தேனி – குமுளி தேசிய நெடுஞ்சாலையில் ‘தலை கீழாக தொங்கும்’ அறிவிப்பு பலகைகளால் குழப்பம்

உத்தமபாளையம்: தேனி – குமுளி சுங்கச் சாலையில் உள்ள பல அறிவிப்பு பலகைகள் சேதமடைந்தும், தலைகீழாகவும் உள்ளன. மேலும் எச்சரிக்கை பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டுநர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். தேனி – குமுளி தேசிய நெடுஞ்சாலையானது தமிழக – கேரள மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக (எண் 183) உள்ளது. சபரிமலை மகரவிளக்கு, மண்டல பூஜை வழிபாட்டுக் காலங்களில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான … Read more

தனித்து விடப்பட்டாரா டிடிவி தினகரன்? அதிமுக வாக்கு வங்கியில் ஓட்டை போட பக்கா பிளான்!

மக்களவைத் தேர்தலில் பாஜக அல்லது காங்கிரஸ் என ஏதாவது ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவோம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருந்தார். தேர்தல் சமயத்தில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை கூட்டணியில் இணைத்துக் கொள்ள பாஜக எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்தும். அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணியில் அமமுக, ஓபிஎஸ் ஆகியோர் இணைந்தால் அது அதிமுகவுக்கு பழைய வலிமையை தரும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறினர். ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி … Read more

உச்சநீதிமன்றத்தில் உதயநிதிக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் – ஹெச்.ராஜா

சனாதானம் குறித்து பேசியவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நிச்சயம் தண்டனை பெறுவார்கள் என பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.  

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழையும், கோவை, நீலகிரி, தேனி, மற்றும் திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான … Read more

தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில், எப்போது கனமழை? வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரைக்குமான வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப்டம்பர் 6) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை செப்டம்பர் 7ஆம் தேதி கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. செம்படம்பர் 8ஆம் … Read more

ஆட்டோவில் நகையை தவறவிட்ட தம்பதி-போலீசாருக்கு துப்பு கொடுத்த ‘துணிவு’ படம்!

ஆட்டோவில் நகையை தவறவிட்ட கண் பார்வையற்ற தம்பதியரின் நகைகளை எடுத்து சென்ற ஆட்டோ டிரைவர் கைது.   

பாரத் என பெயர் மாற்றுவதன் மூலம் இந்தியர்களின் மனதை புண்படுத்தக்கூடாது: திமுக எம்.பி. கனிமொழி

சென்னை: “எல்லா திட்டங்களுக்கும் புரியாத பெயர்களை வைக்கும் ஒன்றிய அரசுக்கு, பாரத் என பெயர் மாற்றுவது சாதாரண ஒன்றாக தோன்றலாம். இப்படி பெயர் மாற்றுவதன் மூலம் இந்தியர்களின் மனதை புண்படுத்தக்கூடாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று திமுக எம்பி, கனிமொழி கூறியுள்ளார். சென்னையில் திமுக எம்பி, கனிமொழி இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றும் திட்டம் குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “அரசியலமைப்புச் சட்டத்தில் அவ்வாறு … Read more

கோவையை அலறிவிடும் "தொடுறா பார்க்கலாம்" போஸ்டர்.. வெறித்தனத்தில் இறங்கிய திமுக

கோவை: அமைச்சர் உதயநிதியின் தலையை வெட்டி வருவதற்கு உத்தரபிரதேச சாமியார் உத்தரவிட்டிருக்கும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கோவை முழுவதும் திமுகவினர் வெறித்தனமான போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். சனாதனத்தை டெங்கு, மலேரியாவோடு ஒப்பிட்டு அதனை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. சனாதனம் என்பதற்கு இந்து மதம் என்ற ஒரு அர்த்தமும் இருப்பதால், இந்து மதத்தினரை அழிக்க வேண்டும் என உதயநிதி பேசியதாக பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். … Read more

’சாதிய ஏற்றத்தாழ்வு தான் சனாதனம், அதை ஒழிக்கணும்’ உதயநிதிக்கு கார்த்திக் சிதம்பரம் ஆதரவு

சாதிய ஏற்றத்தாழ்வுகள் தான் சனாதனம் என தெரிவித்திருக்கும் கார்திக் சிதம்பரம் இறை ஒழிப்பு குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசவில்லை என ஆதரவு தெரிவித்துள்ளார்.  

பழநியில் தக்காளி ரூ.10-க்கு விற்பனை: விலை வீழ்ச்சியால் குப்பையில் கொட்டிய விவசாயிகள்

பழநி: பழநியில் வரத்து அதிகரிப்பால் தக்காளி கிலோ ரூ.10-க்கு விற்பனையானது. விலை வீழ்ச்சியால் தக்காளியை விவசாயிகள் குப்பை கொட்டிச் சென்றனர். திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், பழநி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகளின் வசதிக்காக ஒட்டன்சத்திரம், பழநி என அந்தந்த பகுதிகளிலேயே தக்காளி மொத்த மார்க்கெட் இயங்கி வருகிறது. தற்போது அனைத்து பகுதிகளில் இருந்தும் அறுவடை செய்யப்பட்ட தக்காளி, மார்க்கெட்டுக்கு அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது. வரத்து அதிகம் காரணமாக விலை … Read more