ரூ.150 கோடியில் 1000 வகுப்பறை கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.150 கோடியில் 37 மாவட்டங்களில் 1000 புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கிராம ஊராட்சிகளுக்கு இணையவழி வரி, கட்டணங்கள் செலுத்தும் வசதியை தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.800 கோடியில் 6 ஆயிரம் புதியவகுப்பறைகள் கட்டப்படும் என்றுசட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ்முதல்வர் முக..ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டம் குழந்தை நேயப்பள்ளி … Read more

காவிரி விவகாரம் | உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற வேண்டும் – துரைமுருகன் வலியுறுத்தல்

சென்னை: காவிரி விவகாரம் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று கூறியதாவது: கடந்த 13-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு காவிரியில் விநாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த15 நாள் கெடு செப்.27-ம் தேதியுடன் (இன்று) முடிகிறது. இடையே கர்நாடகாவில் போராட்டங்கள் நடந்தாலும், நமக்கு தரவேண்டிய தண்ணீரை தந்துகொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் 2,500 கனஅடி, … Read more

நெல்லை, குமரி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு தினமும் 750 லாரிகளில் கனிமம் எடுத்து செல்லலாம் – உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தினமும் 750 வாகனங்களில் கனிமம் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குமரி மாவட்டம் இளஞ்சிறையைச் சேர்ந்த பினோய், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடக்கும் அரசு மற்றும் தனியார் பணிகளுக்கு கிராவல், ஜல்லிகற்கள், எம்.சாண்ட் குவாரி தூசி மற்றும் மணல் சப்ளை செய்யும் ஒப்பந்தம் பெற்றுள்ளோம். கேரளாவில் கனிமங்கள் எடுக்க அனுமதி இல்லை. இதனால் ஜிஎஸ்டி நடைசீட்டு உள்ளிட்ட உரிய அனுமதியுடன் நெல்லை மற்றும் … Read more

தாய், தந்தைக்கு அடுத்து வணங்க கூடியவர்கள் ஆசிரியர்கள் – கிருஷ்ணகிரியில் அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்

கிருஷ்ணகிரி: தாய், தந்தைக்கு அடுத்து 3வது இடத்தில் வைத்து வணங்க கூடியவர்கள் ஆசிரியர்கள் என கிருஷ்ணகிரியில் நடந்த ஆசிரியர் தினவிழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசினார். கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஆசிரியர் தினவிழா நடந்தது. இந்த விழாவிற்கு தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை வகித்து, சிறப்பாக பணிபுரிந்த 292 ஆசிரியர்களுக்கு பாராட்டு கேடயம் மற்றும் வெள்ளிக் காசுகளை, மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு, சட்டமன்ற உறுப்பினர்கள் பர்கூர் மதியழகன், … Read more

போலீஸ்காரர் அண்ணாமலைக்கு முதல்வராக பேராசை – நத்தம் விஸ்வநாதன் விமர்சனம்

பழநி: ‘இரண்டு ஆண்டுகள் மட்டுமே கட்சியில் இருந்த போலீஸ்காரர் அண்ணாமலைக்கு முதல்வராக பேராசை’ என பழநியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார். திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நேற்று (செப்.26) அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நகர செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடந்தது. முன்னாள் எம்எல்ஏ வேணுகோபாலு, தலைமை கழக பேச்சாளர்கள் மருதராஜ், காளிதாஸ், ஒன்றிய செயலாளர்கள் மாரியப்பன், முத்துச்சாமி உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் முன்னாள் … Read more

‘கிங் மேக்கர் இபிஎஸ்’, ‘புலிகேசி ஆதரவு எதற்கு?’ – மதுரையில் அதிமுக – பாஜகவினர் போஸ்டர் யுத்தம்!

மதுரை: மதுரையில் ‘கிங் மேக்கர் இபிஎஸ்’ என்று அதிமுகவினரும், ‘புலிகேசி ஆதரவு எதற்கு?’ என்று பாஜகவினரும் என நகர் முழுவதும் விதவிதமான வாசகங்கள் கொண்ட போஸ்டர்கள் ஒட்டி மோதி கொள்கின்றனர். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக, அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த கட்சி எந்த பக்கம் தாவும் என்ற பரபரப்பு ஏற்படுவதற்கு முன்பே, பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் கூட்டணிக்கு தலைமை வகித்த அதிமுக வெளியேறியது. அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி, முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, அண்ணா போன்றோரை … Read more

கூட்டணி முறிந்தாலும் அதிமுகவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கக் கூடாது: பாஜக நிர்வாகிகளுக்கு மேலிடம் திடீர் தடை

மதுரை: தமிழகத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிலையில், அதிமுகவினருக்கு எதிராக கருத்து தெரிவிக்கக் கூடாது என பாஜக நிர்வாகிகளை கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி முதன்முறையாக 1998 மக்களவைத் தேர்தலில் உருவானது. அந்தக் கூட்டணி ஓராண்டு மட்டுமே நீடித்தது. மீண்டும் 2004 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தது. அந்தத் தேர்தலில் தோல்வியே கிடைத்தது. இதனால், இனிமேல் பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என அப்போதைய பொதுச் செயலாளர் … Read more

புதிய தலைமைச் செயலக கட்டிட விவகாரம்: லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அதிமுக எம்.பி. ஜெயவர்த்தன் அளித்த புகாரின் அடிப்படையில் நடத்திய விசாரணை அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006-2011-ம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கட்டிடம், கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி திறக்கப்பட்டது. … Read more

வாரிசு சான்றிதழ் தொடர்பான அரசாணையை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மனைவியை இழந்து குழந்தைகள் இல்லாத நிலையில் மரணமடையும் ஆணின் சகோதர, சகோதரிகளுக்கு வாரிசு சான்றிதழ் வழங்க மறுக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் வாரிசு சான்றுகள் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விதிகளை வகுத்து அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை … Read more