தமிழக செய்திகள்
அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கான மின்கட்டணம் குறைப்பு? – அரசு பரிசீலிப்பதாக தகவல்
சென்னை: 10 வீடுகளுக்கும் குறைவாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், பொதுப்பயன்பாட்டு மின்கட்டணத்தைக் குறைக்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கான மின்கட்டணத்தை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உயர்த்தியது. அதில், அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப் பயன்பாட்டுக்கான மின்கட்டணமும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், பொது பயன்பாட்டுக்கான மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு ரூ.8-ம், நிரந்தர கட்டணமாக கிலோ வாட்டுக்கு ரூ.100-ம் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த ஜூலை மாதம் மீண்டும் … Read more
சனாதன தர்மம் என்பது நிரந்தரமான கடமைகளின் தொகுப்பு: அவற்றை அழிக்கத்தான் வேண்டுமா என நீதிபதி என்.சேஷசாயி கேள்வி
சென்னை: சனாதன தர்மம் என்பது நிரந்தரமான கடமைகளின் தொகுப்பு என்றும், அவற்றை அழிக்கத்தான் வேண்டுமா எனவும் உயர் நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி கேள்வி எழுப்பியுள்ளார். சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சால், நாடு முழுவதும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, திருவாரூர் அரசு கலைக் கல்லூரியில் சனாதன எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெறும் என்றும், அதில் சனாதன எதிர்ப்பு கருத்துகளை மாணவர்கள் பகிரலாம் என்றும் கல்லூரி நிர்வாகம் சுற்றறிக்கை பிறப்பித்து இருந்தது. இந்த சுற்றறிக்கையை, திருவாரூர் … Read more
தமிழகத்தில் 26 இடங்களில் என்ஐஏ ரெய்டு – கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக சோதனை
சென்னை/கோவை/நெல்லை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் 26 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) நேற்று சோதனை மேற்கொண்டனர். கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகில் கார் வெடித்து, அதை ஓட்டி வந்த ஜமேஷா முபின்(28) என்பவர் உயிரிழந்தார். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கார் வெடிப்பு சம்பவம், பயங்கரவாத தாக்குதல் என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த 11 … Read more
கடலூர் தென்பெண்ணை ஆற்றில் கிடைத்த துப்பாக்கி குண்டுகள் – எஸ்பி விசாரணை
கடலூர்: கடலூர் தென்பெண்ணை ஆற்றில் இறால் பிடிக்க சென்ற சிறுவர்களிடம் போலீஸார் மற்றும் தனியார் பயன்படுத்தும் துப்பாக்கிகளின் குண்டுகள் கிடைத்தன. சிறுவர்களை போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து எஸ்பி ராஜாராம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தென்பெண்ணை ஆற்று பகுதியில் புதுச்சேரி கும்தாமேடு பகுதியைச் சேர்ந்த 12 வயது கொண்ட சிறுவர்கள் இருவர் நேற்று (செப்.16)மாலை கையால் துழவி இறால் பிடித்துக் கொண்டிருந்தனர். … Read more
'இதர மதத்தை பற்றி பேச முதுகெலும்பு இல்லாதவர்கள்' – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
சென்னை: சென்னையில் நடைபெற்ற கணக்கு தணிக்கையாளர்கள் அமைப்பின் 90-வது ஆண்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தார். சனாதனம் குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு பதிலளித்த அவர், “அரசியல் சாசனப்படி, உறுதிமொழி எடுத்துக் கொண்டு அமைச்சராக பொறுப்பு ஏற்கிறோம். அப்படி இருக்கும்போது, என்னதான் கொள்கை இருந்தாலும், ஒரு மதத்தை ஒழிப்பேன் என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. முக்கியமாக அமைச்சருக்கு அது இல்லவே இல்லை. ஒரு பொது மேடையில் இருந்து கொண்டு … Read more
மேட்டூர் அணை நீர் இருப்பு 13 டிஎம்சி ஆக சரிவு: கேள்விக்குறியாகும் சம்பா, தாளடி சாகுபடி!
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர் இருப்பு 13 டிஎம்சியாக குறைந்துள்ளது. இதனால் சம்பா, தாளடி சாகுபடிக்கு தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அன்றைய தினம் நீர்மட்டம் 103 அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 867 கனஅடியாகவும் இருந்தது. விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. பின்னர், அணையில் இருந்து அதிகபட்சமாக 14 ஆயிரம் கன அடி, குறைந்தபட்சமாக 6,500 … Read more
நடிகர் பாலாவின் நிதி உதவியால் மலைக்கிராம மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வசதி
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சோளகனை மலைக்கிராம மக்களின் மருத்துவத் தேவைகளுக்காக நடிகர் பாலா, அவரது சொந்த நிதியில் வழங்கிய ஆம்புலன்ஸ் வாகன சேவையை ஈரோடு மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம் கடம்பூர், குன்றி மலைவாழ் மக்களின் மருத்துவ தேவைகளுக்காக, நகைச்சுவை நடிகர் பாலா அவரது சொந்த நிதியில் இருந்து ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த ஆம்புலன்ஸ் சேவை கடந்த மாதம் பயன்பாட்டுக்கு வந்தது. இதேபோல், மருத்துவ வசதி இல்லாத மலை … Read more
சென்னை மக்களே இரவில் ஜாக்கிரதை… இன்றும், நாளையும் வெளுக்கப்போகுது மழை – வானிலை அப்டேட்
Rain Alert for Chennai: சென்னையின் நகர் பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.