சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதி முழுமையடையாது – டிடிவி தினகரன் 

சென்னை: “அரசு சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் அனைத்துப் பிரிவினருக்கும் நியாயமாக சென்றடைவதை உறுதிபடுத்தவும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டு வழக்கில் வலுவான ஆதாரங்களை முன்வைப்பதற்கும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசர அவசியமாகிறது. எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதி முழுமையடையாது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து பிரிவினருக்கும் போதிய இட ஒதுக்கீடு … Read more

அதிமுகவுடன் கூட்டணி நீடிக்கும் – பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி உறுதி

சென்னை: “அதிமுக பாஜக கூட்டணி நீடிக்கும். நீடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது” என்று பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியுள்ளார். சென்னையில், கடந்த மாதம் 25-ம் தேதி நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இனி எந்தச் சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, டெல்லி சென்றார். … Read more

காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த வீடு, வீடாக சென்று கண்காணிக்க உத்தரவு

சென்னை: தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகளை முழுமையாக கட்டுப்படுத்தவீடு, வீடாக சென்று கண்காணிக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதார துணை இயக்குநர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால் தினமும் ஏராளமானோர் அரசு மற்றும் தனியார்மருத்துவமனைகளில் அனுமதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் நோய்தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் அக்டோபர் 1-ம் தேதி குடியிருப்பு பகுதிகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப … Read more

AIADMK Vs BJP: டெல்லியில் அண்ணாமலை.. அமைதியாக இருங்கள்.. எச்சரித்த மேலிடம்!

K Annamalai In Tamil Nadu: அதிமுக கூட்டணிஉ முறிவை அடுத்து முதல் முறையா டெல்லி சென்ற அண்ணாமலை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

நற்சிந்தனை நன்னடை | மாணவ சமுதாயத்தின் இதயத்தில் நற்சிந்தனைகளை விதைப்போம்

ஒவ்வொரு குழந்தையும் அன்புமயமாகவே பிறக்கிறது. அடிபட்ட ஆட்டையும், நொண்டி செல்லும் நாயையும் கண்டு பச்சாதாபப்படுகிறது. தாய் கண்ணீர் சிந்தினால் அதுவும் அழுகிறது. நாம்தான் மதிப்பெண்கள் மட்டுமே முக்கியம் என்று குழந்தைகளைச் சுயநலம் உள்ளவர்களாகச் சிதைத்து விடுகிறோம். படிப்பதைத் தவிர வேறு எதைச் செய்தாலும் நேர விரயம் என்று அடிப்பது வரை சென்று விடுகிறோம். உலகம் புத்தகங்களைத் தாண்டியது என்பதைப் புரிய வைக்க வேண்டியவர்கள் நாம்தான். ஆங்காங்கே புத்தகப்பையை மட்டும் சுமக்காமல் கண்களில் கருணையையும், கைகளில் பரிவையும் சுமந்து … Read more

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அரசின் இடஒதுக்கீடு கொள்கை பொருந்தாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அரசின் இடஒதுக்கீடு கொள்கை பொருந்தாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவுப்படி 50 சதவீதத்துக்கும் அதிகமாக சிறுபான்மை மாணவர்களை சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையை மீறியதாக, சென்னையில் உள்ள நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரிக்கு சிறுபான்மை அந்தஸ்தை நீட்டிக்க மறுத்து தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக அரசின் இந்த உத்தரவு மற்றும் 1998-ம்ஆண்டின் அரசாணையை எதிர்த்தும், தங்களது கல்லூரிக்கு நிரந்தர சிறுபான்மை அந்தஸ்து வழங்ககோரியும் அந்த … Read more

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? எடப்பாடி பழனிச்சாமி பகீர் குற்றச்சாட்டு!

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பிரம்மாண்ட கூட்டணி அமைத்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.  

ஆசியப் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஆசியப் போட்டியில் பதக்கம் வென்றுள்ள ப்ரித்விராஜ் தொண்டைமான், ராம்குமார், ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல் ஆகியோருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூகவலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் (ஆடவர் ட்ராப்) பிரிவில் தங்க பதக்கம் வென்று இந்தியாவைப் பெருமைப்படுத்தியுள்ள நம் தமிழகத்தைச் சேர்ந்த ப்ரித்விராஜ் தொண்டைமானுக்கு எனது பாராட்டுகள். மேலும், ஆடவர் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றதற்காகத் தமிழகத்தைச் சேர்ந்த ராம்குமார் ராமநாதன், … Read more