ஆன்மீகம் என்ற பெயரில் சாதி மற்றும் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய மணியன் கைது

RBVS Manian Arrested: அம்பேத்கர், வள்ளுவர் ஆகியோரை இழிவுபடுத்திப் பேசிய ஆர்.பி.வி.எஸ். மணியன் சென்னை தியாகராயர் நகரில் இன்று அதிகாலை கைது.

சென்னையில் அக். 3, 4-ம் தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சியர், காவல் அதிகாரிகள் மாநாடு

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை, வனத் துறை அதிகாரிகள் மாநாடு சென்னையில் அக்.3, 4-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரம், அரசு திட்டங்களின் செயல்பாடு ஆகியவை குறித்து ஆண்டுதோறும் முதல்வர் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும். முதலில் தனித்தனியாகவும், அதன்பிறகு கூட்டாகவும் நடத்தப்படும் மாநாட்டின் நிறைவில் முதல்வர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியும், திட்டங்களை அறிவித்தும் பேசுவார். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான மாநாடு … Read more

இந்து மதத்தை எதிர்க்கவில்லை.. சனாதானத்தைதான் திமுக எதிர்க்கிறது – அமைச்சர் சேகர் பாபு

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஆய்வு செய்த பின்பு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.  

வி.ஹெச்.பி. முன்னாள் மாநில துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைது

சென்னை: விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது செய்யப்பட்டுள்ளார். விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான ஆர்.பி.வி.எஸ். மணியன், கடந்த திங்கள் கிழமை பாரதியும் விவேகானந்தரும் என்ற தலைப்பில் சென்னை தி. நகரில் சொற்பொழிவாற்றினார். அவரது இந்த உரையில் தலைவர்கள் சிலரை அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறி சென்னை மாம்பலம் போலீசார் இன்று அதிகாலை, சென்னை தி நகரில் … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதான மறுநாள் ஆவணங்கள் அழிப்பு? வைரலாகும் வீடியோ!

செந்தில் பாலாஜி கைதான மறுநாள் கோவை மாநகராட்சி மேயரின் கல்பனா ஆனந்தகுமாரின் தம்பி குமார் வீட்டில் ஆவணங்களை கொட்டி குமார் தீ வைத்து எரித்ததாக பிரபல தனியார் நாளிதழிலின் youtube பக்கத்தில் வீடியோ வைரல் ஆகி வருகிறது.  

என்எல்சி-க்கு நிலம் கொடுத்த உரிமையாளர்கள் இழப்பீடு கோரி நீதிமன்றத்தை அணுகினால் சட்டப்படி பரிசீலிக்கப்படும்

சென்னை: என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு கோரி பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகினால் சட்டப்படி பரிசீலிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) மூன்றாம் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக கரிவெட்டி, கரைமேடு, கத்தாழை, மும்முடிச்சோழன், மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் சுமார்25 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், நிலம் கொடுத்த உரிமையாளர்களுக்கு வேலைவாய்ப்பு கேட்டு அளிக்கப்பட்ட மனுவை … Read more

அரசுப் பள்ளிகளின் பராமரிப்பு பணிகளுக்கு மத்திய அரசு ரூ.126 கோடி மானியம் ஒதுக்கீடு

சென்னை: அரசுப் பள்ளிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.126.45 கோடி மானியத்தை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,447 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் வளாகப் பராமரிப்பு செலவினங்களுக்கு, மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப மத்திய அரசு சார்பில் மானியம் அளிக்கப்படும். அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான (2023-24) மத்திய அரசின் நிதி மாநிலத் … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்த வழக்குகளை தீர்ப்புக்காக ஒத்திவைத்தது ஐகோர்ட்

சென்னை: தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்துக்கு எதிராக ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து, அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் … Read more