மகளிர் உரிமைத் தொகை திட்டம் – 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக அரசு தகவல்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இதுவரை 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினால் 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் … Read more

பாதயாத்திரையில் 'போலீஸ்' எனக் காட்டிய அண்ணாமலை.. "என்ன தம்பி இது".. அலறிய நெல்லை

நெல்லை: நெல்லையில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். ராமஸ்வரத்தில் தொடங்கிய இந்த யாத்திரை தற்போது இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. தான் செல்லும் இடங்களில் எல்லாம் திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் அண்ணாமலை. குறிப்பாக, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு, உயர்கல்வி தரம், டாஸ்மாக் … Read more

தமிழகத்தில் முக அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் முக அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தமிழக உள்துறைச் செயலாளர், சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த அகிலேஷ்குமார் கந்தசாமி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “குற்ற வழக்குகளில் சந்தேகிக்கப்படும் நபர்களை அடையாளம் காண்பதற்காக, முக அடையாள தொழில்நுட்பம், கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி தமிழக முதல்வரால் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த … Read more

ஸ்டாலின் போட்ட உத்தரவு: ஒவ்வொரு மாவட்டத்திலும் கலைஞர் நினைவு சின்னம்!

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு நூலகம், கலைஞர் கோட்டம் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் திமுகவினராலும் தமிழக அரசாலும் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன வகைகளில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னெடுக்கலாம் என்பது குறித்து அமைச்சர்கள் அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். நவீன … Read more

அதிமுக மாநாட்டில் கலந்துகொண்ட 8 பேர் சாலை விபத்துகளில் உயிரிழப்பு: இபிஎஸ் நிதியுதவி அறிவிப்பு

சென்னை: மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டுக்கு வருகை தரும்போதும், மாநாடு முடிந்து வீடு திரும்பும்போதும் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 6 லடசம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு 20.08.2023 அன்று மதுரையில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. கட்சியின் … Read more

"குடையை எடுடி மாலா".. இன்று முதல் தமிழக்தில் மூன்று நாட்களுக்கு கொளுத்த போகும் மழை.. ஜில் அப்டேட்

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த மூன்று தினங்களுக்கு மழை வெளுத்து வாங்க போவதாக தமிழ்நாடு வெதர்மேன் கூல் அப்டேட்டை கொடுத்திருக்கிறார். எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை நாட்களுக்கு மழை விளையாட போகிறது என்பதை இங்கு பார்ப்போம். தமிழகத்தில் கோடை முடிந்தாலும் வெயிலின் உக்கிரம் குறைந்ததாக தெரியவில்லை. அதிலும் கடந்த சில தினங்களாக சென்னை, மதுரை, நாமக்கல், நெல்லை, கோவை என பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. ஆனால் அதற்கு ஈடு … Read more

காவிரி பிரச்சினை: அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: காவிரி பிரச்சினையை கர்நாடக அரசின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இது குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உடனடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் தராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ, அவை அனைத்தையும் கர்நாடக அரசு திட்டமிட்டு செய்து கொண்டிருக்கிறது. காவிரியில் தமிழகத்துக்கு திறந்து விட கர்நாடக … Read more

சைலேந்திரபாபுவுக்கு பெரிய பதவி: குறுக்கே வந்து தடுக்கும் ஆர்.என்.ரவி- உதயநிதியால் சூடானாரா?

தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையத் தலைவர் பதவி நிரப்பபடாமல் உள்ள நிலையில் அந்தப் பதவியில் ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவை கொண்டு வரும் முயற்சிகள் நடைபெற்றன. ஜூன் 30 ஆம் தேதியுடன் டிஜிபி சைலேந்திரபாபு பணி ஓய்வு பெற்ற நிலையில் அவரது அனுபவத்தையும், திறமையையும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஏதேனும் ஒரு பதவி கொடுத்து அவரைத் தக்க வைக்க திட்டமிட்டது. தலைமைச் செயலாளராக இருந்த இறையன்புவும் பணி ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கும் முக்கிய பணி ஒன்றை … Read more

எடை குறைக்கும்போது செயக்கூடாத 7 பொதுவான வாழ்க்கை முறை தவறுகள்

உடல் எடையை குறைப்பது மிகவும் எளிமையானது. உணவைப் பற்றி நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தினசரி ஊட்டச்சத்து நுகர்வுகளை கண்காணிப்பது கொழுப்பு இழப்புக்கு பெரிதும் உதவும்.   

"முதல்வர் ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் ஹிட்லரின் இரண்டு சகோதரர்கள்" – டிடிவி தினகரன் விமர்சனம்

தஞ்சாவூர்: தமிழக முதல்வர் ஸ்டாலினும், பழனிசாமியும் எந்த வேற்றுமை இல்லாமல், ஹிட்லரின் 2 சகோதரர்கள் போல் உள்ளனர் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் விமர்சித்துள்ளார். தஞ்சாவூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறியது: “மதுரையில் எடப்பாடி பழனிசாமி நடத்தியது எழுச்சி மாநாடு இல்லை. அவரது கம்பெனிக்கு வீழ்ச்சி மாநாடாகும். அவரிடமுள்ள முன்னாள் அமைச்சர்கள் 20 ஆயிரம் பேரை அழைத்து வருவார்கள் என்று கூறினார்கள். அவர்கூட உள்ளவர்களே என்னிடம் வருத்தப்பட்டு, … Read more