கோவை | ஆயுத பூஜை, விஜயதசமியையொட்டி பூ வகைகள், பழங்கள் விற்பனை தீவிரம்

கோவை: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகை நாளையும், விஜயதசமி பண்டிகை நாளை மறுநாளும் கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து கோவையில் பூ வகைகள்,பழங்கள் விற்பனை நேற்று தீவிரமாக நடைபெற்றது. இதனால் பூ மார்க்கெட்டில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடர்பாக பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது, ‘‘கோவை பூ மார்க்கெட்டில் நேற்றைய நிலவரப்படி கிலோ அடிப்படையில், செவ்வந்தி (மஞ்சள்) ரூ.160 முதல் ரூ.320 வரையும், கலர் செவ்வந்தி ரூ.200-க்கும், சம்பங்கி ரூ.300-க்கும், அரளி ரூ.500-க்கும், பட்டன் … Read more

ஆயுதபூஜை தொடர் விடுமுறை எதிரொலி: சென்னையில் இருந்து 7 லட்சம் பேர் பயணம்

சென்னை: ஆயுதபூஜை தொடர் விடுமுறை எதிரொலியாக நேற்று பேருந்து, ரயில்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இவற்றின் மூலம் சென்னையில் இருந்து சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணமாகினர். வரும் 23, 24 ஆகிய தேதிகளில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜைக்காக தொடர் விடுமுறைகள் வருகின்றன. இதற்கு முன்னதாக சனி, ஞாயிறு (அக்.21, 22) விடுமுறை இருப்பதால் பெரும்பாலானோர் நேற்று முன்தினம் முதலே சொந்த ஊர்களுக்கு பயணிக்க தொடங்கினர். அவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் … Read more

அமர்பிரசாத் ரெட்டி கைது எதிரொலி… உடனே ஜே.பி. நட்டா அமைத்த குழு – பின்னணி என்ன?

Tamil Nadu Latest: தமிழகத்தில் ஆளும் திமுக அரசால் தமிழ்நாடு பாஜகவினருக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழுவை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (அக். 22) அமைத்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியது: அரபிக் கடலில் உருவானது ‘தேஜ்’ புயல்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நேற்று தொடங்கியது. அதேநேரத்தில், அரபிக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘தேஜ்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை அக். 21-ல் (நேற்று) தொடங்கி உள்ளது. அக். 21-ம்தேதி காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட … Read more

சென்னை பனையூரில் அண்ணாமலை வீடு அருகே இருந்த பாஜக கொடிக் கம்பத்தை அகற்றியது போலீஸ்

பனையூர்: சென்னை அருகே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பாக நடப்பட்ட பாஜக கொடிக் கம்பத்தை போலீஸார் நேற்று அதிகாலை அகற்றினர். இந்த சம்பவத்தின்போது போலீஸாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் 110 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். 5 பேரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர், ‘சீ ஷோர் டவுன்’ 6-வது அவென்யூவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீடு உள்ளது. இவரது வீட்டின் முன்பு நேற்று … Read more

50 ஆண்டுகளை நிறைவு செய்த மகளிர் காவல் துறை: அனைத்து பெண் போலீஸாருக்கும் பதக்கம்

சென்னை: காவல் துறையில் பெண்கள் பணிக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அவர்களைக் கவுரவிக்கும் வகையில் அனைத்து பெண் போலீஸாருக்கும் சிறப்பு பதக்கம் வழங்கப்பட உள்ளது. தமிழக காவல் துறையில் சட்டம் – ஒழுங்கு, குற்றம், போக்குவரத்து, புலனாய்வு உட்பட பல்வேறு பிரிவுகள் உள்ளன. 1.20 லட்சத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பணியில் உள்ளனர். தமிழக காவல் துறையின் சிறப்பான செயல்பாட்டால் ராணுவம், துணை ராணுவத்துக்கு வழங்கப்படும் உயரிய கவுரவமான ‘குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி‘ தமிழக காவல் துறைக்கு … Read more

வலுப்பெறும் 'தேஜ்': சென்னை, பாம்பன் உட்பட 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதைக் குறிக்கும் வகையில். சென்னை, பாம்பன் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதேநேரத்தில், அரபிக் கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ‘தேஜ்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த நிலையில், இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு … Read more

புதிய வாக்காளர்கள் சேர்க்கையில் தீவிரம் காட்ட வேண்டும்: பாமகவினருக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: “தமிழகத்தில் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 27-ம் தேதி வெளியிடப்பட்டு, டிசம்பர் 9-ம் நாள் வரை புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணிகள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் உட்பட்ட பகுதிகளில் உள்ள தகுதியானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, வாக்குரிமை பெற்றுத் தரும் பணிகளில் பாமகவினர் தீவிரம் காட்ட வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய … Read more

இனி பாதி பேருக்கு 1000 ரூபாய் வராது… குண்டை தூக்கிப்போடும் குஷ்பு – காரணம் என்ன?

Kalaignar Magalir Urimmai Thogai: குடும்ப தலைவிகளுக்கான 1000 ரூபாய் உரிமைத் தொகை இனி வரும் காலங்களில் பலருக்கும் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது என்று பாஜகவின் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.

"பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் முதல்வர் ஸ்டாலினுக்கு அச்சம் வந்துவிட்டது" – இபிஎஸ் சாடல்

சேலம்: “பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுகிறது என்று கூறிய பிறகுதான், இஸ்லாமியர்கள் குறித்த நினைவே முதல்வர் ஸ்டாலினுக்கு வருகிறது. பாஜகவிலிருந்து அதிமுக விலகியது என்றவுடன், சிறுபான்மை மக்கள் அதிமுக பக்கம் சாயந்துவிடுவார்கள் என்ற அச்சம் முதல்வருக்கு வந்துவிட்டது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அங்கு … Read more