பள்ளிக்கல்வி பணியாளர் விதியில் முரண்பாடு: தலைமை ஆசிரியர்களை பணியிறக்க முடிவு

சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள் என 3 விதமான நிலைகளில் ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை ஆசிரியர் அல்லது உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என 2 வகையான பதவி உயர்வுகள் வழங்கப்படும். அவ்வாறு முதுநிலை பள்ளிஆசிரியராக பதவி உயர்வு பெற்றால் பட்டதாரி ஆசிரியர்கள்அடுத்த பதவி உயர்வை பெற சில ஆண்டுகள் தாமதமாகும். இதைதவிர்க்க ஆசிரியர்கள் தங்களின்பட்டதாரி ஆசிரியர் பணிமூப்பு அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி தலைமை … Read more

போக்குவரத்து தொழிலாளர்களின் தீபாவளி போனஸில் தொழிற்சங்க தொகையை பிடித்தம் செய்ய தடை கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் தீபாவளி போனஸில் தொழிற்சங்கங்களுக்கான தொகையை பிடித்தம் செய்ய தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசும், போக்குவரத்து கழகங்களும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கோவையை சேர்ந்த நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் அன்புராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் தொழிற்சங்க உறுப்பினர்கள் ஒப்புதலுடன், மாதாந்திரஊதியத்தில் இருந்து சங்கத்தின்சந்தா தொகை … Read more

ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு: அன்புமணி, கி.வீரமணி வலியுறுத்தல் 

சென்னை: ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி மற்றும் திக தலைவர் கி.வீரமணி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை: பாமக தலைவர் அன்புமணி: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி,24 மணி நேரம் கூட முடிவடைய வில்லை. அதற்குள் ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் மீண்டும் மக்களை வேட்டையாடத் தயாராகி … Read more

விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 118 வழக்குகள் பதிவு: சென்னை காவல்துறை

சென்னை: தீபாவளி பண்டிகை தினமான இன்று காலை சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசுகள் வெடித்ததாக, இதுவரை, 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளி பண்டிகையன்று பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகளை சென்னை காவல் துறை அறிவுறுத்தியிருந்தது. தீபாவளி பண்டிகை தினமான இன்று, உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும் என்று காவல் … Read more

பைக்குக்கும் பெயில் போடுகிறேன் என டிடிஎஃப் வாசன் ஆவேசம்..!

விபத்தில் சிக்கிய தனது வாகனத்தை பார்க்க ஆசைபட்டு அனுமதி கேட்டபோது, காவல்துறை அனுமதி மறுத்தது. இதனால் ஆவேசமடைந்த டிடிஎஃப் வாசன், பைக்குக்கும் பெயில் போடுறேன் என புலம்பினார்.   

வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 14-ம் தேதி வாக்கில் உருவாகக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான … Read more

"தெளிவு இருந்தால் சண்டைகளும், போராட்டங்களும் இருக்காது” – சத்குரு ஜக்கி வாசுதேவ்

உங்களுக்குள் தெளிவு வந்துவிட்டால் வாழ்வில் தேவையற்ற சண்டைகளும், போராட்டகளும் ஏற்படாது என தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சத்குரு ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் “தீபாவளி என்பது வெளிச்சத்தின் திருவிழா. மனித வாழ்வில் வெளிச்சம் என்பது மிகவும் முக்கியமானது. ஏனென்றால், வெளிச்சம் இருந்தால் தான் அனைத்தையும் தெளிவாக பார்க்க முடியும். எனவே, வெளிச்சம் என்பது அனுபவ ரீதியாக தெளிவை குறிக்கிறது. நம் மனதிலும், வாழ்க்கையிலும் தெளிவை … Read more

பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்த இருவருக்கு அறுவை சிகிச்சை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: “தீபாவளி பண்டிகையையொட்டி, நேற்று இரவு முதல் இன்று காலை வரை, தமிழகத்தில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையைத் தவிர்த்து வேறு எங்கும், பட்டாசுகள் வெடித்து காயம் ஏற்பட்ட நிலையில், யாரும் அனுமதிக்கப்படவில்லை”, என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தீக்காய சிகிச்சைப் பிரிவை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “தமிழகத்தில் … Read more

தீபாவளியால் தாறுமாறாக உயர்ந்த காற்று மாசு..! கும்மிடிப்பூண்டி,பெருங்குடி படு மோசம்….

தீபாவளியால் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் காற்றின் தரம் படுமோசமாகியுள்ளது. குறிப்பாக கும்மிடிப் பூண்டியில் காற்று மாசுவின் தரம் 200 புள்ளிகளைக் கடந்திருக்கிறது.   

உடல் நலம் பாதித்த பெண்ணை தொட்டில் கட்டி தூக்கி வந்த அவலம் @ உதகை

உதகை: உதகை கேத்தி அருகே ஹாலன்நகர் பகுதிக்கு சாலை வசதியில்லாததால் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை தொட்டில் கட்டி தூக்கி வர வேண்டிய நிலை நீடிக்கிறது. நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட ஹாலன்நகர் பகுதியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள், மலைக் காய்கறி தோட்டங்களுக்கும், கட்டுமானப் பணிகளுக்கும், கூலி வேலைக்கும் சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இக்கிராமத்துக்கு நடைபாதையோ, சாலை வசதியோ இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: … Read more