ஸ்டாலின் சாய்ஸ் இவர் தான் – முட்டுக்கட்டை போடும் ஆளுநர்: ஆர்.எஸ்.பாரதி ஓப்பன் டாக்!

டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தவர்களின் பெயர்களை ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பினார். உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்ட போதும் ஒப்புதல் அளிக்காமல் அதை கிடப்பில் போட்டுள்ளார். தமிழ்நாடு டிஜிபியாக பதவி வகித்த சைலேந்திர பாபு அந்த பதவிக்கு நியமிக்கப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் அதை திமுகவின் அமைப்புச் செயலாளர் உறுதிபடுத்தியுள்ளார். சைலேந்திரபாபுவை சமூக நீதியின் அடிப்படையில் அந்த பதவிக்கு கொண்டு வர ஸ்டாலின் … Read more

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: தமிழக எம்.பி, எம்எல்ஏக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு 

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ள நிலையில், எம்பி, எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் இந்தத் திட்டத்தினைத் தொடங்கி வைத்திட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும் போற்றும் வகையில் நல்லாட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த முதலமைச்சரின் காலை உணவுத் … Read more

மீண்டும் ஃபார்முக்கு திரும்பும் சசிகலா? பாயிண்டை பிடிக்க தயாராகும் வழக்கறிஞர் டீம்!

அதிமுகவின் பொதுச் செயலாளர் நான் தான் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் பிரிந்திருக்கும் அணிகளை விரைவில் இணைப்பேன் என்றும் கூறி வருகிறார். ஆனால் பிரிந்திருப்பவர்களை இணைப்பதற்கான எந்த முயற்சியிலும் அவர் வெளிப்படையாக ஈடுபடவில்லை. இது தொடர்பாக அவரும் , இபிஎஸ், டிடிவி தினகரன் என சம்மந்தப்பட்ட யாரையும் சென்று சந்திக்கவில்லை. ஓபிஎஸ் தரப்பு சந்திக்க நேரம் கேட்டும் கூட கொடுக்கவில்லை. அதிமுகவின் பொதுச் செயலாளர் என உரிமை கோரி வருவதால் தினகரனின் அமமுகவினர் தனது படத்தை பயன்படுத்த … Read more

நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் 12 பேரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

மதுரை: நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் தலைமறைவாக இருக்கும் 12 பேர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நிறுவனம் நியோ-மேக்ஸ். இந்த நிறுவனம் கூடுதல் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக மதுரை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் பாலசுப்பிரமணியன், பழனிச்சாமி, அசோக்மேத்தா பஞ்சய், சார்லஸ், தியாகராஜன், … Read more

சென்னை டூ பெங்களூரு ரூட்… இன்னும் 4 மாசம் தான்… சதாப்தி டூ வந்தே பாரத் ரயில்… வேற லெவல் ஏற்பாடு!

சென்னை டூ மைசூரு ரயில் வழித்தடம் என்பது தென்னிந்தியாவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இதற்கிடையில் ஐடி தலைநகர் என்று அழைக்கப்படும் பெங்களூரு மாநகரும் இணைக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக மூன்று முக்கிய நகரங்களை இணைத்து விடுகிறது. இந்த வழித்தடத்தில் சதாப்தி எக்ஸ்பிரஸ் அதிவேக ரயிலாக இயங்கி வந்தது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவைஇதனை ஓவர்டேக் செய்யும் வகையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆனால் படுக்கை வசதிகள் எதுவுமின்றி இருக்கைகள் உடன் பகல் நேர … Read more

மதுரை அதிமுக மாநாட்டில் மீதமான உணவுகளை அப்புறப்படுத்தும் பணி தொடக்கம்

மதுரை: அதிமுக மாநாடு நடந்த மதுரை வலையங்குளத்தில் சிதறி கிடந்த உணவுகள், பாக்கு மட்டை தட்டுகள் போன்றவற்றை மாவட்டச்செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மதுரை அருகே வலையங்குளத்தில் அதிமுக வீரவரலாறு எழுச்சி மாநாடு கடந்த 20-ம் தேதி நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்காக மாநாட்டுப் பந்தலில் பொங்கல், சாம்பார் சாதம் மற்றும் புளியோதரை போன்றவை மாநாடு … Read more

சுப்ரியா சாகு IAS சொன்ன குட் நியூஸ்… முதலில் அந்த 40 பேருக்கு… கைகோர்த்த அண்ணா பல்கலைக்கழகம்!

முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம்… இந்த பெயரை கேட்டதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் தமிழக அரசு எடுத்துள்ள புதிய முயற்சி என்ற எண்ணம் தான் தோன்றுகிறது. நாம் நினைத்ததை போல தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் செயல்பாடுகளை முடுக்கி விட்டுள்ளார். இவர் நேற்றைய தினம் (ஆகஸ்ட் 21) ”முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்தை” தொடங்கி வைத்தார். அம்பாசமுத்திரம் அருகே உள்ள பூங்கா அமைய இருக்கும் இடத்தில் அரசு முதன்மை செயலாளர் ஆய்வு! தமிழக அரசின் திட்டம் இதன் நோக்கம் … Read more

பழனிசாமிக்கு ‘துரோகத் தமிழர்’ பட்டம் கொடுக்கலாம்: தினகரன் கருத்து

பழனிசாமிக்கு துரோகத் தமிழர் பட்டம் கொடுக்கலாம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மதுரையில் பழனிசாமி நடத்தியது எழுச்சி மாநாடு இல்லை. வீழ்ச்சி மாநாடாகும். அந்த மாநாட்டில் அதிகபட்சமாக 2.50 லட்சம் பேர் தான் கலந்துகொண்டுள்ளனர். பழனிசாமிக்கு புரட்சி தமிழர் என்ற பட்டம் வழங்கியுள்ளனர். இதனால் புரட்சி என்ற வார்த்தைக்கே மரியாதை இல்லாமல் போய் விட்டது. அவருக்கு துரோகத் தமிழர் என்று பட்டம் கொடுக்கலாம். தான் செய்த துரோகத்தாலும், … Read more

விடிய விடிய இன்னைக்கு சம்பவம் இருக்காம்… தமிழ்நாடு வெதர்மேன் வார்னிங்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை வெயில் என வானிலை மாறி மாறி இருந்து வருகிறது. நெல்லை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொடை காலம் முடிந்த பிறகும் கூட் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதேபோல் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் பொறுக்க முடியாத அளவுக்குதான் உள்ளது. தென் தமிழகம் மட்டுமின்றி வட தமிழகத்திலும் வெயிலின் கொடுமை குறைந்தபாடில்லை. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும்பகலில் வெயில் வாட்டி வதைத்தாலும் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் … Read more

யோகிகள்,சன்னியாசிகள் காலில் விழுவது எனது வழக்கம் – நடிகர் ரஜினிகாந்த்

சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் யோகிகள் மற்றும் சன்னியாசிகள் காலில் விழுவது என்னுடைய பழக்கம் என யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து குறித்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்தார்.