“காசு கொடுத்தால்தான் தண்ணீர் திறக்கிறார்கள்” – மதுரை மாநகராட்சி கூட்டத்தில் திமுக மண்டலத் தலைவரே புகார்
மதுரை: ‘‘காசு கொடுத்தால்தான் வால்வு ஆப்ரேட்டர்கள் தண்ணீர் திறந்துவிடுகிறார்கள்’’ என்று திமுக மண்டலத்தலைவரே மாநகராட்சி கூட்டத்தில் குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தார். இதில் மேயர் இந்திராணி பேசுகையில், ‘‘பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டங்கள், 2021-2022-ம் ஆண்டில் முடிக்க வேண்டியவை. கடந்த காலத்தில் இப்பணிகள் விரைந்து முடிக்காததால் தற்போதுதான் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சியில் மொத்தம் ரூ.2 ஆயிரம் கோடிக்கு பணிகள் … Read more