முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்… போதை நபரை தட்டித் தூக்கிய போலீஸ்..

முதலமைச்சர் வீட்டுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். உதயநிதியும் அவருடன் வசித்து வந்த நிலையில் அமைச்சரனாதால் அவரை பார்க்க வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் காணப்பட்டதால் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் பங்களாவுக்கு இடம்பெயர்ந்தார். முதலமைச்சர் வீட்டு முன்பு தற்போது 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு … Read more

சிசிடிவி கேமரா பொருத்தி குற்றவாளிகளை பிடிக்க உதவியோருக்கு மதுரை எஸ்பி பாராட்டு

மதுரை: மதுரை மாவட்டத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி குற்றவாளிகளை பிடிக்க காவல் துறையினருக்கு உதவி புரிந்தோருக்கு இன்று மதுரை மாவட்ட எஸ்பி பாராட்டி சான்றிதழ் வழங்கினார். மதுரை மாவட்ட எல்லையில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் குடியிருப்புகள், கடைகள், சாலை சந்திப்பு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும், திருடிய சொத்துக்கள் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு வாகன விபத்து வழக்குகளில் குற்றவாளிகளை … Read more

12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழக அரசு இன்று அதிரடியாக 12 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி தொழில் துறை ஆணையராக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி ராஜாராமன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி பூஜா குல்கர்னியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வருவாய் நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக பிரகாஷ் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக ஸ்ரீவெங்கட பிரியா … Read more

அரசியல் மிரட்டல்களுக்கு பயன்படுத்தப்படும் அமலாக்கத்துறை – ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் குற்றச்சாட்டு

மதுரை: அரசியல் ரீதியாக மிரட்டுவதற்கு அமலாக்கத் துறை பயன்படுத்தப்படுகிறது என ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன், மதுரை கிருஷ்ணய்யர் அரங்கில் வழக்கறிஞர்கள் மத்தியில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) மற்றும் பொது சிவில் சட்டம் குறித்து இன்று பேசினார். அப்போது ஹரிபரந்தாமன் பேசியதாவது: பிஎம்எல்ஏ சட்டம் ஒரு கருப்பு சட்டம். அந்தச் சட்டத்தில் போலீஸாரிடம் அளிக்கப்படும் வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ளலாம் என்பது குற்றவியல் நடைமுறைக்கு எதிரானது. … Read more

ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே மீண்டும் படகு சேவை.. அமைச்சர் எ.வ வேலு சொன்ன சூப்பர் தகவல்!

குஜராத்தின் கெவாடியாவில் நடைபெற்ற கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் பசுமை வளத் துறைமுகத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கடலூ மாவட்டத்தில் இந்த பசுமை வளத் துறைமுகத்தை உருவாக்கவும், தொழிற்சாலைகளுக்கு தேவையான சரக்குகளை கையாளக்கூடிய வகையில் திறன் கொண்டதாக இந்த பசுமை வளத் துறைமுகத்தை அமைக்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருப்பதாக கூறினார். பசுமை வளத்துறைமுகத்தில் ஆண்டுக்கு 10 மில்லியன் … Read more

தாம்பரம் கமிஷ்னர் மீது புகார் அளித்த பத்திரிக்கையாளர் இரவில் கைது

போலி என்கவுண்டருக்கு எதிராக மனித உரிமை ஆணையத்திடம் தாம்பரம் கமிஷனர் மீது புகார் அளித்த பத்திரிகையாளர் வாராகி நேற்று இரவு திடீர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரின் பழிவாங்கும் செயல் என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.  

மதுரை – குருவாயூர் – மதுரை எக்ஸ்பிரஸ்: 3 விரைவு ரயில்கள் ஒற்றை ரயிலாக இணைப்பு

மதுரை தற்போது தினசரி இயக்கப்பட்டு வரும் குருவாயூர் – புனலூர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ், மதுரை – செங்கோட்டை – மதுரை எக்ஸ்பிரஸ், செங்கோட்டை – கொல்லம் – செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, மதுரை – குருவாயூர் – மதுரை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ஒரே ரயிலாக, மதுரைக்கும், குருவாயூருக்கும் இடையே இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்தப் புதிய ரயில் மதுரையிலிருந்து வரும் 27-ம்தேதி அன்றும், குருவாயூரிலிருந்து 28-ம் தேதியன்றும் தனது சேவையைத் … Read more

மகளை சைக்கோ பாணியில் துன்புறுத்திய கணவன்.. ஒரே போடாக போட்ட தந்தை.. மாப்பிள்ளை காலி!

விருதுநகர்: தன்னை பெரிய சைக்கோ என்று நினைத்துக் கொண்டு கட்டிய மனைவியை சித்ரவதை செய்து வந்த இளைஞரை மாமனார் அடித்தே கொன்ற சம்பவம் விருதுநகரையே வெலவெலக்க வைத்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி மீனாட்சியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (38). இவரது முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில் மாசாணம் (28) என்ற ஏழைப் பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முடிந்து 6 வருடங்கள் ஆகிறது. இதனிடையே, அண்மைக்காலமாக தனது மனைவி … Read more

“என்ன ஜென்மம்டா நீங்க எல்லாம்..” வகுப்பறையில் மனித மலம்-கொந்தளித்த பிரபல நடிகர்..!

அரசு பள்ளி வகுப்பறை பூட்டுகளுக்கு மனித மலத்தை பூசியும் குடிநீர் தொட்டி சேதப்படுத்தி மர்ம நபர்கள் அட்டகாசம் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் தாடி பாலாஜி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.   

திமுக தேர்தல் அறிக்கையில் 505 ‘வடைகள்’ – நெல்லை நடைபயணத்தில் அண்ணாமலை பேச்சு

திருநெல்வேலி: “தாமிரபரணியை சுத்தம் செய்ய தனியாக பட்ஜெட் தாக்கல் செய்து நிதி ஒதுக்க வேண்டும்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார். திருநெல்வேலி மாவட்டத்தில் ‘என் மண் என் மக்கள்’ என்ற தலைப்பிலான நடைபயணத்தை அவர் தொடங்கினார். பாளையங்கோட்டை- திருச்செந்தூர் சாலையிலுள்ள பெல் மைதானம் அருகே தனது நடைபயணத்தை தொடங்கிய அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து வாட்டர் டேங்க், பாளையங்கோட்டை மார்க்கெட் சாலை வழியாக சென்று அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை … Read more