சென்னையில் வியாழக்கிழமை பள்ளிகளுக்கு மழை விடுமுறை!

சென்னை: சென்னையில் புதன்கிழமை தொடர் கனமழை பெய்து வந்த நிலையில், நாளை (நவ.30 – வியாழக்கிழமை) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னையில், புதன்கிழமை காலை முதலே, விட்டுவிட்டு கனமழை பெய்து வந்தது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் … Read more

“விஜயகாந்த் விரைவில் பூரண உடல் நலம் பெற வேண்டும்” – இயக்குநர் அமீர்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீராக இல்லை என்றும். அவருக்கு அடுத்த சில நாட்களுக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என அவர் சிகிச்சை பெற்று வரும் சென்னை – மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், விரைவில் பூரண உடல் நலம் பெற வேண்டும் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. “திரையுலகின் நான் கண்ட நல்ல மனிதர்களில் முக்கியமானவரான கேப்டன் … Read more

சென்னை, புறநகரில் வெளுத்து வாங்கிய கனமழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சென்னை: திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இரவு நேரத்தில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். காற்றழுத்த தாழ்வுப் பகுதி: இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று … Read more

வானிலை முன்னெச்சரிக்கை: சென்னையில் 2 மணி நேரத்துக்கு தீவிர மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னையில் இன்று (நவ.29) இரவு 10 மணி வரை இரண்டு மணி நேரத்துக்கு தீவிர மழைப்பொழிவுக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னையில், புதன்கிழமை காலை முதலே, விட்டுவிட்டு கனமழை பெய்து வந்தது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் … Read more

உத்தராகண்ட் விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களின் உயிர் காத்த தரணி ஜியோடெக்

Uttarakhand Tunnel Collapse: உத்தராகண்ட் சுரங்கப் பாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டது எப்படி? தமிழ்நாடு திருங்செங்கோட்டைச் சேர்ந்த தரணி ஜியோடெக் இன்ஜினியர்ஸ் (Dharani Geotech Engineers) நிறுவனத்தின் பங்கு என்ன? என்பதை இங்கு முழுமையாக பார்ப்போம்.

பெரியார் சிலை சேதம்: அர்ஜுன் சம்பத் மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

மதுரை: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீதான பெரியார் சிலையை சேதப்படுத்திய வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே உள்ள பெரியார் சிலை கடந்த 2006-ல் சேதப்படுத்தப்பட்டது. பெரியார் சிலையை சேதப்படுத்தியதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட பலர் மீது ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று … Read more

விஜயகாந்த் உடல் நலம் பெற அன்புமணி ராமதாஸ் விழைவு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் முழுமையான உடல்நலம் பெற வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் வழக்கமான மக்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். … Read more

பயிற்சி அர்ச்சகர் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தடை பொருந்தும்: ஐகோர்ட் கிளை

மதுரை: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் பயிற்சி அர்ச்சகர் நியமிப்பதில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால தடை பொருந்தும் என உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் திருக்கோயில் சுதந்திர பரிபாலன ஸ்தலதார்கள் சபை தலைவர் வீரபாகு மூர்த்தி, இணைச் செயலாளர் ஹரிஹர சுப்பிரமணியன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ‘தமிழக அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களை மூத்த அர்ச்சகர்கள் கீழ் பயிற்சி அர்ச்சகர்களாக … Read more

டிச.2, 3 தேதிகளில் சென்னை உள்பட 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதி கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது, “இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி … Read more

“திராவிட மாடல் ஆட்சியல்ல; தந்திர மாடல் ஆட்சி” – திமுக அரசை சாடிய இபிஎஸ்

சேலம்: “திமுகவின் ஆட்சி திராவிட மாடல் ஆட்சியல்ல மாறாக தந்திர மாடல் ஆட்சி” என்று அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் தொடர்ந்து காய்ச்சல் முகாம்களை அதிக அளவில் நடத்தி டெங்கு, ஃப்ளு போன்ற விஷக் காய்ச்சல்களைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாகத் தேவையான … Read more