புதுச்சேரியில் முக்கிய ரவுண்டானாக்களில் வாகனங்கள் செல்ல முடியாத அளவில் பேனர்கள்: மவுனம்காக்கும் ஆட்சியர்

புதுச்சேரி: புதுச்சேரியில் பேனர் தடைச்சட்டம் இருந்தும், முதல்வர் பிறந்த நாளைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் நகரெங்கும் பேனர்கள் வைத்துள்ளனர். குறிப்பாக சிக்னல்கள், முக்கிய ரவுண்டானாக்களில் வாகனங்கள் செல்லஇயலாத வகையில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகனங்களில் செல்வோர் தட்டுத்தடுமாறி செல்லும் நிலை ஏற்படுகிறது. பேனரால் வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடவடிக்கை எடுக்காத ஆட்சியர் மீது டிஜிபியிடம் புகாரும் தரப்பட்டுள்ளது. தமிழகமும், புதுச்சேரியும் நிலவியல் அடிப்படையில் ஒன்றோடு ஒன்று கலந்த பகுதிகளே. … Read more

மாரிமுத்து… நானும் அவரும் அந்தக்காலத்துல… சீமான் சொன்ன உருக்கமான சம்பவம்!

இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலை காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமா வட்டாரத்திலும் சின்னத்திரை வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் சீமான், மாரிமுத்து குறித்து உருக்கமாக பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தன் உயிர்க்கினிய சகோதரர் மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் என்ற செய்தியை அறிந்து பேரதிர்ச்சியும், பெரும் … Read more

”திராவிட மாடல் என்ற சொல்லை கேட்டால் பலருக்கு எரிச்சல் வருகிறது…” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை மலையாளிகள் சங்கத்தின் சார்பில் கேரள மீடியா அகாடமியின் “மீடியா மீட் 2023” நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “என்ட பிரியப்பட்ட மலையாள சகோதரர்களுக்கு ஸ்டாலின்ட சிநேகம் நிறைஞ்ச நமஸ்காரம். சில நாட்களுக்கு முன்பு, ஓணம் திருநாளைக் கொண்டாடிய மலையாள மொழிச் சொந்தங்களுக்கு, மலையாளத்தில் என்னுடைய வாழ்த்துகளைச் சொன்னேன். இதற்கு முன்பு கேரளாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றிலும் நான் மலையாளத்தில் பேசியிருக்கிறேன். நாம் ஒரே மொழி குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அதாவது … Read more

'பாரதம்' என்று சொன்னாலே பதைபதைத்து போவது ஏன்..? நாராயணன் திருப்பதி கேள்வி

சென்னை: “பாரதம் என்று சொன்னாலே சிலர் பதைபதைத்து போவது ஏன்?” என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வியெழுப்பியுள்ளார். இந்தியா என்ற பெயரை ‘பாரத்’ என்று மாற்றுவதற்கு மத்திய அரசு எத்தனித்து வருவதாக கூறப்படுகிறது. பாஜக மூத்த தலைவர்கள் பலரும் இதனை ஆதரித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே சமயத்தில், இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. “இந்தியா என்ற பெயரை மாற்றுவதால் மட்டும் நாட்டின் விலைவாசியும், வேலையில்லா திண்டாட்டமும் … Read more

தருமபுரி | ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்தபடி இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழப்பு

தருமபுரி: தருமபுரி அருகே இன்று மாலை(செப்டம்பர்-8) ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்தபடி இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற 2 இளைஞர்கள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். தருமபுரி அடுத்த மிட்டாதின்னஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமசுந்தரம் மகன் தனுஷ்(21). அதே பகுதியைச் சேர்ந்த ராஜி மகன் பசவராஜ்(22). நண்பர்களான இருவரும் இன்று மாலை தருமபுரி-சேலம் நெடுஞ்சாலையில், இழுவைத் திறன் அதிகம் கொண்ட இருசக்கர வாகனம் ஒன்றில் சென்றுகொண்டிருந்தனர். அவ்வாறு செல்லும்போது அவர்கள், ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்தபடி சென்றுள்ளனர். ஒட்டப்பட்டியைக் கடந்து … Read more

'இளவரசருக்கு டெங்கு… ராஜாவுக்கு எய்ட்ஸ்' திமுகவை மீண்டும் விளாசிய கஸ்தூரி!

சென்னையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெங்கு மலேரியாவை போல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றார். அவரது இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பாஜக உட்பட பல்வேறு கட்சி தலைவர்களும் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நீலகிரியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற ஆ ராசா சனாதனம் என்பது ஹெச்ஐவி, தொழுநோய் போல என கடுமையாக சாடினார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் … Read more

கொடைக்கானல் சுங்க சாவடியில் பாஸ்டேக், ‘க்யூர்ஆர் கோட்’ மூலம் புதிய வசூல் முறை அறிமுகம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுங்க சாவடியில் அடுத்த வாரம் முதல் பாஸ்டேக், க்யூஆர் கோட் போன்ற புதிய வசூல் முறையை அறிமுகப்படுத்தும் முயற்சியில் நகராட்சி இறங்கியுள்ளது. கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வானங்களுக்கும் நகராட்சி சார்பில் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே ரொக்க முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து வகையான வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் செலுத்துவதில் நகராட்சி சார்பில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக, கொடைக்கானல் தாலுகா பகுதியில் வசிப்பவர்கள் உரிய ஆவணங்களை நகராட்சியில் … Read more

காவிரி விவசாயிகளுக்கு நிவாரணம்: ஏக்கருக்கு 40 ஆயிரம் வழங்க ராமதாஸ் கோரிக்கை!

கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை வழங்காமல் இழுத்தடிக்கும் நிலையில் காவிரி டெல்டா விவசாயிகள் பயிரிட்ட நெற்பயிர்கள் காய்ந்து போயுள்ளன. விவசாய நிலத்தில் கால்நடைகளை மேய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தாலும் இன்னும் இரு வாரங்கள் கழித்துதான் விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “காவிரியில் போதிய அளவு தண்ணீர் வராததால், காவிரி பாசன மாவட்டங்களில் … Read more

கலாக்‌ஷேத்ரா விவகாரம்: மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் பணியிடை நீக்கம்!

கலாக்‌ஷேத்ரா கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லை விவகாரம்: மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் மாணவிகள் புகார்.   

சேலம் | மரங்களுக்கு பூஜை செய்து பிறந்தநாள் கொண்டாடிய சமூக ஆர்வலர்

சேலம்: சேலம் ஆட்சியரக வளாகத்தில் உள்ள மரங்களுக்கு பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்த நாள் கொண்டாடிய சமூக ஆர்வலரின் செயலை பலரும் பாராட்டினர். சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 2010ம் ஆண்டு அரிமா சங்கத்தின் சார்பில் 23 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதுதவிர ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் 200 மரங்கள் வரை உள்ளன. மரக்கன்றுகள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு நன்கு வளர்ந்த மரங்களாக மாறி, மக்களுக்கு நிழல் தரும் இடமாக அமைந்துள்ளது. அரிமா சங்கத்தின் நிர்வாகியாக … Read more