் மழை நீர் ஓடுவதும்,நீர் செல்ல வழியின்றி சாலைகளிலேயே தேங்குவதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், நேற்று … Read more

சென்னையை தாக்கப்போகும் புயல் – 4 ஆம்தேதி கரையை கடக்கிறது

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காற்றாழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருப்பதுடன் புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

சென்னையில் மருந்தகம், மருத்துவமனைகளுக்குள் புகுந்த மழைநீர்: பொதுமக்கள், நோயாளிகள் அவதி

சென்னை: சென்னையில் மருந்தகம், மருத்துவமனைகளுக்குள் புகுந்த மழை நீரால் பொதுமக்கள், நோயாளிகள் அவதியடைந்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் கன மழை கொட்டி தீர்த்தது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி இருந்தது. பல இடங்களில், மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிஅடைந்தனர். அதேபோல், பல இடங்களில் மழை நீர் மருத்துவமனை வளாகத்திலும் தேங்கிய தால் … Read more