முஸ்லிம் கைதிகள் முன்விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் – பழனிசாமி கடும் வாக்குவாதம்

சென்னை: முஸ்லிம் கைதிகள் முன்விடுதலை தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில் உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு முதல்வர் பதில் அளித்து பேசினார். அப்போது நடந்த வாதம்: முதல்வர் ஸ்டாலின்: முஸ்லிம் கைதிகள் முன்விடுதலை குறித்து மிகுந்த அக்கறையுடன் பேசும் எதிர்க்கட்சி தலைவர், 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபோது இந்த விஷயத்தில் கண்ணை மூடிக்கொண்டு இருந்தது ஏன்? எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் விடுதலையை, அதிமுக ஆட்சியில் … Read more

மாநிலங்களின் கருத்துகளை ஏற்று தேசிய கல்விக்கொள்கை திருத்தியமைக்கப்படும்: மத்திய இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் தகவல்

சென்னை: மாநில அரசுகளின் கருத்துகள் பெறப்பட்டு தேசிய கல்விக்கொள்கை திருத்தி அமைக்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்தார். மத்திய கல்வித் துறை அமைச்சகத்தின்கீழ் வரும் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐடிடிடிஆர்) சென்னை தரமணியில் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டமைப்பு வசதிகளை மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பேசும்போது, “தேசிய கல்விக்கொள்கை-2020 கல்வியில் தொழில்நுட்பம், … Read more

வணிகர்களுக்கான ‘சமாதான்’ திட்டம் அறிமுகம்: ரூ.50,000 வரை வரி, வட்டி, அபராதம் தள்ளுபடி – முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்

சென்னை: வணிகர்கள், நிறுவனங்கள் வணிகவரி நிலுவை தொகையை செலுத்த புதிய அணுகுமுறை, கூடுதல் சலுகைகளுடன் கூடிய ‘சமாதான்’ திட்டத்தை சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்படி, ரூ.50 ஆயிரத்துக்கு குறைவான வரி, வட்டி, அபராதம் நிலுவையில் இருந்தால், அத்தொகை முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். மற்ற வணிகர்கள் குறிப்பிட்ட சதவீத தொகையை செலுத்தி வழக்கில் இருந்து விடுவித்துக்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக … Read more

‘ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைவிரல் ரேகை பதியத் தேவையில்லை’’ – அமைச்சர் விளக்கம்

சென்னை: ரேஷன் கடைகளில் பொருள்கள் பெற அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும் கைவிரல் ரேகை பதியத் தேவையில்லை என அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி விடுத்துள்ள அறிக்கையில், “ஒன்றிய அரசு வழங்கும் அரிசியைப் பெறும் குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களைப் புதுப்பிக்க ekyc (இணைய வழியில் உங்கள் நுகர்வோரை அறிந்து கொள்ளுங்கள்) என்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி குடும்ப அட்டையிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் பொது விநியோகத் திட்ட … Read more

“தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் இன்னும் சூடு பிடிக்கவில்லை” – அண்ணாமலை

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் இன்னும் சூடு பிடிக்கவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்று (அக். 10) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தது. “தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு தேர்தலுக்கு எங்களை தயார் செய்து கொள்கிறோம். அனைத்து தொகுதிகளுக்கும் மத்திய அமைச்சர்கள் வருவார்கள், பார்வையிடுவார்கள். குறிப்பிட்ட 9 தொகுதிகள் என தனிக் கவனம் இல்லாமல் அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் கவனம் செலுத்துவோம். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் பல … Read more

தனியாரை காட்டிலும் அரசு மருத்துவமனைகளில் அதிக பிரசவம்: தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் தகவல்

மதுரை: தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டில் தனியார் மருத்துவமனைகளை காட்டிலும் அரசு மருத்துவமனைகளில் கடந்த ஆண்டு அதிக பிரசவம் நடந்துள்ளது. மொத்த 9 லட்சம் பிரசவங்களில் அரசு மருத்துவர்கள் 5.5 லட்சம் பிரசவங்களை பார்த்துள்ளனர். தனியார் மருத்துவமணைகளில் 3.5 லட்சம் பிரசவங்கள் மட்டுமே நடந்துள்ளது. கடந்த காலத்தில் கிராமங்கள், நகரங்கள் வித்தியாசமில்லாமல் வீடுகளில் பிரசவம் பார்க்கும் நிகழ்வுகள் மிக சாதாரணமாக நடந்தன. அதனால், வெளிச்சத்திற்கு வராத தாய், சேய் உயிரிழப்புகளும் அதிகம் நடந்தது. அதை தடுக்க, தற்போது … Read more

மதுரை | தமுக்கம் மைதானத்தில் 12-ம் தேதி முதல் புத்தகத் திருவிழா

மதுரை: மதுரை தமுக்கத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 12-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை ‘புத்தகத் திருவிழா’ நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 12-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையில் ‘புத்தகத் திருவிழா – 2023’ நடைபெறவுள்ளது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் … Read more

கோவை | மார்பக புற்றுநோயை கண்டறிய அக்.12, 13-ல் அரசு மருத்துவமனையில் இலவச பரிசோதனை முகாம்

கோவை: மார்பக புற்றுநோயை கண்டறிய அக்டோபர் 12, 13-ம் தேதிகளில் இலவச பரிசோதனை முகாம் நடைபெற உள்ளதாக கோவை அரசு மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “நம் நாட்டில் தற்போது மார்பக புற்றுநோய் அதிகளவில் பெண்களை பாதிக்கிறது. இதனை தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்தலாம். கோவை அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட மார்பக புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். புற்றுநோய் அறிகுறி உள்ள பெண்கள், … Read more

பணி நிரந்தரம் கோரி சென்னையில் போராடிய செவிலியர்கள் கைது: மார்க்சிஸ்ட், தேமுதிக கண்டனம்

சென்னை: பணி நிரந்தரம் செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டுள்ள செவிலியர்களை உடனடியாக விடுவிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவ தேர்வு ஆணைய தேர்வில் தேர்ச்சி பெற்ற செவிலியர்கள், கடந்த அதிமுக ஆட்சியின் போதே தங்களை நிரந்தரம் செய்ய கோரிக்கை வைத்து போராடி … Read more