காலாண்டு தேர்வு அட்டவணை: கடைசி நேர ட்விஸ்ட்… தமிழக அரசு பிறப்பித்த விடுமுறை மாற்ற உத்தரவு!

தமிழகத்தில் காலாண்டு தேர்விற்கு கால அட்டவணை தயாரிக்கப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் பக்காவாக முடிவடைந்துவிட்டன. 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு செப்டம்பர் 15 முதல் 27 வரை தேர்வுகள் நடக்கின்றன. சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை குறித்து மக்களின் கருத்துக்கள்காலாண்டு தேர்வும், விடுமுறையும் அதன்பிறகு செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை ஐந்து … Read more

சென்னை தினமலர் அலுவலகத்தில் மலம் வீசிய தபெதிக!

தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை விமர்சித்து பிரபல நாளிதழான தினமலர் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிட கழகம் கட்சியினர் தினமலர் நாளிதழின் அலுவலகத்தின் மீது மலம் வீசி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வை தொடர்ந்து நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு தொடர்ந்து நடத்தப்பட வேண்டும், அதற்கான அறிவிப்பை தமிழக அரசின் தேர்வுகள் துறை உடனடியாக வெளியிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார் இது குறித்து இன்று அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “தமிழகத்தில் 11-ம் வகுப்பு பயிலும், அனைத்துப் பள்ளிகளின் மாணவர்களும் பங்கேற்கும் வகையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வை இந்த ஆண்டு நடத்துவதற்கான அறிவிப்பு … Read more

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி… போட்டுடைத்த சீமான்!

பாஜக – சீமான் பாஜகவும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும் தொடர்ந்து வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் செய்தியாளர்களிடன் பேசிய சீமான், தமிழகத்தில் மோடியை எதிர்த்து போட்டியிட தான் தயார் என்றும், அண்ணாமலையால் தன்னை விட ஒரு ஓட்டு அதிகம் வாங்க முடியுமா என்றும் சவால் விட்டார். பாஜகவை சீண்டிய சீமான் அதற்கு பதில் அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , சீமான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடட்டும் அவர் தோற்றுதான் போவார் என்றார். … Read more

வார இறுதி நாட்களையொட்டி 400 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்

சென்னை: விரைவு போக்குவரத்துக் கழகமேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் 2-ம் தேதி (சனிக்கிழமை), செப்.3 (ஞாயிறு) சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று (செப்.1) சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 200 சிறப்புப் பேருந்துகள் மற்றும் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 400பேருந்துகள் இயக்கப்படும். மேலும், ஞாயிறன்று சொந்த ஊர்களிலிருந்து சென்னை … Read more

மீண்டும் வம்பிழுக்கும் பாஜக அண்ணாமலை: எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவு என்ன?

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அழைத்து பக்கத்தில் உட்கார வைத்ததெல்லாம் சரிதான். ஆனால் தமிழக பாஜகவோ அதிமுகவை தொடர்ந்து சீண்டிப் பார்க்கும் வேலையில் இறங்கி வருகிறது. இது எவ்வளவு காலம் நீடிக்கும் என தெரியாமல் ஒரு கட்சித் தொண்டர்களுக்கும் திகைத்து வருகின்றனர். பாஜக – அதிமுக மோதல்!மத்தியில் ஆட்சியில் இருந்தாலும், பல மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தாலும் தமிழ்நாட்டில் பாஜக தனித்து போட்டியிட்டு எம்.எல்.ஏ, எம்பிக்களை பெறும் சூழல் உருவாகிவிடவில்லை. பழைய தேர்தல் ரிசல்டுகளை … Read more

பிரதமர் மோடி பற்றி ‘இந்து தமிழ் திசை’ வெளியிட்டுள்ள ‘பாரதிய ஜனதா கட்சியின் புதிய சிற்பி’ நூல் – அண்ணாமலை பாராட்டு

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்து அஜய் சிங் ‘பாரதிய ஜனதா கட்சியின் புதிய சிற்பி’ என்ற நூலை எழுதியுள்ளார். இதை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஓர் அங்கமான ‘தமிழ் திசை பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. இந்நூல் குறித்து, நூலாசிரியர் அஜய் சிங் கூறும்போது “இதுவரை பிரதமராக இருந்த எவரும் இப்படி கட்சியின் அடிமட்டத் தொண்டர் நிலையிலிருந்து தலைமைப் பதவிக்கு உயர்ந்ததில்லை. அது வெறும் அதிர்ஷ்டத்தின் மூலமோ, குடிப்பிறப்பின் மூலமோ அவருக்கு வாய்த்துவிடவில்லை. தேர்தலில் … Read more

இன்று காலை ஆதித்யா-எல்1 கவுண்டவுன் தொடக்கம்… சூரியனை ஆய்வு செய்யும் இஸ்ரோ!

இன்று காலை ஆதித்யா-எல்1 கவுண்டவுன் தொடக்கம்… சூரியனை ஆய்வு செய்யும் இஸ்ரோ!

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு குறித்து தலைமை நீதிபதியிடம் முறையிட அறிவுறுத்தல்

சென்னை: சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்பது குறித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தற்போது சென்னை எம்.பி, எம்எல்ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்பாக நிலுவையில் உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம்: … Read more

திடீரென கூடும் நாடாளுமன்றம்: பாஜக அரசு போடும் திட்டங்கள் என்னென்ன?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த கூட்டத் தொடரில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். பிரதமரை பேச வைப்பதற்காக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தும் அளவுக்கு நிலைமை சென்றது. அந்தக் கூட்டத்தொடரில் மக்களவையில் 15 மசோதாக்களும், மாநிலங்களவையில் 5 மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன. மழைக்கால கூட்டத்தொடர் முடிந்த பின்னர் நவம்பர், டிசம்பர் மாதங்களில் குளிர் … Read more