வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை நீடிக்க வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: நேற்று (நவ.08) மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (நவ.09) அதே பகுதியில் நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், … Read more

உயர் நீதிமன்றத் தீர்ப்பில் ‘ஆன்லைன் ரம்மிக்கு தடை பொருந்தாது’ அம்சம் ஏமாற்றம் அளிக்கிறது: அன்புமணி

சென்னை: “ஆன்லைன் சூதாட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். ஆன்லைன் ரம்மி திறமைக்கான விளையாட்டு அல்ல; அது அதிர்ஷ்டம் சார்ந்த சூதாட்டம் என்பதை உச்ச நீதிமன்றத்தில் நிரூபித்து, ஆன்லைன் ரம்மி தடையை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று எக்ஸ் தளத்தின் தனது பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், … Read more

“கடவுள் மறுப்பு வாசகங்களை மசூதி, தேவாலயம் வெளியே வைக்க ஒப்புக் கொள்வார்களா?” – அண்ணாமலை கேள்வி

சென்னை: “பாஜகவைப் பொறுத்தவரை இந்து, இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு சமமாக இருக்கும் கட்சி. பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்கள் அடங்கிய சிலையை, ஒரு மசூதி அல்லது தேவாலயத்துக்கு வெளியே வைக்க இந்த அரசியல் கட்சிகள் ஒப்புக்கொள்வார்களா?” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “பாஜக எங்கேயும் பெரியாரை அவமதிக்கவில்லை. பெரியார் எங்கு இருக்க … Read more

மீண்டும் வருகிறதா ஆன்லைன் ரம்மி… உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?

Online Rummy Case Issue: திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

“ரூ.3200, ரூ.3400, ரூ.3999… ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளையை அரசு தடுக்காதது ஏன்?” – அன்புமணி

சென்னை: “சட்டத்தை மீறும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, அளவுக்கு அதிகமாக கனிவு காட்டினால், அவற்றின் விதிமீறல்களை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்? ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு கண்டும், காணாமலும் இருப்பதற்கான காரணம் என்ன?” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீபஒளி திருநாளையொட்டி, லட்சக்கணக்கான மக்கள் இன்று முதல் சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்லத் தயாராக … Read more

மூத்த புகைப்படக் கலைஞர் குமரேசன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை: “மூத்த புகைப்படப் பத்திரிகையாளரும், விகடன் முன்னாள் தலைமைப் புகைப்படக் கலைஞருமான சு. குமரேசனின், திடீர் மறைவு புகைப்பட இதழியல் உலகுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மூத்த புகைப்படப் பத்திரிகையாளர், விகடன் முன்னாள் தலைமைப் புகைப்படக் கலைஞர் சு. குமரேசன் நேற்றிரவு மறைவெய்தினார் என்று அறிந்து வருந்துகிறேன். திராவிட இயக்க மேடைகளில் பகுத்தறிவு ஒளிவீசிய மகா மதுரகவி வீ.வே.முருகேச பாகவதரின் … Read more

சேலத்தில் கனமழையால் சிவதாபுரம் பகுதி வீடுகளில் வெள்ளம் – மக்கள் சாலை மறியல்

சேலம்: சேலத்தில் நேற்று முன் தினம் இரவு விடிய விடிய பெய்த மழையால் வெள்ளக் காடாக சிவதாபுரம் மாறியதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலத்தில் நேற்று முன் தினம் மாலை முதல் விடிய விடிய கனமழை பெய்தது. சேலம் மாநகராட்சி 22-வது கோட்டம் சித்தர் கோயில் மெயின் ரோடு, சிவதாபுரத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக, பொது மக்கள் குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியது. சாக்கடை கால்வாய்களை சரிவர … Read more

பிரபல ஏ ப்ளஸ் ரவுடியை கோட்டை விட்ட போலீசார்..! என்கவுண்டருக்கு பயந்து நீதிமன்றத்தில் சரண்

கள்ளத் துப்பாக்கி வைத்து ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டிய வழக்கில் ஆறு மாதம் தேடியும் பிரபல ஏ ப்ளஸ் ரவுடியை கோட்டை விட்ட போலீசார். என்கவுண்டருக்கு பயந்து நடுவீரப்பட்டை சேர்ந்த பிரபல ரவுடி சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.  

அனகாபுத்தூர் மக்களின் வாழ்விட உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்: அரசுக்கு இரா.முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: அனகாபுத்தூர் பகுதியில் வசித்து வரும் குடும்பங்கள் அனைத்துக்கும் மனைப்பட்டா வழங்க வேண்டும். அண்மையில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் என்ற பெயரில் இடிக்கப்பட்ட வீடுகள் முழுமையாக அரசு செலவில் கட்டித் தரப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னர் தாம்பரம் வட்டத்திலும் பிறகு, தமிழ்நாடு அரசு காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பிரித்து இரண்டு மாவட்டங்களாக அமைத்ததால் ஆலந்தூர் வட்டம் என்று … Read more

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு: 9,000 பேருக்கு ஆளுநர் பட்டம் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழாவில் 9,776 பட்டதாரிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கி கவுரவித்தார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 14-வதுபட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக துணை வேந்தர் சோ.ஆறுமுகம் பங்கேற்று அனைவரையும் வரவேற்றார். பின்னர் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பிடித்த 485 மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கி கவுரவித்தார். நேற்றைய விழாவில் 3,318 … Read more