ரூ.500 கோடி அரசு நிலம் அபகரிப்பு! பாஜக மாவட்டத் தலைவர் தலைமறைவு!

கோவையில் அரசு நிலத்தை அபகரித்த விவகாரத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமறைவாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   

அடுத்த கட்ட போராட்டம் விரைவில் அறிவிப்பு: தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் தகவல்

கோவை: மின் கட்டணம் குறைப்பு தொடர்பாக சென்னையில் அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், அடுத்த கட்ட கவன ஈர்ப்பு போராட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என, தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். இது குறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ்,ஜெயபால் ஆகியோர் கூறியதாவது: மின் கட்டண உயர்வு தமிழகத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மிக கடுமையாக பாதித்துள்ளது. நிலை கட்டண உயர்வை கைவிடுதல், உச்ச பயன்பாட்டு நேர மின் … Read more

வந்தே பாரத் ரயில் சேவை காரணமாக வைகை, கோவை விரைவு ரயில் பயண நேரம் அதிகரிப்பு: பயணிகள் கடும் அதிர்ச்சி

சென்னை: வந்தே பாரத் ரயில் சேவை காரணமாக, சென்னை – மதுரை இடையே இயக்கப்படும் வைகை விரைவு ரயில், மதுரை – கோயம்புத்தூர் சந்திப்புக்கு இயக்கப்படும் விரைவு ரயில் ஆகியவற்றின் பயண நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருநெல்வேலியில் இருந்து மதுரை வழியாக சென்னை எழும்பூருக்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 24-ம் தேதி தொடங்கிவைத்தார்.இந்த ரயில், தென் மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வழித்தடத்தில் … Read more

பழனி கோவிலுக்கு செல்வோர் கவனத்திற்கு! இனி இவற்றை கொண்டுபோக முடியாது!

பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது.  பக்தர்கள் கருவறையை படம்பிடிப்பதால் தடை அமலுக்கு வருகிறது.  

பெற்றோரையும், பெரியோரையும் மதிப்பதே சனாதனம்: வெங்கய்ய நாயுடு விளக்கம்

சென்னை: ‘பெற்றோரையும், பெரியோரையும் மதிப்பதே சனாதனம்’ என முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். ஹரிஜன சேவா சங்கம் சார்பில் ஆச்சார்ய வினோபா பாவே ஜெயந்தி, மகாத்மா காந்தி ஜெயந்தி, நிர்மலா தேஷ்பாண்டே ஜெயந்தி மற்றும் சங்கத்தின் தலைவர் சங்கர் குமார் சன்யாலின் 75-வது பிறந்தநாள் கொண்டாட்டம் சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தலைமை வகித்து மகாத்மா காந்தி, ஆச்சார்ய வினோபா பாவே, நிர்மலா … Read more

இடைநிலை ஆசிரியர்கள் 3 நாட்களாக உண்ணாவிரதம்: 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சென்னை: ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி 3 நாட்களாக தொடர்உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களில் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முரண்பாட்டை … Read more

விலைமதிப்பற்ற உயிர்களை தொடர்ந்து காத்திட அனைவரும் ரத்த தானம் செய்ய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: விலைமதிப்பற்ற உயிர்களை தொடர்ந்து காத்திட அனைவரும் ரத்த தானம் செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்த தான தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தின் கருப்பொருள் “தொடர்ந்து இரத்தம், பிளாஸ்மா தானம் செய்வோம், வாழ்வை பகிர்ந்து … Read more

புதிய கால அட்டவணை – தெற்கு ரயில்வே வெளியீடு

சென்னை: தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில், புதிய ரயில்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இடம்பெற்றுள்ளன. ரயில் பயணிகளின் வசதிக்காக, ஒவ்வோர் ஆண்டும் தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி, புதிய கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 11 ரயில்கள், 8 ரயில்கள் பயணிக்கும் தொலைவு நீட்டிப்பு, இரண்டு ரயில்களின் சேவை அதிகரிப்பு, 199 விரைவு ரயில்கள் வெவ்வேறு ரயில் நிலையங்களில் நின்று செல்லும் … Read more

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் தகனம்: ஆளுநர் ஆர்.என்.ரவி, இபிஎஸ் உள்ளிட்டோர் அஞ்சலி

சென்னை: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடல், காவல் துறை மரியாதையுடன் சென்னையில் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பசுமைப் புரட்சியின் தந்தை என்று போற்றப்படும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் (98), கும்பகோணத்தில் 1925-ல் பிறந்தவர். 1960-களில் இந்தியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது, பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்தினார். கோதுமை உற்பத்தி அதிகரிப்பிலும், புதிய நெல் வகைகளை அறிமுகப்படுத்தி, நெல் விளைச்சலில் இந்தியா தன்னிறைவு அடைந்ததிலும் … Read more