அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தார்மிக ரீதியாக சரியானது அல்ல: உயர் நீதிமன்றம்

சென்னை: ‘செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது குறித்து தமிழக முதல்வர்தான் முடிவெடுக்க வேண்டும்’ என்று தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ‘அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தார்மிக ரீதியாக சரியானது அல்ல’ என்று குறிப்பிட்டுள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன. செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் அனுமதி … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட ஒன்வே சிறப்பு ரயில்… கொச்சுவேலி டூ தாம்பரம் ரூட்டில் ரெடியாருங்க!

தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில் எண் 06048 கொண்ட கொச்சுவேலி டூ தாம்பரம் இடையிலான ஒருவழித்தட சிறப்பு கட்டண ரயில் சேவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் வார இறுதி விடுமுறையில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் இயக்கப்படுகிறது. ஆடி அமாவாசை சிறப்பு யாத்திரை… 12 நாட்கள் பாரத் கௌரவ் சிறப்பு ரயில் இயக்கம்! கொச்சுவேலி டூ தாம்பரம் சிறப்பு ரயில் அதன்படி, வரும் செப்டம்பர் 10ஆம் தேதி ஞாயிறு மாலை 5 மணிக்கு … Read more

செந்தில் பாலாஜி வழக்கு: முதலமைச்சருக்கே முழு அதிகாரம் – உயர் நீதிமன்றம்

துறை ஏதும் இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் நீடிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.  

அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த அயோத்தி சாமியார் உருவ பொம்மை எரிப்பு @ மதுரை

மதுரை: அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த அயோத்தி சாமியாரின் உருவ பொம்மையை மதுரையில் தமிழ்ப் புலிகள் கட்சியினர் தீயிட்டு எரிக்க முயன்றதை போலீஸார் தடுத்து நிறுத்தினர். சனாதனத்தை ஒழிப்போம் என தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அயோத்தி சாமியார் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா என்பவர் அமைச்சர் உதயநிதியின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி என அறிவித்து மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சாமியாரை கண்டித்தும் இன்று … Read more

ரொம்ப கவலையா இருக்கு – உதயநிதிக்கு ஆதரவாக களமிறங்கிய பா.ரஞ்சித் – என்ன சொன்னார் தெரியுமா?

சென்னையில் நடந்த தமுஎகச மாநாட்டில் அமைச்சர் உதயநிதி, டெங்கு மற்றும் மலேரியாவைப் போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இதற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்பட முன்னணி தலைவர்களே உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். உதயநிதிக்கு எதிராக புகார் அளிப்பது, தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதுவது தொடர்ந்து வருகிறது. ஒருபடி மேலே சென்ற அயோத்தி சாமியார், சனாதனம் ஒழிய வேண்டும் என்று … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு ட்ரோன் பயிற்சி… அதுவும் இந்தியாவில் முதல் முறையாக – முழு விவரம்

Chennai Latest: மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு ட்ரோன்களை இயக்க பயிற்சிகள் அளிக்கப்பட்டு, பயிற்சி தேர்வு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பணி வாய்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த தகவல்களை இதில் காணலாம். 

அமைச்சர் உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி கோரி ஆளுநருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்

புதுடெல்லி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி கோரி தமிழக ஆளுநருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது கடிதத்தில், “சனாதன தர்மத்தை பின்பற்றுவர்களுக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் வெறுப்பு பிரச்சாரம் செய்துள்ளார். ‘டெங்கு, மலேரியா, கரோனா வைரஸ் ஆகியவற்றை ஒழிப்பதுபோல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும், வெறுமனே எதிர்க்கக் கூடாது. சனாதனத்தை ஒழிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேச்சு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153ஏ, 153பி, 295ஏ, … Read more

செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி தப்புமா? உயர் நீதிமன்றம் பிறப்பித்த 2 உத்தரவுகள்!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மே 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மூன்று மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை நடத்திய நிலையில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தது. செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த மனு மீதான விசாரணை நடைபெறும். கைது செய்யப்பட்ட பின்னர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. … Read more

உதயநிதி அடித்த கிண்டலில் கடுப்பான சர்ச்சை சாமியாரின் ரியாக்ஷன்

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு அவரது தலைக்கு கூடுதல் விலையையும் அறிவிக்க தயாராக இருப்பதாக சாமியார் ஒருவர் மீண்டும் சர்ச்சையாக பேசியிருக்கிறார்.  

சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சு வெறுக்கத்தக்கது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சு வெறுக்கத்தக்கது என்றும், எந்த மதத்தைச் சேர்ந்த மக்களும் அதை விரும்ப மாட்டார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை அம்பத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “திராவிடம் என்று கூறுவார்கள், பிறகு சனாதனம் என்று கூறுவார்கள். இதை இரண்டையும் கூறி திமுக மக்களை ஏமாற்றி வருகிறது. இதுபோன்ற செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சை எந்த மதத்தைச் சார்ந்தவர்களும் விரும்ப மாட்டார்கள். அவரது பேச்சு … Read more