ஒட்டன்சத்திரம் அருகே ஓட்டுநர் கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த அதிமுக நிர்வாகி கைது

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிகையில் ஓட்டுநரை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.பி.நடராஜை வெள்ளிக்கிழமை (அக்.13) சென்னையில் போலீஸார் கைது செய்தனர். ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிகை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (30). இவர் ஒட்டன்சத்திரம் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.பி.நடராஜ் என்பவரிடம் கார் ஓட்டுநராகவும், அவருக்கு சொந்தமான பால் நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் வேலை பார்த்து வந்தார். கடந்த ஆக.17-ம் தேதி மர்மமான முறையில் சுரேஷ்குமார் … Read more

திமுக ‘மகளிர் உரிமை மாநாடு’ | சென்னை வந்த சோனியா காந்தி, பிரியங்கா காந்தி: முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார் 

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமை மாநாடு இன்று நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சென்னை வந்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு புத்தகம் வழங்கி வரவேற்பு அளித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது அமைச்சர்கள் நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், கீதா ஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் … Read more

‘பழநியில் மண் திருட்டை தடுத்த கிராம நிர்வாக அலுவலர்களை கொல்ல முயற்சி’ – போலீஸில் புகார்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி கிழக்கு ஆயக்குடியில் மண் திருட்டை தடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர் உட்பட 3 பேர் மீது கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழநி அடுத்துள்ள கிழக்கு ஆயக்குடி கிராமம் பொன்னிமலை சித்தர் கோயில் அருகே இன்று (அக்.13) காலை சட்டவிரோதமாக மண் திருட்டு நடப்பதாக புகார் வந்தது. இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) கருப்புசாமி, உதவியாளர் மகுடீஸ்வரன், வருவாய் ஆய்வாளர் இலாகி பானு ஆகியோர் … Read more

ஒரே நாளில் ரூ.31.30 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு: தமிழக அரசு தகவல்

சென்னை: கரூர், ஈரோடு, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 3 கோயில்களுக்கு சொந்தமான ரூ.31.30 கோடி மதிப்பீட்டிலான நிலங்கள், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: கரூர் மாவட்டம், கரூர், அருள்மிகு கல்யாண பசுபதீசுவர சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான தோரணக்கல்பட்டியில் அமைந்துள்ள 7 ஏக்கர் 51 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. கரூர் மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்ற உத்தரவின்படி, கரூர் மாவட்ட உதவி ஆணையர் … Read more

அக்.16 முதல் தமிழகத்துக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

டெல்லி: அக்டோபர் 16-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் வெள்ளிக்கிழமை காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 26-வது கூட்டம் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவேரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம், உறுப்பினர் எல்.பட்டாபி ராமன், உதவி … Read more

சிறுபான்மை மாணவர்களுக்கான அனைத்து கல்வி உதவித் திட்டங்களையும் மீண்டும் அமல்படுத்த மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: சிறுபான்மை மாணவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்து கல்வி உதவித் திட்டத்தையும் மீண்டும் அமல்படுத்திட வேண்டும் என மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டம், மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் சென்னையில் 2023 அக்டோபர் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் உள்ளிட்டு … Read more

“சாமானிய மக்களை பாதிக்கும் வாகன வரி உயர்வை தமிழக அரசு கைவிட வேண்டும்” – தமாகா

சென்னை: “வாடகை வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் வரியை அரசு அதிகரித்திருக்கக் கூடாது. தமிழக அரசின் வாகன வரி உயர்வு சாமானிய மக்களின் சொந்த வாகனம் வாங்கும் கனவை கலைக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, வாகன வரி வியர்வை அரசு கைவிட வேண்டும்” என்று தமிழ் மாநில காங்கிரஸின் இளைஞர் அணித் தலைவர் எம்.யுவராஜா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளும் திறனற்ற திமுக அரசு ஆயிரம் ரூபாயை சில லட்சம் பெண்களுக்கு மட்டும் … Read more

கேரள லாட்டரி ரூ.25 கோடி: திருப்பூர் நபர்களுக்கு ஒரு மாதத்துக்குப் பிறகு கிடைத்த பரிசு தொகை

கேரள லாட்டரியில் த25 கோடி ரூபாய் பரிசுத் தொகை திருப்பூரைச் சேர்ந்தவர்களுக்கு விழுந்த விவகாரத்தில் இன்னும் ஒரு மாத்ததுக்குப் பிறகே பரிசு தொகை பெற்றுள்ளனர்.   

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் அக்.20 வரை நீட்டிப்பு 

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 20-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டிப்பது இது 8-வது முறையாகும். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அவரது கைது சட்டப்படியானது என உச்ச நீதிமன்றம் … Read more

காலை உணவுத் திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த விரிவான ஆய்வு: ஐகோர்ட்டில் அரசு தகவல்

மதுரை: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அனைத்துப் பள்ளிகளுக்கும் கொண்டு செல்வதற்காக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் நிநிநிலையைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் இனிவரும் காலத்தில், இத்திட்டத்தை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரேசில் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,”மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த நான், மீனவ மக்களின் கல்வி, வளர்ச்சி மற்றும் வாழ்வாதரப் பணிகளில் … Read more