அக்.23-ல் திமுக அனைத்து அணிச் செயலாளர்கள் கூட்டம்

சென்னை: வருகிற 23.10.2023 திங்கட்கிழமை அன்று மாலை 6.30 மணியளவில், திமுகவின் அனைத்து அணிச் செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள திமுக அழைப்பு விடுத்துள்ளது. அது தொடர்பாக அக்கட்சியின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை ஒன்றிய அரசுக்கு உணர்த்தும் வகையில், தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பில், திமுக இளைஞர் அணி, … Read more

சந்திரபிரியங்கா அமைச்சர் பதவி நீக்கத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்: அரசிதழில் வெளியிட்டது புதுச்சேரி அரசு  

புதுச்சேரி: சந்திரபிரியங்கா அமைச்சர் பதவி நீக்கத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில், அதனை அரசிதழில் புதுச்சேரி அரசு வெளியிட்டது. புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த சந்திரபிரியங்கா போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்து வந்தார். இவரிடம் போக்குவரத்து, ஆதி திராவிடர் நலம், வீட்டு வசதி, தொழிலாளர் நலன், வேலை வாய்ப்பு, கலைப் பண்பாடு, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகள் இருந்து … Read more

சேலத்தில் நவம்பர் 22 முதல் 12 நாட்களுக்கு புத்தகத் திருவிழா: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சேலம்: சேலம் மாவட்ட புத்தகத் திருவிழா, நவம்பர் 22-ம் தேதி முதல் டிசம்பர் 3-ம் தேதி வரை, 12 நாட்களுக்கு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் வாசிப்புப் பழக்கத்தை அதிகரித்து, அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் வகையில், புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்லும் நோக்கத்தோடு, மாவட்டங்களில் புதிய … Read more

“பெரியார் தான் காரணம்” சர்ச்சையில் சிக்கிய அடையார் ஆனந்த பவன்! என்ன நடந்தது?

அடையார் ஆனந்தபவன் உரிமையாளர் அளித்துள்ள பேட்டி ஒன்று தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதற்கு என்ன காரணம்? அதன் பின்னணி என்ன என்பதை தற்போது காணலாம்.   

"மத்திய அரசு நீட் விவகாரத்தில் அலட்சியம் காட்டினால் ஜல்லிக்கட்டு போன்ற போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்" – உதயநிதி

மத்திய அரசு நீட் விவகாரத்தில் அலட்சியம் காட்டினால் ஜல்லிக்கட்டு போன்ற வீரமிக்க ஒரு போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கத்தை சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இது குறித்து பேசிய அவர், “இந்த நீட் ஒழிப்புக்கான கையெழுத்து இயக்கத்தை திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கி இருந்தாலும், இதை மாபெரும் மக்கள் இயக்கமாகதான் முன்னெடுத்து செல்லவேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டு … Read more

எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் திமுக பெரும் விலை கொடுக்க  வேண்டியிருக்கும் – அண்ணாமலை

தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசை சாடியிருக்கிறார். சென்னையை அடுத்த பனையூரில் அண்ணாமலை வீட்டின் அருகே அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தை, இரவோடு இரவாக போலீஸார் அகற்றினர். இதையடுத்து, பாஜக கொடிக்கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில், திமுக அரசுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய … Read more

மாணவர்களின் ஆடையை கிழிக்கும் மாடலாக உள்ளது ஒன்றிய அரசு-அமைச்சர் அன்பில் மகேஷ்

நீட் தேர்வு எழுத வரும் மானவர்களின் ஆடையை கிழித்தெரியும் மாடலாக ஒன்றிய அரசின் மாடல் உள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

திருப்பத்தூர் | கரும்பு ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது: விவசாயிகள் கோரிக்கை

திருப்பத்தூர்: கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கூடாது என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வேளாண்மை இணை இயக்குநர் கண்ணகி, தோட்டக்கலை துறை துணை இயக்குநர் தீபா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் முருகேசன், வேளாண்மை துணை இயக்குநர் பச்சையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். … Read more

எய்ம்ஸூக்கு ’செங்கல்’… நீட்டுக்கு ’முட்டை’ – அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சம்பவம்

நீட் தேர்வுக்கு விலக்குக்கோரி தொடங்கப்பட்டுள்ள நீட் கையெழுத்து இயக்க விழாவில், எய்ம்ஸூக்கு செங்கல்லை காண்பித்ததைப் போல் நீட் தேர்வுக்கு முட்டையை காண்பித்து விமர்சித்திருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  

''வடகிழக்குப் பருவமழை தொடங்கியது'' – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாடு, கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். … Read more