பழநி கோயிலில் அபிஷேக பஞ்சாமிர்தம் ரூ.5 விலையேற்றம்: பக்தர்கள் அதிர்ச்சி

பழநி: பழநி முருகன் கோயிலில் அபிஷேக பஞ்சாமிர்தம் எவ்வித முன்னறிவிப்பின்றி திடீரென ரூ.5 விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் அபிஷேக பஞ்சாமிர்தம் அரை கிலோ டப்பா ரூ.35-க்கும், டின் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக மலைக்கோயில் மற்றும் கிரி வீதி உள்ளிட்ட இடங்களில் 10-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் … Read more

Video: மருத்துவமனையில் TTF வாசன்… பைக்கில் வீலிங் அடிக்கும் போது விபத்தில் சிக்கினாரா?

TTF Vasan Accident: பிரபல யூ-ட்யூபரான டிடிஎப் வாசன் காஞ்சிபுரத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் தொடர்பான காட்சிகளும் வெளியாகியுள்ளன.

''நாற்பதுக்கு நாற்பது வெல்வோம்!'' – வேலூர் முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி

வேலூர்: வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று வேலூரில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார். வேலூரில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை: இந்தியாவின் முதல் விடுதலைப் போர் நடப்பதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே, இங்கு நம்முடைய பொதுச்செயலாளரும், பொருளாளரும் குறிப்பிட்டதைப்போல, விடுதலைக் கனல் தெறித்த ஊர் இந்த வேலூர். இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் என்று … Read more

ஹிட்லர் போன்ற சர்வாதிகார ஆட்சியை பிரதமர் மோடி நடத்துகிறார்: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: ஹிட்லர் போன்ற பயங்கரமான சர்வாதிகார ஆட்சியை மத்தியில் நரேந்திரமோடி நடத்துகிறார் என்று நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடி பிறந்த நாளை வேலையின்மை தினமாக புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் கடைபிடித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திராகாந்தி சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் துணைத் தலைவர் தேவதாஸ், பொதுச் செயலாளர் திருமுருகன் உள்பட பலர் கலந்து … Read more

வசூல் செய்து அமைச்சராக இருந்தவருக்கு நேர்மை என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாது: சி.வி.சண்முகத்துக்கு அண்ணாமலை பதில்

கோவை: வசூல் செய்து யாரெல்லாம் அமைச்சர்களாக இருந்தார்களோ, அவர்களுக்கு நேர்மை என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதே தெரியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் 75 ஜோடிகளுக்கு சீர்வரிசையுடன், தமிழ் முறைப்படி சிவனடியார்கள் முன்னிலையில் இன்று (செப்.17) திருமணம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு மணமக்களை அண்ணாமலை வாழ்த்திப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தவரிடம், “அண்ணாமலையின் நடைபயணம் என்பது வசூல் பயணம். அதிமுக … Read more

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு 4.5லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கல்..!

சென்னை ஜெயின் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4.5லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

விஸ்வகர்மா திட்டத்தால் தமிழகம் அதிக பயன்பெற முடியும்: மத்திய இணை அமைச்சர் எஸ்.பி. சிங் பாகேல்

மதுரை: விஸ்கர்மா திட்டதால் தமிழ்நாட்டிற்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என மத்திய இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் தெரிவித்துள்ளார். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் சார்பில் ‘விஸ்வகர்மா ‘ திட்டத்தை பிரதமர் மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் இதற்கான நிகழ்ச்சி மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியிலுள்ள வேளாண் வணிக வளாகத்தில் நடந்தது. மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் எஸ்பிசிங். பாகேல் பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் காந்தி, சிறு,குறு (எம்எஸ்எம்இ) … Read more

திமுகவின் கைக்கூலியாக மாறும் அண்ணாமலை… போட்டுத்தாக்கும் அதிமுகவின் சி.வி.சண்முகம்

CV Shanmugam Attacks Annamalai: அண்ணா பேசாத ஒன்றை பேசியதாக கூறும் அண்ணாமலை, திமுகவின் கைக்கூலியாக மாறிக்கொண்டிருக்கிறார் என்று அதிமுக பொதுக்கூட்டத்தில் சி.வி.சண்முகம் பேசியுள்ளார்.

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.79.70 கோடியில் கட்டப்பட்டுள்ள 1591 வீடுகள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

வேலூர்: வேலூர் மாவட்டம், மேல்மொணவூர், இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் இன்று நடைபெற்ற விழாவில், 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 79 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1591 வீடுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “தமிழகத்தில் உள்ள 29 மாவட்டங்களில் 104 தற்காலிக முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு 19,498 குடும்பங்களைச் சார்ந்த 58,272 நபர்கள் தங்கவைக்கப்பட்டு வசித்து வருகிறார்கள். … Read more

2026-ல் தமிழ்நாட்டில் பாஜக தான் ஆட்சி அமைக்கும் – அண்ணாமலை சவால்

தமிழ்நாட்டில் 2026-ல் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தான் ஆட்சி அமைக்கும் என தமிழ்நாடு மாநில பாஜ தலைவர் அண்ணாமலை உறுதிபட தெரிவித்துள்ளார்.