தமிழக செய்திகள்
ODI WC 2023 @ சென்னை | சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி சிறப்பு ரயில்; 12 மணி வரை மெட்ரோ சேவை
சென்னை: சென்னையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித் துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி இன்று (அக்.8) நடைபெற உள்ளது. இப்போட்டியை முன்னிட்டு, சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி இடையே சிறப்புரயில் இயக்கப்படுகிறது. அதன்படி வேளச்சேரியில் இருந்து இரவு 10.40 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டையை இரவு 11.15 மணிக்கு அடையும். சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து இரவு 11.20 … Read more
கர்நாடக அரசை கண்டித்து அரியலூரில் அக்.10-ம் தேதி தமாகா ஆர்ப்பாட்டம்
சென்னை: தமாகா தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்க மறுத்து, தமிழகத்துக்கு தண்ணீர் வழங்காத கர்நாடக மாநில அரசைக் கண்டித்து வரும் 10-ம் தேதி மாலை 3 மணிக்கு, டெல்டா மாவட்ட தமாகா சார்பில் அரியலூர் மாவட்டம் திருமானூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சிறப்புரையாற்றுகிறார். இதில், தமாகா டெல்டா மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்டத் … Read more
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் ரூ.11,239 கோடியில் 234 பேரவைத் தொகுதிகளில் 788 பணிகள்
சென்னை: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் அனுமதி வழங்கும் உயர்நிலை குழுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இத்திட்டத்தின்கீழ் 2023-24-ம் ஆண்டில் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 788 பணிகள் ரூ.11,239 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 2022-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி 110 விதியின் கீழ் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதுகுறித்து முதல்வர் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி … Read more
கோட்டூர் – விக்கிரபாண்டியம் ஊராட்சியில் பாதியில் நிற்கும் தொகுப்பு வீடுகள்: வீதியில் பரிதவிக்கும் பயனாளிகள்
திருவாரூர்: கோட்டூர் ஒன்றியம் விக்கிரபாண்டியம் ஊராட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் பாதியிலேயே நிற்பதால் பயனாளிகள் அவதியடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் விக்கிர பாண்டியம் ஊராட்சியைச் சேர்ந்த 19 பேருக்கு பிரதமர்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடந்த 2019-20-ம் நிதியாண்டில் வீடுகள் கட்டித் தர ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் கட்டப்படும் இந்த தொகுப்பு வீடுகளை பயனாளிகளே கட்டிக் கொள்ள வேண்டும். … Read more
காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம்? – சட்டப்பேரவை கூட்டம் நாளை தொடங்குகிறது
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை முதல் தொடங்குகிறது. காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் 21-ம் தேதியுடன் முடிவடைந்து, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டால் மீண்டும் 6 மாதங்களில் கூட்டப்பட வேண்டும். அக்டோபர் 9-ம் தேதி சட்டப்பேரவை கூடுவதாக, கடந்த மாதம் 20-ம் தேதி பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார். அதன்படி, சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் … Read more
கிராம சபையில் குறைகளை சொன்னவருக்கு கொலை மிரட்டல்: பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை: திருநெல்வேலி ராமையன்பட்டி ஊராட்சி உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் மானூர் வேப்பன்குளத்தை சேர்ந்த சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் மாரியப்பபாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ராமையன்பட்டி ஊராட்சி 4வது வார்டு உறுப்பினராக உள்ளேன். மே 1-ல் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சித் தலைவர் டேவிட்டிடம் எனது வார்டில் உள்ள குறைகளை சரி செய்ய கோரிக்கை … Read more
கர்நாடக பட்டாசு விபத்தில் இறந்த தமிழர்களுக்கு நிதியுதவி – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு-கர்நாடக மாநில எல்லையில் இயங்கிவந்த பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு-கர்நாடக எல்லையில், கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி என்ற இடத்தில் இயங்கிவந்த பட்டாசுக் கடையில் நேற்று (7-10-2023) ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர் என்ற மிகுந்த வேதனையான … Read more
ஊராட்சி தலைவர்களிடம்தான் குடிநீர் திட்ட டெண்டர் அதிகாரம் இருக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்
மதுரை: “குடிநீர் திட்டங்களுக்கான டெண்டர் விடும் அதிகாரம், ஊராட்சித் தலைவர்களிடம்தான் இருக்க வேண்டும். அந்த அதிகாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வழங்கியது சரியல்ல” என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அனைத்து கிராம ஊராட்சித் தலைவர்கள் நலச் சங்கத் தலைவர் எஸ்.எம்.முனியாண்டி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: இந்தியா முழுவதும் கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழியே சுத்தமான குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. … Read more